பெங்களூர் யுனிவர்சிட்டியில் யுனிவர்சிட்டி மைதானம் அருகில் உள்ள ரிஜினல் இன்ஸ்டிடுட் ஆப் இங்கிலிஸ் ஃபார் சவுத் இந்தியா அடைந்தேன். அங்கு சென்றவுடன் தான் தெரிந்தது , இது கர்நாடக, பாண்டிச்சேரி,மற்றும் தமிழ்நாட்டிலும் உள்ள துவக்கப்பள்ளியில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஆங்கில மொழி கற்பித்தலுக்கான பயிற்சி. சுமார் எழுபத்து ஐந்து ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் வெவ்வேறு மாவட்டத்தில் இருந்து வந்திருந்தனர். முதல் நாளிலே நான் அனைத்து ஆசிரியர்களுடனும் ஒன்றி விட்டேன். கார்நாடக மக்கள் அருமையாக நம்முடன் பழகுவதை பார்க்கும் போது காவேரி மட்டும் அரசியல் பிரச்சனை என்பது போல தோண்றுகிறது. மொத்தம் இருநூற்றி பத்துக்கும் மேற்பட்ட மூன்று மாநிலத்தைச் சார்ந்த ஆசிரியர்கள் பயிற்சி பெறுகின்றனர்.
பெங்களூர் என்றவுடன் அம்மக்களின் பொறுமை தான் எனக்கு நினைவில் நிற்கிறது. நான் மாடிவாலா அருகில் உள்ள பிடிஎம் பஸ் ஸாடாண்டு அருகில் ஐநூறு எண் கொண்ட பேருந்தில் யுனிவர்சிட்டி கேட்க்கு டிக்கெட் எடுத்தேன் . நான் செல்லும் வழியெங்கும் டிராபிக் , யாரும் எதற்கும் கோபப்படாமல் , பொறுமையாக அவரவர் புத்தகம் படித்துக் கொண்டும், லேப் டாப்பில் வேலை செய்துக் கொண்டும், காதுகளில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு பாட்டுக் கேட்டுக் கொண்டும் பயனித்தார்கள்.
இதே நம் ஊர் என்றால் யாரும் சிக்னலில் நிற்பதும் கிடையாது, பொறுமையைக் கடைப்பிடிப்பதும் இல்லாமல்,பேருந்தில் பயணிக்கும் நம்மவர் இவங்களுக்கு வேலையே இல்லை என தம் லேக்கல பாஷையில்
திட்டுவதுடன் ஓட்டுனர் (டிரைவர்)நடத்துனர்( கண்டக்டரை) ஒரு வழி செய்திருப்பார்கள். நம்மவரிடம் சிக்னலில் நிற்கும் பொறுமை, சிக்னலை கடைப்பிடிக்கும் பக்குவம் ,பேருந்து ஓட்டுனரை அமைதியாக போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க செய்து ஓட்டச் செய்யும் பக்குவம் இல்லை.
எங்கு சென்று எதைக் கேட்டாலும் உடனே புரியும் படி ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் பதில் கிடைக்கிறது. படித்தவர் , படிக்காதவர் , விவசாயி, கணினி தொழில் நுட்ப வல்லுநர் என பாகு பாடு இன்றி அனைவரும் உடனே உதவுகின்றனர். நமக்கும் புரியும் எந்த மொழியிலும் பதில் அளிக்கின்றனர். ஆனால், சென்னையில் தமிழனாகிய எனக்கே சிலர் பதில் தெரியாது என மழுப்பி நழுவிய சம்பவமும் உண்டு. பிற மாநிலத்தவர்கள் பாவம் என்று தான் தோண்றுகிறது . இதற்கு பின்பு நம் மொழி கொள்கையும் காரணமாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
தமிழ் நாட்டில் நாம் இரு மொழிக் கொள்கையை கையாளுகின்றோம். ஆங்கிலம் மற்றொன்று தமிழ். ஆனால் , கர்நாடகாவில் மும்மொழிக் கொள்கையை பின்பற்றுகின்றனர். ஆகவே, அவர்களுக்கு நாம் கேட்கும் எதையும் புரிந்துக் கொண்டு உடனே பதில் அளிக்கின்றனர். நாம் தமிழ் மீது உள்ள பற்றினால், ஆங்கிலத்தை முறையாக கற்று ,நடைமுறைப்படுத்தாதனால், ஆங்கிலம் தெரிந்தும் நம்மால் நமக்குத் தெரிந்த விடையை வினா எழுப்பியவரிடம் அதனை பகிர்ந்துக் கொள்ள இயலவில்லை.
நாம் தமிழில் கூறினாலும் அவர்களுக்கு புரிய போவதில்லை என்பதால் நாம் சொல்ல தயங்குகிறோம் என்பது என் கருத்து.
தற்சமயம் உடல் நலம் சார்ந்த உபாதைகளுக்காக மருத்துவம் பார்க்க மதுரை வந்துள்ளேன். வரும் திங்கள் முதல் அடுத்த வருடம் ஜனவரி நான்காம் தேதி வரை பெங்களூர் யுனிவர்சிட்டியில் தங்கி யிருப்பதால், பெங்களூரில் உள்ள பதிவர்களை நான் சந்திக்க விரும்புவதால் தயவு செய்து ஒரு சந்திப்பை ஏற்படுத்தலாமே....! காத்திருக்கின்றேன்.
