Thursday, August 25, 2011

கெளதமருடைய சீடர்கள் சிந்தனை எப்போதும் பெளத்த சங்கத்தைப் பற்றியவை


எந்த ஆசிரியனும்
பள்ளி முடிந்த பின்பும்
நேரடியாக வீட்டுக்குச் செல்வதில்லை….
ஆசிரியர் பணி என்பது
பள்ளியுடன் முடிவதில்லை
கற்பித்தலுடன் மட்டுமே முடிவதில்லை
வகுப்பறையுடன் முடிவதில்லை
நம்பித்தான் ஆகவேண்டும்
அன்று மாலை
மாணவர்களை வீடு தேடி
அவர்களின் நடவடிக்கையை அறிய
ஆவலுடன் சென்றேன்….
எல்லா மாணவர்களின் வீடுகளும் அப்படித் தான் இருந்தன..
அழைப்பு மணிக்கு செவி கொடுக்க மறுக்கும் கதவுகள்
திறந்த வீட்டில் நாய் நுழைந்த மாதிரி தான்
ஆனால்
பூனைப் போல பதுங்கிச் சென்றேன்
அனைத்து வீடுகளிலும்
மனிதர்களின் மூளை கபாலப் பெட்டியில் அல்லாமல்
டி.வி பெட்டிக்குள் புதைக்கப்பட்டு இருந்தன
என் வருகையை பதிவு செய்ய
எப்படி முயன்றும் தோற்றுப் போனேன்
விளம்பர இடைவேளையிலும்
குரங்குகளாய் மாறி
தாவி தாவிச் சென்றனர்
நாடகங்களாலும் , சினிமாவாலும்
கைது செய்யப்பட்ட மனங்கள்
வீடுகள் சிறைச்சாலைகளாக மாறியிருந்தன..
என்னுடைய வருகை அவர்களை பாதித்திருக்கவில்லை..
சற்று புன்னகையுடன் என்னையும்
சவப்பெட்டிக்குள் புதைக்கப் பார்த்தார்கள்
மின்சாரம் துண்டிக்கப்பட்ட அத் தருணத்தை
கடவுள் எனக்களித்த வரமாக கொண்டு உரையாடினேன்..
உலர்ந்த சருகுகளைப் போல் என்னிடம் இருந்து பிரிந்து செல்லவே முயன்றனர்
குறைகளில் இருந்து நிறைகளை காண முற்படுகின்றேன்..
பிறர்குறைகளை காண்பது எளிது என்பதால்
என்னை தீயிலிட்டு பொசுக்க முயல்கிறேன்..
தர்ப்பை புல்லை தவறாக இழுத்தவனைப் போல்
காயமுற்று நிற்கிறேன்…
மருந்து தேடி…
நல்லூக்கம் மூலம் நல்வாழ்வு தந்திடவே…
எந்த ஆசிரியனும் பள்ளி முடிந்து வீடு சென்ற பின்பும்
வீட்டில் இருப்பதில்லை…
கெளதமருடைய சீடர்கள் சிந்தனை
எப்போதும் பெளத்த சங்கத்தைப் பற்றியவை
ஆம்
எந்த ஆசிரியனும் எப்போதும் தன் மாணவனைப் பற்றியே
சிந்திக்கிறான்…
நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும்
எந்த அஸ்தமனமும் விடியலை தடுத்து விடுவதில்லை
பாசுரங்கள் போல தன் மாணவன்  அர்த்தமுள்ளவனாக மாறவே
உற்சாகத்துடன் ஒவ்வொரு நாளும் பணியினை தொடர்கிறான்…!

22 comments:

Unknown said...

நல்ல பதிவு நண்பா

தமிழ்வாசி பிரகாஷ் said...

நீங்கள் சிறந்த ஆசிரியர் தலைவரே...

mohamedali jinnah said...

அருமை ,மனதிற்கு அமைதி. வாழ நல் வழி கண்டவர்கள் ,காண்பிந்தவர்களில் பலர். நாம் வசிக்க முயன்று நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்கின்றோம் .அரசியல் பாடம் நான் கல்லூரியில் படித்தவன் அது படிக்க. இப்பொழுது அரசியல் அயோக்கியர்களின் உறைவிடமாக மாறிவிடுமோ! என்ற பயம் .கடமையினை நாம் செய்வோம் மற்றதை இறைவனிடம் விட்டுவிடுவோம். நமக்கு சமைக்கத் தெரியாது ஆனால் சமைத்ததை ருசி பார்க்கத் தெரியும். அட்சியின் அவசர கோலத்தினாலும் , சுயநல கும்பலினாலும் நாம் அடைந்த துன்பங்களை நாமும்,படித்தவரும் படிக்காதவரும் பாமரரும் அறிந்து செயல்படுவர். முன்பு பிரெஞ்சு புரட்சி, ருஷ்ய புரட்சி தற்பொழுது அரபு நாடுகளில் மறுமலர்ச்சி புரட்சி . எல்லாம் நன்மைக்கே.

Philosophy Prabhakaran said...

தல... என்னாச்சு...? யார் வீட்லயும் காப்பி தண்ணி போட்டு தரலையா...? இவ்ளோ ஃபீல் பண்ணியிருக்கீங்க...

Philosophy Prabhakaran said...

just a joke... dont take it serious...

சத்ரியன் said...

//அனைத்து வீடுகளிலும்
மனிதர்களின் மூளை கபாலப் பெட்டியில் அல்லாமல்
டி.வி பெட்டிக்குள் புதைக்கப்பட்டு இருந்தன//

கவிதையாய் ஒரு சிறுகதை. உங்களிடம் பயிலும் மாணவர்கள் எதிர்க்காலத்தில் உன்னதமடைவார்கள்.

சங்ககிரி சிவா said...

Dear Saravanan,

Nice blogs, I am regular reader of your blogs. Recently I read few articles about the early education. I would like to send the articles to you. I hope it will be very use to people like you to serve better for students. Please send a email to psiva102@gmail.com.

These are the titles and abstract:

1. Giving Children a Head Start Is
Possible—But It’s Not Easy


2. Past Successes Shape Effort To Expand Early Intervention.
Three longitudinal studies have demonstrated the lasting value of high-quality early
education. So why isn’t it offered to all children who need it

3. A Passion for Early Education

4. R E V I E W: Early Interventions Shown to Aid Executive Function Development in Children 4 to 12 Years Old, Adele Diamond and Kathleen Lee
To be successful takes creativity, flexibility, self-control, and discipline. Central to all those are executive functions, including mentally playing with ideas, giving a considered rather than an impulsive response, and staying focused. Diverse activities have been shown to improve children’s executive functions: computerized training, noncomputerized games, aerobics, martial arts, yoga, mindfulness, and school curricula. All successful programs involve repeated practice and progressively increase the challenge to executive functions. Children with worse executive functions
benefit most from these activities; thus, early executive-function training may avert widening achievement gaps later. To improve executive functions, focusing narrowly on them may not be as effective as also addressing emotional and social development (as do curricula that improve executive functions) and physical development (shown by positive effects of aerobics, martial arts, and yoga).

Early Childhood Mathematics Intervention
Douglas H. Clements* and Julie Sarama*
Preschool and primary grade children have the capacity to learn substantial mathematics, but many children lack opportunities to do so. Too many children not only start behind their more advantaged peers, but also begin a negative trajectory in mathematics. Interventions designed to facilitate their mathematical learning during ages 3 to 5 years have a strong positive effect on these children’s lives for many years thereafter.

வேலன். said...

ஒரு நல்லாசிரியர் கிடைப்பது மிக அரிது.உங்கள் மாணவர்களுக்கு அது கிடைத்திருக்கிறது.
வாழ்க வளமுடன்.
வேலன்.

கடம்பவன குயில் said...

குடும்பத்தில் தலைவன் தலைவி குழந்தைகள் அனைவரும் சீரியல் அடிமைகளாய் ஆகி குழந்தைகளின் குணநலன்கள் படிப்பு எதையும் கவனிக்காமல் ரோபோக்களாக மாறிவிட்டார்கள். குழந்தைகள் பள்ளியில் சீரியல் கதையை பேசுவதையும் நான் கவனித்திருக்கிறேன்.

வீட்டுக்குள் மக்கள் தெரிந்தே அனுமதித்த ஆபத்தான மகிழ்ச்சி கொல்லி தொலைக்காட்சி.

Unknown said...

அட்டகாசமான பகிர்வுக்கு நன்றி நண்பா!

MANO நாஞ்சில் மனோ said...

சூப்பர்ப் பதிவு மக்கா.......!!!

G.M Balasubramaniam said...

எல்லோரும் சரவணன் போல் நல்லாசிரியராக இருந்தால்
நன்றாக இருக்கும். எல்லா ஆசிரியர்களும் கௌதம புத்தரின் சீடர்கள் போல் இல்லை என்பதுதானே உண்மை. நம்பிக்கைகள் நல்லதுதான். வழி காட்டி சரவணனுக்கு என் வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

குட் ஷேர்

virutcham said...

உங்களை நம்புகிறோம். எந்த ஆசிரியனும் என்று சொல்வதை அல்ல.
உங்களைப் போல் ஒரு சில ஆசிரியர்கள் இருப்பதற்காகவே
மாதா பிதா குரு தெய்வம் என்பதை பிள்ளைகளுக்கு திரும்பத் திரும்ப சொல்லித் தரலாம்.
நன்றி

Chitra said...

ஒவ்வொரு பதிவிலும் தனித்து விளங்குகிறீர்கள்.

arasan said...

ஏக்கத்தை தாக்கத்துடன்
கூறி இருக்கின்றீர் ..
வாழ்த்துக்கள்

Anonymous said...

''..மனிதர்களின் மூளை கபாலப் பெட்டியில் அல்லாமல்டி.வி பெட்டிக்குள் புதைக்கப்பட்டு இருந்தன/நாடகங்களாலும் , சினிமாவாலும் கைது செய்யப்பட்ட மனங்கள்/என்னையும் சவப்பெட்டிக்குள் புதைக்கப் பார்த்தார்கள்/உலர்ந்த சருகுகளைப் போல் என்னிடம் இருந்து பிரிந்து செல்லவே முயன்றனர்/அர்த்தமுள்ளவனாக மாறவேஉற்சாகத்துடன் ஒவ்வொரு நாளும் பணியினை தொடர்கிறான்…''.....
மிக அருமையான பதிவு. உங்கள் ஆத்மார்த்த சேவை மனப்பான்மை புரிகிறது. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

Unknown said...

// விளம்பர இடைவேளையிலும்

குரங்குகளாய் மாறி …

தாவி தாவிச் சென்றனர்

நாடகங்களாலும் , சினிமாவாலும்

கைது செய்யப்பட்ட மனங்கள்//

மேலே சொல்லப்பட்ட வரிகள்
உள்ளங்கை நெல்லிக் கனி போல உண்மை
வரிகள் தோழரே!
வாழ்த்துக்கள்

புலவர் சா இராமாநுசம்

தனிமரம் said...

Manathaik kudaiyum kavithai. Enna saivathu ippa tv magam kudu vitathu.

virutcham said...

நர்சரி குழந்தைகளின் மேல் அரங்கேறும் கல்வி வன்முறை
http://www.virutcham.com/2011/07/நர்சரி-குழந்தைகளின்-மேல்/

ஒரு ஆசிரியர் என்ற முறையில் இதைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

Agarathan said...

மிக அருமையான பதிவு

ரிஷபன் said...

தர்ப்பைப் புல்லை தவறாக இழுத்தவனைப் போல்

கவிதை ஆசிரியனின் தவிப்பை அழுத்தமாய் கொண்டு வந்திருக்கு

Post a Comment