கனவென்னக் கனவோ
எனத்தான் நினைத்தேன்
கண் விழிக்காத வரை…
கண் மூடி தூங்க முடியாமல்
எத்தனைப் பேர்
எனவே
கண் மூடி காண்கின்றேன்…
காணி நிலம் வேண்டி
வில்லங்கம் இல்லாமல்
அதுவும்
நில அபகரிப்பு இல்லாமல்….
முண்டாசு கட்டிய பாரதியாய்
முறுக்கு மீசையுடன்
அன்னஹசாரேயுடன்
கை கோர்த்து
ஊழலுக்கு எதிராக பாடிடவே
நானே பாரதியாய் மாறிடவே
கனவென்ன கனவோ
நகரா ரேசன் அரிசி வேண்டி
”அ” இல்லாத
நியாய விலை கடைகளில் …
உயர உயரப் பறக்கும்
பட்டத்தினை தரை யிரக்கவே
முடியாமல்…
பட்டாம் பூச்சியாய் மாறி
பறந்து பார்க்கிறேன்
விலைவாசி என்று எழுதிய பட்டத்தினை…
இறக்கையின் வண்ணத்தை
விலைவாசியில் கொட்டிடவே
பட்டம் தானாக இறங்கியது….
டேங்க நிரப்பி வை
பெட்ரோல் விலை
ஏறப் போகுதாம் …
என கூவியே
விழிக்க செய்தாள்
அம்மா…!
13 comments:
அந்த “அ “ யார்?--அவர்தானா..? அதாவது நான் நினைக்கும் “ அ” வா?--அல்லது நீங்க நினைக்கும் அ--வா?--அல்லது மதுரைக்காரர் நினைக்கும் “ அ ‘ வா?--இப்பிடி கவிதையிலலாம் சஸ்பென்ஸ் வெக்கலாமா--வெரி குட்
பாரதியார் இப்போ இருந்திருந்தா கடுப்பாகியிருப்பார்... (விலைவாசி உயர்வை கண்டு)
கனவில் மட்டுமே
எல்லாம் நடக்கும்
என்பதை அழகாச் சொல்லியிருக்கீங்க சரவணன்.
மாப்ள நச்!
நவீன உலக பாரதிக்கு வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!
கண்மூடிக் காண்பதெல்லாம் கனவல்ல கற்பனையாகவும் இருக்கலாம்.அடி மனசின் ஆசைகளாகவும் இருக்கலாம்.
இன்னும் கொஞ்சம் தூங்குங்கள் சகோ நம்ம
பாரதி கவிதையாவது பெருகட்டும் .இந்த
விலைவாசி மனுசரை எங்கதான் கொண்டுபோய்
நிறுத்துமோ!!!!:.....தமிழ்மணம் 5 சகோ .வாருங்கள்
என் தளத்துக்கும் .உங்கள் வரவு நல்வரவாகட்டும்
உங்களுக்கு கனவுலகூட நடக்குதே! எனக்கு கனவே வர
மாட.டேன்குது.
//உயர உயரப் பறக்கும்
பட்டத்தினை தரை யிரக்கவே
முடியாமல்…
பட்டாம் பூச்சியாய் மாறி
பறந்து பார்க்கிறேன்
விலைவாசி என்று எழுதிய பட்டத்தினை…//
நம்புவோம் எல்லாம் சரியாகுமென்றும் இந்தியா ஒரு வல்லரசாகுமென்றும். இளைஞர்கள் கையில் அனைத்துமிருக்கிறது. அவர்களை விழிப்புறச்செய்தாலே போதும். தங்களைப்போன்றோரின் வழிகாட்டுதல்கள் அவர்களுக்கு துணைநிற்கவேண்டும். நம்பிக்கைதான் வாழ்க்கை நண்பரே.
''..கண் மூடி காண்கின்றேன்…காணி நிலம் வேண்டி வில்லங்கம் இல்லாமல்அதுவும் நில அபகரிப்பு இல்லாமல்….''
சமயத்திற்கு ஏற்ற வரிகளிது...
இன்று அலைகள் .கொம் செய்தியில் யாழ்ப்பாணத்தில் காணி விபரம் கேட்கிறார்களாம். இதில் வெளி நாட்டில் வாழ்பவர் காணிகள் அபகரிக்கப்படக் கூடும் எனும்......
வேதா. இலங்காதிலகம்.
hello sir
sirapana sinthanai
melum melum ithu pola ungalin kavithaigali padika virupamai ullen.
hello sir
sirapana sinthanai
melum melum ithu pola ungalin kavithaigali padika virupamai ullen.
வில்லங்கம் இல்லாமல்அதுவும் நில அபகரிப்பு இல்லாமல்….
ஹா ஹா. நல்லா வந்திருக்கு..
Post a Comment