Wednesday, August 24, 2011

உங்களுக்கான ஸ்கூட்டியில் பயணம் செய்ய தாயாராகுங்கள்….!



ஸ்கூட்டி தேவதைகளுக்கான வாகனம்
தேவதைகளை மட்டுமே ஓட்டிச் செல்ல
அனுமதிக்கிறது…!
ஸ்கூட்டியை பின்தொடராத ஆண்களை
பார்த்திருக்கிறீர்களா..?
ஆம்  என்றால்
அது பூமியாக இருப்பதற்கான
சாத்தியக்கூறுகள் குறைவு..!
இல்லையென்ரால் அவர்
வண்டி ஓட்டத் தெரியாத பாதாசாரியாக இருக்கலாம்!
இருப்பினும் அவனும்
வேகத்தடைகளில் குதித்து
செல்லும் ஸ்கூட்டியின்
மார்போடு ஓட்டி பயணித்து இருப்பான்..!
எந்த ஸ்கூட்டியும்
யாரையும் பின்தொடரச் சொல்வதில்லை..
சாலைகளில் தேவதைகளின்
அனுமதியில்லாமலே
பின்னால் அமர்ந்து செல்வதைப் பலமுறை பார்க்கிறேன்
இதை தேவதைகள் உணர்வதில்லை
இதோ
பாருங்கள் என்னை முந்தி செல்பவனை…
தேவதையின் அனுமதியின்றி
பின்னால் அமர்ந்து
அவளின் அகன்ற முதுகுப்பகுதியை
முகர்ந்து முத்தமிட்டுக் கொண்டு
செல்கிறான்….
அதோ
அவனுக்கும் பின்னால்
ஸ்கூட்டியின் கண்ணாடி வழியாக
அவளின் உதடுகளை கிழித்துக் கொண்டிருப்பவனை
பாருங்கள்…
இதற்காக தேவதைகள் வருத்தப்படுவதாக
நான் அறியவில்லை
ஸ்கூட்டியை பின் தொடருபவன்
எவனும் சாலை விபத்துக்குள்ளாவதில்லை
ஏனென்றால்
எந்த ஸ்கூட்டியும் கனரக வாகனங்களை
முந்திக் கொண்டு செல்வதில்லை…!
தேவதைகளைப் புறக்கணித்து செல்லும்
வாகனங்கள் மட்டுமே
விபத்துக்குள்ளாவதாக
புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன…!
ஸ்கூட்டியால் மட்டுமே
ஒரு ஆணின்
மனபாரங்களை எல்லாம்
லேசாக்கி…
வாதையை மறந்து
நிதானத்தை உருவாக்க முடியும்
என மனநல மருத்துவர்கள்
ஆராய்ச்சி செய்வதாக செய்தி…!
மன்னிக்கவும்
எனக்கான ஸ்கூட்டியை
பார்த்துவிட்டேன்…!
நீங்கள் விபத்துக்குள்ளாகும் முன்
உங்களுக்கான ஸ்கூட்டியில்
பயணம் செய்ய தாயாராகுங்கள்….! 

14 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

இரவு வணக்கம் தலைவரே...

தமிழ்வாசி பிரகாஷ் said...

தலைவரே... எப்படியெல்லாம் யோசிக்கறிங்க... சூப்பர் கவிதை

M.R said...

அருமை ,இதில் நிறைய விசயம் இருக்கிறது.சாலையில் மெதுவாக செல்லவும்,துனைவியே வாழ்வின் வெற்றி ஆஹா அருமை பதிவு நண்பரே

செங்கோவி said...

//தேவதைகளைப் புறக்கணித்து செல்லும்
வாகனங்கள் மட்டுமே
விபத்துக்குள்ளாவதாக
புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன//

அருமை..அருமை!

Philosophy Prabhakaran said...

நல்லா வண்டி ஒட்டுறீங்க...

Mohammed Roshan said...

இதுக்கு ரூம் போட்டு யோசிபிங்கலா?

நல்லா கவிதை...........

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஏதோ ஒன்று இடருகிறது .மற்றபடி வாழ்த்துக்கள்.

Chitra said...

ஸ்கூட்டியை பின் தொடருபவன்
எவனும் சாலை விபத்துக்குள்ளாவதில்லை
ஏனென்றால்
எந்த ஸ்கூட்டியும் கனரக வாகனங்களை
முந்திக் கொண்டு செல்வதில்லை…!
தேவதைகளைப் புறக்கணித்து செல்லும்
வாகனங்கள் மட்டுமே
விபத்துக்குள்ளாவதாக
புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன…!


...... ஆஹா..... இப்படி ஒன்று இருக்கோ? சூப்பர்!

ராஜி said...

ஸ்கூட்டியை வைத்து ஒரு காதல் கவிதையா? ம் ம் நடத்துங்க நடத்துங்க.

கோவை நேரம் said...

இன்னிக்கு ஸ்கூட்டி ..நாளைக்கு ..? நல்லா இருக்குங்க....

Unknown said...

வணங்கங்களும், வாக்குகளும்..

நாய் நக்ஸ் said...

ஸ்கூட்டி...என்ன . ஸ்கூட்டி....

தாவாணி ...கட்டி ...சைக்கிள்-ல போகும் பிகுர்களே

டாப் ...டாப் டாப் ...

கோகுல் said...

நல்லாருக்குங்க!வித்தியாசமான சிந்தனை!

ரிஷபன் said...

ஸ்கூட்டி வச்சு அழகான கவிதை..

Post a Comment