கால்வயிறு கஞ்சிக்கு ...
காசுகளுடன் அவன்
கால் கடுக்க வரிசையில்
கிடைக்குமோ கிடைக்காதோ ...
காக்கிகள் கண்டு
காந்தியும் பதுங்குகிறது....
கால்வயிறும் காயும் என்று ...
"இன்னைக்கு சுதந்திரதினம்"
தெரியுமில்லை...
காந்தி சிரிக்கிறார் ரூபாய் நோட்டில்...
காக்கியும் காவல் காக்கிறது....
அவனுக்கும் சுதந்தி ரம் கிடைத்தது...
வற்றிய முலைக்காம்பு திணித்து
கதறும் குழந்தையின் அழுகை நிறுத்தி...
கொதிக்கிறது உலை ...
எப்போதும் போல் ....
கால்கள் ஊன்றாமல்
கட்டிய வேட்டி நிற்காமல்
கைகள் ஊண்டி
வாய்கள் உளறி...
தள்ளாடி விழுகிறான்
அவள் மேல்...
வீரிட்டு அழும் குழந்தை...
காதல் கணவனை பிரிந்து
பக்கத்து மாமாவிடம்
பால் உறுப்புக் கொடுத்து
வழக்கம் போல் குழந்தைக்கு
பால் வாங்கி நிறுத்தினால்
அழுகையை....
அவள் மட்டும் அழுதுகொண்டு...!
1 comment:
”ம்ம் வீரியமான வார்த்தைகள் ஆனா “பக்கத்து மாமாவிடம்
பால் உறுப்புக் கொடுத்து
வழக்கம் போல் குழந்தைக்கு
பால் வாங்கி” ஆனா இந்த வார்த்தைகள தவிர்திருக்கலாம்னு தோணுது.. ஏன்னா அந்த பெண்ணோட கண்ணியம் களங்கபடுதோனு நினைக்கிறேன்......
Post a Comment