மை அற்ற பந்து முனை பேனா
காற்றில்லா வண்டிசக்கரம்
கரண்டில்லா இலவச டிவி
போன்றே ....
என் பள்ளி படிப்பு !
மின் விசிறியின்
காற்றில் பறக்கும்
எடை வைக்கப்படாத
புத்தக பக்கங்கள் போல்
நிலையில்லாமல்
புரள்கிறது என் வாழ்வும் ...
எடை போட
நல்ல ஆசான் இல்லை
நடை போட்டது படிப்பு
பின்பு ஏது வாழ்வில் பிடிப்பு ..?
தடை போட்டப் பின்பும்
தாங்கிப்பிடிக்க
இல்லை நல்ல ஆசான்
தேங்கி போனது
படிப்பு மட்டும் அல்ல ....
நானும் தான் !
ஏங்கி இனி என்ன ஆவது
என்று தானே தொலைத்தேன்
தொலை தூரக்கல்வி இருத்தும் ..!
தொலை தூரமாய் கல்வி ஆகிப்போனது ...!
பள்ளிகள் முன்பும்
கல்லூரிகள் முன்பும்
காகிதம் பொறுக்கும் போது
கசங்கி போன காகிதத்துடன்
நானும்...
கண்கள் கசக்கி !
அன்றும் இன்றும்
மாணவர்கள் வெள்ளை சீருடையில் ...
பிரம்மாக்கள் பிரம்புடன் ...
கம்பிக் கதவுகளின் ஊடே
குரைத்து தொடரும் நாயுடன் சேர்த்து
என்னையும் துரத்தினான்
வாயிற்காவலன் ...!
4 comments:
முனைந்திருக்கும் எல்கை சமூகத் தேவை
:-(((((((
நல்ல சேதி சொல்லும் கவிதை .
சமூகப் பார்வையுள்ள படைப்பு!
Post a Comment