Saturday, August 21, 2010

மரண ஓலங்கள்

இரத்தம் சுவைக்கிறது 
சாலை ....
பாரு ...!
பார் செய்த மாயம் பாரு !

காலை
டாட்டா காட்டி
இன்முகத்துடன்
அனுப்பிவைத்தால்
மங்கயற்கரசி ...
மாலை
மயக்கத்துடன்
சாலை பயணம்
சாவில் முடிந்தது ...!

இவன் நல்லவன் தான்
குடிக்கவில்லை ...
இருந்தாலும்
குடி முழ்கிவிட்டது...
குடித்தவன் எதிரில் வரும் போது
நல்லவன் கெட்டவன்
வேண்டியவன் வேண்டாதவன்
விரும்பியவன் விரும்பாதவன்
என்பதில்லை
அனைவருக்கும் எமன் அவனே...!

எமன் தர்பாரில் வாழ்த்துமழை
தமிழக அரசுக்கு...
பார்... பார் ...பார்
எமன் வேலை செய்யுது பார் ..!

கட்டிய மனைவி  தூக்கி எறிய
கதுறும்  குழந்தை
கண் முன்னே ...
இரத்தம் ஒழுகி
கை நசுங்கி
கால் ஒடிந்து
தலை சாய்ந்து
கனவுகள் கசிந்து
கரம் பிடித்த மனைவி
கை நழுவி
கண் எதிரே
அகோரமாய் சாகிறான்
விதிகள் மீறாமல்
வீதி ஏறி வந்த அவனுக்கு ..
விதி வந்தது
அரசு பாரிலிருந்து
வந்தவனின் காரிலிருந்து ...!


5 comments:

Maduraimohan said...

வார்த்தைகளில் தெரிகிறது வலிகள் :)

ஹேமா said...

நம்ம நாடுகளில் வீதிகளில் வித்தைதானே காட்டுகிறார்கள் !

கமலேஷ் said...

ஒ...இது அந்த பார்ரா...
ரொம்ப நல்லா இருக்கு நண்பரே..வாழ்த்துக்கள்..

Thenammai Lakshmanan said...

உண்மைதான் சரவணன்.. சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்த எதிர் வீட்டுக்காரர் இவ்வாறு அடிபட்டு ஆப்ரேஷன் செய்து பிழைத்ததை பார்த்து இருக்கேன்.. அடுத்தவர் தவறும் நம்மை பாதிக்கும்..:((

சுவாமிநாதன் said...

எமன் இரக்கம் அற்றவன்!!!!!!!

Post a Comment