இருள் அப்பிய வீடுகள்
இரவில் தூங்குகின்றன.
மேகங்களின் நகர்தலில்
நிலா ....
பயந்து ஒளிந்து
வெளிப்பட்டது
வயல்வெளியில்
எண்ணற்ற வெள்ளை பேய்களின்
நடமாட்டம் கண்டு...
நாளுக்கு நாள்
அதிகரித்துக் கொண்டேயிருந்தன
இருளில் உறங்கும் மனிதனுக்கு
வீதிகள் எங்கும்
நாய்கள் தொடர்ந்து
குரைத்து எச்சரித்தன...
விதைக்கப்பட்ட கற்கள்
உன்னை அறுவடை செய்பவை.
இரவில் தூங்குகின்றன.
மேகங்களின் நகர்தலில்
நிலா ....
பயந்து ஒளிந்து
வெளிப்பட்டது
வயல்வெளியில்
எண்ணற்ற வெள்ளை பேய்களின்
நடமாட்டம் கண்டு...
நாளுக்கு நாள்
அதிகரித்துக் கொண்டேயிருந்தன
இருளில் உறங்கும் மனிதனுக்கு
வீதிகள் எங்கும்
நாய்கள் தொடர்ந்து
குரைத்து எச்சரித்தன...
விதைக்கப்பட்ட கற்கள்
உன்னை அறுவடை செய்பவை.
13 comments:
கவிதை நன்றாக உள்ளது.
//விதைக்கப்பட்ட கற்கள்
உன்னை அறுவடை செய்பவை.//
ஆஹா, எச்சரிக்கும் முத்திரை வரிகள்.
நாம் செய்யும் தீய செயல்கள் நம்மையே அச்சப்பட வைக்கும் என்பதனைக் கவிதையில் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
நிச்சயம் அச்சமூட்டும் நம்தீய செயல்...
:)
யாரால் விதைக்கப் பட்ட கற்கள் , எப்போது விதைக்கப்பட்ட கற்கள், அவை ஏன் என்னை அறுவடை செய்ய வேண்டும் , கற்கள் என்று எதைக் கூறுகிறீர்கள் சரவணன் சொல்ல வருவது, புரிய வில்லை. தெளிவாகக் கூறுங்கள்.
புரியலையே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
எச்சரிக்கை கவிதை
நல்ல கவிதை
//வயல்வெளியில்
எண்ணற்ற வெள்ளை பேய்களின்
நடமாட்டம் கண்டு...//
சிறப்பான கவிதை சரவணன்.
நாங்கள் செய்யும் வினைகளை அறுக்கக் காத்திருக்கிறது காலம்.சொன்ன விதம் அழகு !
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
கவிதையிலே இறங்கியாச்சா சரவணன் - பலே பலே ! நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment