Thursday, August 5, 2010

பாதுகாப்பு நமக்கும் நம் குழந்தைகளுக்கும் ...

      கனவுகளுடன் கற்பனைகளுடன் குழந்தைகளை ஆசை ஆசையாய் பள்ளிக்கு பெற்றோர்கள் அனுப்புவதை பார்க்கும்  போது நமக்கு இளமை திரும்புவது போல் இருக்கிறது. காலையில் எழுந்து தன் பிள்ளைக்கு பணிவிடைகள் செய்து அவர்களை அழைத்து வந்து , வகுப்பு ஆசிரியர் வரும் வரை காத்திருந்து, அவனது நேற்றைய வீட்டு பாடம் குறித்து பேசி, அவனின் நிறைகளில் மகிழ்ந்து, குறைகள் கலைக்க ஆசிரியரிடம் முயற்சி எடுக்க சொல்லி, ஆனந்தம்  அடைந்து செல்லும் பெற்றோர்கள் , தாம் படிப்பதாகவே உணர்கின்றார்கள்.


     ஆனந்தமாய் ரசித்து ,  அவர்களின் சந்தோசத்தை அதிகரிக்க ஆசிரியர்களை நன்றாக கவனித்து சொல்லி கொடுங்கள் என்று சொல்லும்போது , என் குழந்தையை  படிக்க வைப்பது போன்ற உணர்வு. ஒவ்வொரு  ஆசிரியரும் தம்மிடம் பயிலும் குழந்தைகளை தம் குழந்தைகளாக நினைத்து , பாடம் கற்றுத் தந்தால் , பிரம்பு தூக்கும் வேலையும் , வார்த்தைகளினால்  மனதில் வலியினை ஏற்படுத்தும் தன்மையும் மறைந்து போகும்.
இடைநிறுத்தம் என்பதும் குறைந்து போகும்.

         காலை பொழுதினை பெற்றோர்களின் வருகையால் மன நிறைவுடன் கழிப்பதால் , என்றும் நான் இளமையாய் இருப்பதாகவே உணர்கின்றேன். நீங்கள் உங்கள் மனதிற்கு பிடித்த எந்த ஆசிரியரையும் நீண்ட நாளுக்கு பின் பார்த்தாலும் அவர் அப்படியே இளமை குறையாமல் இருப்பதாகவே உணர்வீர்கள். அதற்கு காரணம் , ஆசிரியர்களாகிய நாங்கள் என்றும் இளையவருடன் பழகுவதாலும், என்றும் நிறைகளுக்காக போராடுவதாலும், மனம் மகிழும் கதைகளை ரசித்தது மாணவர்களுக்கு சொல்வதாலும், குழந்தை மனதுடனே இருப்பதாலும், எந்தவித டென்சனும் அட்படுத்தாமல் இருக்க மாணவர்கள் செய்யும் அனைத்து சேட்டைகளையும் மனநிறைவுடன் ரசிப்பதாலும், உண்மையான கோபமின்றி , அன்பாய் மாணவனை திருத்துவதாலும் இளமையாகவே இருக்கிறோம்.
தருமி ஐயா அவர்களை பாருங்கள் இளமை ,என்னுடன் போட்டி போடுகிறது. அவர் என்றும் மாணவர் பக்கம் இருந்து ,தோழமை உணர்வுடன் மாணவனுடன்  மாணவனாகவே கல்லூரியில் உலாவுவதால் , என்றும் இளமை மாறாமல் இருக்கிறார்.


                இன்றும் காலையில் அதே துள்ளலுடன் மகிழ்ச்சியாக வழக்கம் போல் ஒன்றாம் வகுப்பு   மாணவர்களை பார்வையிட சென்றேன். அப்போது வகுப்பு ஆசிரியர் ஒரு பெற்றோருடன் பேசி கொண்டு இருந்தார் .  நானும் வழக்கம் போல் , விசாரிக்க சென்றேன்,எனக்கு துக்கம் தொண்டை அடைத்தது. அழுகின்ற பெற்றோருக்கு எத்தனை வார்த்தைகள் சொன்னாலும் , அந்த வலி  ஆறாது.

             "சார், இவங்க போன வாரம் கோவில் திருவிழாவுக்கு ஊருக்கு போனாப்ப  ...போன இடந்தில பாம்பு இவங்க இரண்டாவது பையனை கடித்து ,அவன் இறந்து விட்டான். ..."

        "சார்...அவனும் அக்காவோட பள்ளிக்கூடம் போகணும்ன்னு சொன்னான்...."

"ஆமாம்...சார்,,,போன வராம் என்னிடம் வந்து அவனை இவளுடன் அனுப்புகிறேன் ....நான்கு வயசு தான் ஆகிறது...இருந்தாலும் படிக்க ஆசை படுகிறான்....ஒரு வாரம் ஆவலுடன் பள்ளிக்கு வர அனுமதி கேட்டார்...."

"சார்....என்புள்ள ஆசை ஆசையா ஸ்லுக்கு வர ஆசைப்பட்டான்...இருந்தாலும் கொடுத்து வைக்கல....ரோட்ட கிராஸ் தான் செஞ்ஞான்....அதுக்குல்ல்ல...ஒரு குட்டி பாம்பு ..தாண்டி போன மாதிரி தெரிஞ்சது....அதுகுள்ள நூரை தள்ளி ....”என அழுகத் தொடங்கினார்.

ஆறுதல் சொல்ல வார்த்தைகள் தேடினாலும் கிடைக்க வில்லை. .இருப்பினும்...”சரி வ்டுங்க அண்ணே...நமக்கு கொடுத்து வச்சது அவ்வளவு தான்.... இந்த பொம்பளைப்பிள்ளையாவது நல்லா...படிக்க வைங்க....” என அவரை சாமாதனப்படுத்தி அனுப்பினேன்.


    பெற்றேர்கள் தங்கள் குழந்தைகளை கவனமாக வளர்க்க வேண்டும்..தோட்டம் , கம்மாய், ஏரி, மற்றும் வயல் சார்ந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது , இது போன்று துர் நிகழ்ச்சி நடக்காத வண்ணம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
    
வெட்ட வெளியில் படுத்து உறங்கும் போது பாதுக்காப்பான இடமாக இருக்கிறதா தெளிவாக அறிந்த பின் படுக்கவும். டார்ச் வைத்துக் கொள்ள வேண்டும்.

சூ , சாக்ஸ் நன்றாக தட்டி, உதறிய பின் தான் அணிய வேண்டும். வெகுநாளாகிய புத்தகப் பைகளை நன்றாக பரிசோதித்த பின் மாணவனுக்கு கொடுக்கவும்.

   வீட்டுக்கருகில் உள்ள தண்ணீர் தேங்கும் இடங்களில் குப்பைகள் சேர விடக் கூடாது.அவ்வப்போது சேரும் குப்பைகளை உடனே எடுத்து , உரிய இடத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.பள்ளி வாளகத்திலும் இதே நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

     உணவுப் பாத்திரங்களை மூடி வைக்கவேண்டும். தண்ணீர் குடம், தொட்டிகளை மூடு , பாதுகாத்து, அவற்றை சூடுபடுத்தி அல்லது சுத்திகரித்து குடிக்க பயன் படுத்த வேண்டும்.
  
    மாண்வர்களை தம் உடையை உடுத்தும் போது , அவற்றை நன்றாக உதரி , பூச்சி எதுவும் ஓட்டி உள்ளதா என சரிப்பார்த்து உடுத்த செய்யவும்.


    விளையாடி வீட்டுக்கு வரும் குழந்தையை நாம் கை , கால் கழுவிய பின்புதான் உணவு உண்ணச் செய்ய வேண்டும்.

            தயவு செய்து கனவுகளுடன் வாழும் பெற்றோரே , பாதுகாப்பு நமக்கும் நம் குழந்தைகளுக்கும் அவசியமான ஒன்று என்பதை உணர்ந்து செயல் பட வேண்டும்....

        

3 comments:

கோவி.கண்ணன் said...

//ஆறுதல் சொல்ல வார்த்தைகள் தேடினாலும் கிடைக்க வில்லை. .இருப்பினும்...”சரி வ்டுங்க அண்ணே...நமக்கு கொடுத்து வச்சது அவ்வளவு தான்.... இந்த பொம்பளைப்பிள்ளையாவது நல்லா...படிக்க வைங்க....” என அவரை சாமாதனப்படுத்தி அனுப்பினேன்.//

இன்னும் கொஞ்சம் மாற்றிக் கூடச் சொல்லி இருக்கலாம். 'உங்கப் பையன் எங்கேயும் போய்விட வில்லை மறுபடியும் உங்க வயித்தில பொறப்பான்' என்று சொல்லி இருக்கலாம், குடும்பகட்டுபாடு செய்து கொண்டவர்கள் கூட அதனை சரி செய்து கொள்ளும் மருத்துவ வசதிகள் தற்காலத்தில் உண்டு. அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கலாம்.

cheena (சீனா) said...

அன்பின் சரவணன்

என்ன இது கொடுமை - ம்ம்ம்ம் - இடுகையில் எழுத்து இதயத்தின் ஆழத்திலிருந்து வந்திருக்கிறது.

அப்பையனின் ஆன்மா சாந்தியடையட்டும்
பெற்றோரின் துயரம் தீரட்டும்

நல்வாழ்த்துஅKல் சரவணன்
நட்புடன் சீனா

Thenammai Lakshmanan said...

ஆசிரியர்களாகிய நாங்கள் என்றும் இளையவருடன் பழகுவதாலும், என்றும் நிறைகளுக்காக போராடுவதாலும், மனம் மகிழும் கதைகளை ரசித்தது மாணவர்களுக்கு சொல்வதாலும், குழந்தை மனதுடனே இருப்பதாலும், எந்தவித டென்சனும் அட்படுத்தாமல் இருக்க மாணவர்கள் செய்யும் அனைத்து சேட்டைகளையும் மனநிறைவுடன் ரசிப்பதாலும், உண்மையான கோபமின்றி , அன்பாய் மாணவனை திருத்துவதாலும் இளமையாகவே இருக்கிறோம்.//

மிக அருமையான ஆசிரியர் நீங்கள் சரவணன்.. என் தமிழம்மா எம் ஏ சுசீலா அவர்களைப் போல்..

ஆனால் இந்த துயர சம்பவம் மனதை பாதித்து விட்டது.. நீங்கள் கூறீய அறிவுரை ஒவ்வொன்றும் மு்த்து

Post a Comment