Monday, August 16, 2010

கல்விக்கான நல்ல செய்திகள் ....

      கல்விக்கான நல்ல செய்திகள் சில நாட்களாக வரவில்லை .மாணவர் தற்கொலை என்ற செய்தியால் மிகவும் மனம் வருந்தி ஆசிரியர்கள் மனநிலை தான் என்ன என்பதை சிந்திக்க ஆரம்பித்தேன்.

     கை நிறைய சம்பளம் . கஷ்டமில்லலாத வேலை, குழந்தை  மனநிலையில் எதையும் மறக்க செய்யும் மாணவனுடன் பழக்கம், அதிக ரெஸ்ட், நூலக வசதி, படிக்க அதிக நேரம் கிடைக்கும் வேலை , எதையும் செய்து கொடுக்க தயாராக இருக்கும் மாணவன், மகிழ்ச்சியான சூழல்,மாதம் முடியும் முன் அதாவது முப்பத்தி ஒன்றாம் தேதி சம்பளம், அரசு சலுகை , சமூகத்தில் மதிப்பு ..... என கூறிக் கொண்டே செல்லலாம்.  

      பின்பு ஏன் பத்திரிகையில் அடிக்கடி "மாணவன் சாவு ...ஆசிரியர் தப்பி ஓட்டம்.ஆசிரியர் அடித்ததால் மாணவன் தூக்கு ,,, பிரம்பால் மாணவனை அடித்த ஆசிரியர் பெற்றோர் சுற்றி வளைத்து தாக்கு ....ஆசிரியரை கைது செய்ய பள்ளியை முற்றுகை..."


அனைத்திற்கும் ஒரு வரி பதில் ....வேலையில் அற்பணிப்பு  இல்லை .

    கற்றல் இனிமையாக இருக்க ஆசிரியர் தன்னை அற்பணிக்க வேண்டும். இன்று ஆசிரியர் பணி என்பது  தொழில் ஆகி போனது . ஆதலால் , ஆசிரியர்கள் மாத சம்பளம் பெறும் பணியாளர்களாக தம்மை பார்ப்பதால் ,  இதை ஒரு விருப்புடன் செய்யாமல் ஏனோ தானோ என்று செய்வதால் ,கடுப்பெடுத்து, தன் மனக்குறைவை போக்க தன் கோப தபங்களை , விருப்பு வெறுப்பை , தனிப்பட்ட பையன் மீது மதிப்பெண் சம்பந்தபடுத்தி அடிப்பதால் தொடர்ந்து சாவுகள் ஏற்படுகின்றன. 

    ஒட்டு மொத்த ஆசிரியர் சமுகம் என் மீது கல்லெடுத்து எறிய வந்தாலும் , இது தவிர வேறு எந்த காரணமும் மாணவன் மீது அளவுக்கு அதிகமாக காட்டம் காட்டி , மரணம் ஸ்தம்பிக்கும் அளவு கல்வி போகக் கூடியதாக இருக்க முடியாது !


  • ஆசிரியர்கள் பணியின் மீது ஆர்வம் குறைதல் , மாணவனை புரிதல் இன்றி கட்டாய கல்வியை திணிக்க செய்கிறது . அதுவே பின்பு , வலுவாகி , வெறுப்பை  உண்டாக்கி , பிரம்பை வைத்து அடிக்க தூண்டுகிறது.  


  • ஆசிரியர்கள் ஒரு புரிதல் இன்றி மாணவனுடன் கொள்ளும் உறவு , தொடர் விரிசலை உண்டாக்கி , அவனை கண்டாலே ஒரு வெறுப்பை உருவாக்கி , மாணவன் மன நிலையை பாதித்து , அவனை தற்கொலைக்கு தூண்டுகிறது 


  • ஆசிரியர்கள் தமக்கு கிடைத்த வாய்ப்பை , சமூக நலன் கருதி , ஒரு வளர்ச்சி பணியாக கொள்ளாமல் , தம் சொந்த நலனுக்கான வளர்ச்சி பணியாக கருதுவதால், பள்ளியில் பாடம் என்பது தேர்வாகி , அத் தேர்வுக்கு தயாராக ஒரு வசதியினை ஏற்படுத்தும் விதமாக மாலை நேர காசு கொடுக்கும் படிப்பினை தொடருவதால், மாணவன் ஆசிரியர் மோதல் காசில் ஆரம்பித்து , சாவில் முடிகிறது.

  • மாணவர்களும் முற்போக்கு சிந்தனை என்று கருதி ஆசிரியர்களுடன்( நன்கு படித்தாலும் , மீடியாவின் உதவியால், தம்மை மெருகேற்றி ) கருத்து மோதலில் ஆரம்பித்து  , நீயா நானா என்ற அடிப்படையில் ஈகோ உருவாக்கி , அதுவே அம் மாணவனுடன் மோதல் போக்கை உருவாக்கி , முடிவில் அவன் மனம் பாதிக்கும்  படியாக ஆசிரியர்கள் பேச தூண்டுதலாக அமைகிறது .   

 

  • மாணவர்கள் படிப்பின் மீது உள்ள ஆர்வம் , ஆசிரியர் ஒரு தகவலை கூறும் முன் அவ்விசயத்தை தான் சொல்லுதல் மூலமாக தன்னை அடியாளம் காட்ட மாணவன் முயலும் போது ஆசிரியர் மாணவன் மீது கடுமையான கோபத்துக்கு உள்ளாகி , தன்னை அடையாளம் காட்ட , தன் வகுப்பை தன் கட்டுக்கும் வைக்க பிரம்பை எடுப்பதாலும் , மாணவன் தன் மனநிலை பாதிக்க படுகிறான். 

 

  •  அதிகாரிகள் , நிர்வாகிகள் மாணவனின் கற்றல் செய்யலை மதிப்பெண் அடிப்படையில் நோக்குவதாலும் , ஆசிரியர்கள் மாணவன் குறைந்த பட்ச அடைதல் அதாவது ஜஸ்ட் பாஸ் என்ற நிலை உருவாக்க மாணவன் மீது கடுமையான வார்த்தை பிரயோகம் , அடித்தல் போன்றவற்றை கையாள நேரிடுகிறது. 

  • ஆசிரியைகள் தங்களை ஒரு ஆதிக்க வர்க்க நிலையில் பார்ப்பதும், கல்வி என்பது கரும்பலகையில் கிறுக்கி , ஒன்றாக அமர்ந்து கருத்தை காகிதத்தில் காப்பி செய்து, அதை அப்படியே தேர்வு என்ற கட்டமைப்பின் கீழ் தனியாக அமர்ந்து வேறு ஒரு தாளில் வாந்தி எடுக்க செய்வது .(இதில் புரிதல் , சிந்தித்தல் , கற்பனை செய்தல் , படைப்பு திறன் வெளிபடுத்துதல் இருக்காது )என்ற நிலையில் , மாணவனின் உளவியல் ரீதியான கருத்துகளுக்கு இடம் கொடுக்காதது . மாணவன் எளிதில் உணர்ச்சி வசப்பட்டவனாக மாறி , சொல் பொறுக்காது , தற்கொலை மனநிலையை அடைகிறான்  . 
                    தயவு செய்து ஆசிரியர்கள் நல்ல மனநிலையை உருவாக்கி , தம் பணியில் ஓர் ஆர்வத்தினை உருவாக்கி , நித்தம் தம்மை அப்டேட்   செய்து , மாணவனின் கற்றல் சுழலை இனிமையாக்கி ,மாணவனுடன் ஒரு நல்ல தோழமையை உருவாக்கி , தேர்வையும் தாண்டி , உளவியல் ரீதியான கற்றலை அமைப்போம் என்றால் மாணவன் சாவு என்பது என்றும் இராது.  

5 comments:

புலவன் புலிகேசி said...

அப்பட்டமான உண்மையை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே...

Madhavan Srinivasagopalan said...

//..வேலையில் அற்பணிப்பு இல்லை .//

அப்பட்டமான உண்மையை

தேவன் மாயம் said...

உண்மைதான் சரவணன்!!

Unknown said...

ரொம்ப கரெக்டா சொல்லியிருக்கீங்க.. ஒரு மாணவன் நல்லபடியா உருவாகனும்னா ஆசிரியரோட பங்களிப்பு மிகவும் அவசியம்..

அவங்களோட பொறுப்புகளைக் கரெக்டா உணர்ந்து நடக்கறது தான் மாணவர்களுக்கு பயன் தரும்..

வாழ்த்துக்கள்..

அமைதி அப்பா said...

//அனைத்திற்கும் ஒரு வரி பதில் ....வேலையில் அற்பணிப்பு இல்லை//

நெத்தியடி!

நேரம் கிடைத்தால், இந்த பதிவையும் படித்து பார்க்கவும்.

http://amaithiappa.blogspot.com/2010/08/blog-post.html

Post a Comment