Thursday, August 19, 2010

மாணவர்கள் சாவு தடுப்போம்...

   இன்று பள்ளி செய்திகள் என்றாலே 'மாணவர் சாவு , ஆசிரியர் கைது' என்று வருகிறது. இது ஆசிரியரின் தவறு என்று ஒருவிதத்தில் பார்த்தாலும் , மறுபுறம் நம் சமூக அமைப்பு மாறி வருதலும்  காரணமாக இருக்கிறது. 

    என் நண்பர் வகுப்பில்(பதினொன்றாம் வகுப்பு) மாணவனை திட்டி உள்ளார் .மாணவன் ஒருவன் அருகில் உள்ள மாணவனை தொடர்ந்து படிக்க விடாமல் தடுத்துள்ளான் , அவனை பார்த்த ஆசிரியர்,"என்னடா நீயும் படிக்காம அடுத்தவனையும் படிக்க விடாம விளையாடுற...என கூறிக்கொண்டு  கையால் காதை ஒரு திருகு திருகி இருக்கிறார். அருகில் உள்ள மாணவன் "சார், அடிச்சீங்கில ....விஷம் தான்... நாளைக்கு நீங்க பேப்பர் நியூஸ் தான் .." என கிண்டல் செய்துள்ளான்.

     சமூகத்தில் மீடியா விழிப்புணர்வு ஒருபுறம் பாராட்ட தக்கதாக இருந்தாலும் ,அது தவறாக பயன் படுகிறது.
        
    ஆசிரியர் மாணவர் உறவு நண்பர்களாக இருக்க வேண்டும் என்றாலும் , ஒரு வித மரியாதை அவசியம் தேவை. ஆனால் , அது மாணவன் தர மறுப்பதாலும், ஆசிரியரை ஒரு வித விரும்பத்தகாத தோழனாக கருதுவதால் மோதல் தொடங்கி , ஒரு எதிரியாகவே பார்க்கிறான். அது ஆசிரியரை வம்பில் மாட்டிவிட வேண்டும் என்று நினைத்து பயமுறுத்தலுக்காக தொடங்கும் ,தற்கொலை முயற்சி , முற்றிலும் தற்கொலையாகவே முடிகிறது.

    மாணவர்கள் இன்று உணர்ச்சி வயபட்டவர்களாக உள்ளார்கள். சொல் பொருக்கதவர்களாக உள்ளார்கள்.  மிகவும் வீரியத்துடன் , மனநிம்மதி இன்றி , ஒரு வடிகாலை தேடி ,தன் வயப்பட்டவனாக உள்ளார்கள். மீடியாவின் உதவியால் அனைத்து விசயங்களையும் தெரிந்தவர்களாக உள்ளார்கள். எதையும் சந்திக்க தாயாராக உள்ளார்கள். எதிர்த்து நிற்க (தவறானவைகளுக்கு உடந்தையாக)தாயாராக உள்ளார்கள்.  புதிய தொழில் நுட்பம் அறிந்தவர்களாக உள்ளார்கள்.பால் கவர்ச்சி உடையவர்களாக  உள்ளார்கள்.  அன்பு , பாசம், பரிவு , கனிவு இவைகளுக்கு ஏங்குபவர்களாக இருக்கிறார்கள்.

    பெற்றோர்கள் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக உள்ளார்கள்.. குடும்பம் பற்றி கவலை இருப்பினும் நேரம் இன்மையால் தன் மகன் படிப்பு கூடத் தெரியாதவர்களாக உள்ளார்கள் .எப்போதும் தன் குழந்தைகள் முன் சண்டை போடுபவர்களாக உள்ளார்கள். தான் இழந்த ஒன்றை மீண்டும் பெற தம் குழந்தைகளை பயன்படுத்துபவர்களாக உளார்கள்.எப்போது தொலைக்காட்சி பெட்டி மீது ஆர்வம் கொண்டவர்களாக உள்ளார்கள். குழந்தை படிப்பு மீது அக்கறை இருப்பினும் , இயலாமையால் அதை தர மறுக்கிறார்கள் அல்லது முயற்சிக்கிறார்கள். 

      சமுகம் ஒருவர் மீது ஒருவரை குற்றம் சுமத்துவதாகவும். அருகில் உள்ளவர்களுடன் போட்டி போடுவதாக இருப்பதால் பழிபோட தயாராக இருப்பதாகவும் உள்ளது. தன் குற்றத்தை மறைக்க  தொடர்ந்து தவறுகளை செய்கிறது. இளைய தலை முறைக்கு தவறான கருத்துகளை பரப்புவதாகவும் உள்ளது. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் சவாரி செய்தாவது முன்னேறுவது மிகவும் நன்று எனவும் சொல்லுகிறது.  இரக்கம் என்பது அற்றும் , கொலை, கொள்ளை , வழிப்பறி , கற்பழிப்பு சகஜமாகி போன வாழ்வை கொண்டதாக உள்ளது. தவறுகளை தட்டி கேட்காமல்,கண்முடி செல்லுவதாகவும் . தவறுகளுக்கு உடந்தையாகவு உள்ளது.  வீதியில் நடக்கும் சண்டைகளை வேடிக்கை பார்க்கிறது. தன் குழந்தைக்கும் கற்று தருகிறது.


     கல்வியில் கற்றல் முறைகள் மாறிவந்தாலும் , கற்றல் சூழலில் புதுமைகள் பல வந்தாலும் மாணவனின் மன நிலை சமூகத்தால் பாழ்பட்டு வருவதால்,அவனை மாற்ற ஆசிரியர் கடின முயற்சி எடுக்க வேண்டி இருக்கிறது. சமூக முரண்பாடுகள் மாணவனின் உணர்ச்சிகளை அடக்க கற்று தர மறுத்து விட்டதால், மாணவன் எளிதில் தன் வயப்பட்டு, மோதலில் ஆசிரியருடன் ஆரம்பிக்கிறான், பெற்றோரும் அவனுக்கு துணையாக இருப்பதால், ஆசிரியர் ஒரு நிலையில் தன்னை இழக்க நேருகிறது .எல்லாவித எமோசனல் இன்டளிஜன்ட் களும் மாணவன் மன நிலையில் ஒருவித கசப்பான அனுபவத்தை பாய்ச்சி இருப்பதால் , மாணவன் தன் வயப்பட்டு , தற்கொலை முடிவுக்கு வருகிறார்.

       மாணவர் சாவு என்பது ஒரு ஆசிரியர் மாணவன் பிரச்சினையாக எடுக்காமல் , அதையும் தாண்டி , ஒரு சமூக பார்வையில் நோக்கினால், நாம் அனைவரும் சேர்ந்து நம்மை திருத்தி, நல்ல எதிர்காலம் , வளமையான பாரதம் அமைய இணைவோம், பாடுபடுவோம் .

4 comments:

Unknown said...

samuthaaya sinthanaiudan kudiya utparvai. vallththukkal

மாதவன் said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் பதிவிதள்த்திற்க்கு வருகிறேன். முன்னை விட மெருகேரியிருக்கிறது. வாழ்த்துக்கள்.

http://rkguru.blogspot.com/ said...

nalla pathivu....vazhthukal

Murugeswari Rajavel said...

சரவணன் சார்,
வணக்கம்.ஆசிரிய சமுதாயத்தின் அவலநிலையைப் படம் பிடித்துக் காட்டியது போல் பதிவு செய்துள்ளீர்கள்.
நன்றி!

Post a Comment