Saturday, August 7, 2010

பெற்றோர் தம் குழந்தையுடன் செலவழிக்கும் நேரம் ....

     பெற்றோர்கள் தம் குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க ஆசைபட்டாலும் , பாசத்தில் , ஏதாவது தவறும் செய்யும் போது கண்டிப்பதை விட்டு , அவர்களின் தவறுகளுக்கு ஆதரவாக பேசுவது மிகவும் ஆபத்து.
  
       இது பள்ளிகளில் மட்டுமல்ல , கல்லூரிகளிலும் தொடர்கிறது என்பதை நான் இன்று கார்த்திகை பாண்டியனுடன் பேசும் போது அறிந்தேன். ஆர்குட்டில் ஆபாசமாக பேசும் மாணவர்களை கல்லூரி முதல்வர் கண்டிக்க , அதற்கு அவர்கள் பெற்றோர் , இது ஒரு பெரிய விசயமா என சப்பை கட்டு பதில் அளித்தது ,மாணவனின் எதிர்காலத்தை அழிக்கும் பெற்றோரின் நிலை குறித்து வருத்தம் தெரிவித்தார்.

   இன்று தின மலரில் பெற்றோர்களில் தாயார் ஒரு நாளில் தன் குழந்தைக்காக செலவழிக்கும் நேரம் முப்பத்தைந்து நிமிடம் மட்டுமே என்றும் , தந்தை எழு நிமிடங்கள் மட்டும் செலவழிக்கிறார் என்ற தகவல் வருத்தமளிப்பதாக உள்ளது.

    ''மாத, பிதா, குரு , தெய்வம் '' .''தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை''. ''அன்னையும் , பிதாவும் முன்னேறி தெய்வம்'' .''தாயில் சிறந்ததொரு கோவிலும் இல்லை''. என அடுக்கி கொண்டே செல்லலாம். சில பெற்றோர்கள் மிகவும் பொறுப்பாக தம் குழந்தைகள் மீது பாசம் , நம்பிக்கை வைத்து உண்மையான கவனிப்புடன் வளர்ப்பதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. அவர்களின் குழந்தைகளும் சமூகத்தில் ஒரு பொறுப்புள்ள குடிமகனாக உருவாவதை பார்க்க முடிகிறது .

      காலை பள்ளி துவங்கிய போது வந்து ஆசிரியரை சந்தித்து பேசி குழந்தைகளை பள்ளியில் விட்டுச் செல்லுவதுமட்டுமல்லாமல், மாலையும் பள்ளி விடும் முன்பே வந்து , தம் குழந்தைக்காக காத்திருந்து , மீண்டும் ஆசிரியருடன் பேசி அன்பாய் தம் குழந்தைகளுடன் கொஞ்சி , முறையாக வளர்க்கும் பெற்றோர்களை இன்றும் நான் பார்கிறேன்.

    ஆனால் , பலர் ஏன் தம் குழந்தைகளை பாராமரிக்க தவறுகின்றனர். அதாவது, கடனுக்கு பள்ளிக்கு அனுப்புவது  , அவர்கள் படிக்கிறார்களா ? , பள்ளிக்கு செல்கின்றனரா...? எந்த வகுப்புக்கு செல்கிறான் என்பது கூட தெரியாமல் இருப்பதை அறிய வருகிறேன். "சார், இரண்டாம் வகுப்புன்னு தான் அவுங்க அம்மா சொன்னாங்க ...சும்மா பார்க்க வந்தேன் .." என கூறும் தகப்பனை பார்த்திருக்கிறேன் .  "சார், பையன் ரெம்ப சேட்டை செய்கிறான், கொஞ்சம் கண்டுச்சு வைங்க ..."."சரிங்க ...பையன் எந்த ஆசிரியரிடம் படிக்கிறான் ....ஆசிரியரை அழைத்து வாருங்க..." ."அதான் சார், சிவப்பா இருப்பாங்கள் ..." " யாரு , ...."என டீச்சர் பெயரை சொல்லி .. கேட்டால் "சார், பேரெல்லாம் தெரியாது ...அதான் சார் மேல இரண்டாவது வகுப்பு ..." "இல்லையே ..மூன்றாம் வகுப்பில அப்பாடி யாரும் இல்லையே...." "சரி ...வகுப்ப சொல்லுங்க ...." " சார்...மறந்துட்டேன்..நானே போய் பையான குப்பிட்டு வரவா..." என தன் பையனின்   வகுப்பு தெரியாத தாய்மார்கள் அதிகம் .


    இவர்களை விடுங்கள் ... எத்தனையோ மாணவர்கள் தம் பெற்றோர்களை பார்க்காதவர்களாக தம் பாட்டியின் வீட்டில் வளர்கிறார்கள். இரண்டு தாரம் உள்ள அப்பா, அதனால் பிரிந்து வாழும் அம்மாவின் குழந்தைகள், வேறு ஒருவருடன் குடும்பன் நடத்தும் அம்மா,அம்மாவை பிரிந்து வாழும் தந்தை உள்ள குழந்தைகள், அம்மாவும், அப்பாவும் இது போன்று ஓடி விட தந்தையின் பெற்றோருடன் வாழும் குழந்தைகள், இருவரும் இருந்தும் வேலைக்கு செல்வதால் காலை முதல் மாலை எட்டு மணிவரை கவனிப்பாரற்று வளரும் குழந்தைகள் ....என தினமலர் செய்தியை உறுதி செய்யும் தகவல்கள் ....


    நம்மிடம் வரும் குழந்தைகளை நாம் தயவு செய்து விசாரிக்க வேண்டும் ...அப்போது தான் அவனின் தேவைகள் என்ன என்பதை உணர்ந்து நாம் கல்வி கொடுக்க முடியும். பசி  ஏக்கத்தில் உள்ள ஒருவனுக்கு நாம் எப்படி கல்வி கொடுத்தாலும் அது அவன் மண்டையில் பதியாது . ஆசிரியர்களாகிய நாம் நம்மிடம்  பயிலும் குழந்தையின் அடிப்படை தகவல்களை சேகரித்து ,மாணவனின் உளவியல் பிரச்சைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவனுக்கு நாம் கீழ் படித்தல், பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துதல், பொய் பேசக்கூடாது, அடுத்தவர் பொருட்களை  தொடக்கூடாது,அன்றைய பாடங்களை அன்றே முடித்து விட வேண்டும் , நேரம் தவறக் கூடாது . என்பது போன்றே பண்புகளை கற்று அவர்களிடம் இப்பண்புகள்  வளர நாம் தினமும் முயற்சி எடுக்க வேண்டும்.


    தொட்டில் பழக்கம் சுடுகாடு  மட்டும் என்பதால் இளமையில் நாம் அவர்களை நற்பண்புகளுடன் வளர்த்தால் , அவர்கள் நாளை ஆர்குட் சென்று பாலியல் சம்பந்தமான மோசமான வார்த்தைகளில் உரையாடுவதை செய்ய மாட்டார்கள். மேலும் அவாறு தவறு செய்யும் போது பெற்றோர்கள் பொறுப்புடன் வளர்க்க வேண்டும். நான் சொல்வது போல பல பெற்றோர் இல்லாத மாணவர்களை ஆசிரியர்களாகிய நாம் தான் பெற்றோர் போல பொறுப்புடன் வளர்க்க வேண்டும்.
 
       ஆசிரியர் பணி என்பது வெறும் கருத்துகளை, தகவல்களை , அறிவுசார்ந்த விசயங்களை மட்டும் கற்று தருவது என்று எந்த நிலையிலும் கருதி வேலை பார்க்கும் ஆசிரியர்கள் இனியாவது தன் நிலை உணர்ந்து , தம் குழந்தைகளாக மாணவர்களை கருதி உளவியல் அடிப்படையிலான  நல்ல பண்புநலன்களை கற்று தரவேண்டும்.அப்படி பண்புகள் கற்று தருவது தம் கடமை அல்ல, வெறும் சாக்குகட்டிகளை கொண்டு கரும்பலைகையுடன் போராடுவது தான் ஆசிரியர் பணி என்றால் , தயவு செய்து இப் பணியை ராஜினமா செய்து விட்டு , நல்ல தொரு தொழிலில் ஈடுபடவும்.

10 comments:

அமைதி அப்பா said...

மிக அற்புதமானா பதிவு. தொடருங்கள்.

சாந்தி மாரியப்பன் said...

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.. கரெக்டாத்தான் சொல்லியிருக்கீங்க. அருமையான பதிவு..

ஸாதிகா said...

அருமையான பகிர்வு.// ஆசிரியர் பணி என்பது வெறும் கருத்துகளை, தகவல்களை , அறிவுசார்ந்த விசயங்களை மட்டும் கற்று தருவது என்று எந்த நிலையிலும் கருதி வேலை பார்க்கும் ஆசிரியர்கள் இனியாவது தன் நிலை உணர்ந்து , தம் குழந்தைகளாக மாணவர்களை கருதி உலவியை அடிப்படையிலான நல்ல பண்புநலன்களை கற்று தரவேண்டும்.அப்படி பண்புகள் கற்று தருவது தம் கடமை அல்ல, வெறும் சாக்குகட்டிகளை கொண்டு கரும்பலைகையுடன் போராடுவது தான் ஆசிரியர் பணி என்றால் , தயவு செய்து இப் பணியை ராஜினமா செய்து விட்டு , நல்ல தொரு தொழிலில் ஈடுபடவும். //அருமையான வரிகள்.பொன்னெழுத்தில் பொறிக்கப்படவேண்டிய வரிகள்.

ம.தி.சுதா said...

தங்கள் சமூகப் பொறுப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வாழ்த்துக்கள் சகோதரா

ம.தி.சுதா said...

அடடா தங்களின் 100 வது தொடர் வதையனாக ஆனதையிட்டு பெருமிதப்படுகிறேன்

Starjan (ஸ்டார்ஜன்) said...

சரவணன்.. உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன்.., அன்போடு பெற்றுக்கொள்ளுங்கள்..

http://ensaaral.blogspot.com/2010/08/blog-post_07.html

ஜெயந்தி said...

தேவையான கருத்துக்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லா சொல்லி இருக்கீங்க நண்பா.. எப்படியோ மக்கள் புரிஞ்சுக்கிட்டா சரி

Radhakrishnan said...

மிக மிக அவசியமான அத்தியாவசியாமான பதிவு. வலைப்பூ எழுதும் நேரத்தில் கூட குழந்தை புறக்கணிக்கப்படலாம்

Madhavan Srinivasagopalan said...

//இன்று தின மலரில் பெற்றோர்களில் தாயார் ஒரு நாளில் தன் குழந்தைக்காக செலவழிக்கும் நேரம் முப்பத்தைந்து நிமிடம் மட்டுமே என்றும் , தந்தை எழு நிமிடங்கள் மட்டும் செலவழிக்கிறார் //

Very sad..
I will try to spend more time with my kids..

Post a Comment