Thursday, June 30, 2011

விவேகானந்தர் இரயில்

  எங்கள் பள்ளியை சார்ந்த நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் சுமார் நூற்று எண்பது மாணவர்கள் , இன்று காலை பத்து மணியளவில் பள்ளிப் பேருந்தில் சுவாமி விவேகானந்தரின் நூற்றி ஐம்பதாவது நினைவு பிறந்த தினத்தை முன்னிட்டு விடப்பட்டுள்ள சிறப்பு இரயிலைப் பார்வையிட சென்றோம். 

அனைத்து பள்ளிகளில் இருந்தும் மாணவர்களை அழைத்து வந்ததால், இரயில் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. துவக்கப் பள்ளியிலிருந்து நாங்கள் மட்டுமே வந்துள்ளது போல இருந்தது. எங்கள் மாணவர்களின் கைகளில் உள்ள குறிப்பேடு மற்றும் பேனா , பென்சிலை பார்த்து அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர். அதில் ஒரு பெண் போலீஸ், தம்பி, எதற்காக நோட் கொண்டு வந்துள்ளீர்கள் என கேட்க, எம் மாணவர்கள் நாங்கள் சுவாமியின் வாழ்க்கை குறிப்புகளை எழுதிக் கொள்ள வந்துள்ளோம் என்றவுடன் , சிரித்து அருகில் இருந்த எம் பள்ளி ஆசிரியையை பாராட்டினார். 


   மடத்து நிர்வாகி எங்களைப் பார்த்தவுடன் வேகமாக வந்து , சின்ன குழந்தைகளை வெகு நேரம் காத்திருக்க செய்ய வேண்டாம் , உள்ளே வாருங்கள் என அழைத்து , தனியாக குழந்தைகளை அமரச் செய்து, பத்து நிமிடம் கழித்து எங்களை சிறப்பு இரயிலைப் பார்வையிட செய்தார். எம் மாணவர்கள் அவருக்கு நன்றி தெரிவிக்க முயன்ற போது , எங்களை போல உள்ள மாணவர்களை வரிசைப்ப்ப்ப்    படுத்தி கொண்டிருந்தார்.

 All power is within you; you can do anything and everything. Believes in that , do not believe that you are weak. Stand up and express the divinity within you.
என்ற சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும்
புகைப்படங்களை , விவேகானந்தர் கல்லூரி மாணவர்கள் விளக்க எம் பள்ளி
மாணவர்கள் அதை கேட்டு மகிழ்ந்தனர். அவரின் கம்பீரமான தோற்றம் 
எம் பள்ளி மாணவர்களை ஈர்த்தது. நூறு இளைஞர்களை கேட்ட
விவேகானந்தனுக்கு இன்று நூற்றி எண்பது மாணவர்களை
கொடுத்துள்ளோம் . அவரின் வாழ்க்கை வரலாற்றை படித்து இதில் பத்து
சதவீதம் தேறினாலும் நாட்டுக்கும் நமக்கும் நல்லது என்ற ஆசிரியரின்
கனவு நிறைவேறுமா?
     Teach yourselves, teach everyone, his real nature, call upon the sleeping soul and see how it awakes. Power will come, glory will come, goodness will come, purity will come, and everything that is excellent will come, when this sleeping soul is roused to self-conscious activity.
 என்பதை நினைவில் கொண்டு நாம் செயல் பட்டால், தமிழகம் மிளிரும்

11 comments:

A.R.ராஜகோபாலன் said...

நல்ல உபயோகமான பகிர்வு
உங்கள் மாணவர்களின் அறிவுத்திறமையையும்
தகவல்களை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தையும் பார்த்து பிரமித்து போனேன் நண்பரே

G.M Balasubramaniam said...

அவர்களாக அறிந்து கொண்டது தவிர ஆசிரியர்களும் விளக்கினால் நல்ல தெளிவு பெறுவார்கள் சிறார்கள். வாழ்த்துக்கள்.

வி.பாலகுமார் said...

வாழ்த்துகள் ஆசிரியரே, நன்றிகளும்.

//நூறு இளைஞர்களை கேட்ட
விவேகானந்தனுக்கு இன்று நூற்றி எண்பது மாணவர்களை
கொடுத்துள்ளோம்//

சபாஷ் !

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

நூறு இளைஞர்களை கேட்ட
விவேகானந்தனுக்கு இன்று நூற்றி எண்பது மாணவர்களை
கொடுத்துள்ளோம் . அவரின் வாழ்க்கை வரலாற்றை படித்து இதில் பத்து
சதவீதம் தேறினாலும் நாட்டுக்கும் நமக்கும் நல்லது என்ற ஆசிரியரின்
கனவு நிறைவேறுமா?

அருமை

முனைவர்.இரா.குணசீலன் said...

கனவு மெய்ப்படும்.
தமிழகம் மிளிரும்.

முனைவர்.இரா.குணசீலன் said...

நண்பா தங்கள் மின்னஞ்சல் முகவரி தெரியவில்லையே.
gunathamizh@gmail.com

ஸ்ரீ said...

வாழ்த்துகள்.

Rathnavel said...

அருமையான பதிவு.
நாளிதழில் விவேகானந்தர் எக்ஸ்பிரஸ் பற்றி படித்தேன். பார்க்க முடியவில்லையே என நினைத்தேன். நன்கு எழுதியிருக்கிறீர்கள்.
சமுதாய நண்பன் என ஒரு புத்தகம் நாகர்கோவிலிருந்து வருகிறது. உங்கள் முகவரியை என் மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள். அனுப்புகிறேன். மாணவர்களை அந்த புத்தகத்தில் எழுத பங்கெடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள்.
வாழ்த்துக்கள்.
உங்கள் சிறப்பான பணி தொடரட்டும்.
rathnavel.natarajan@gmail.com

jmbatcha said...

மிகச்சிறப்பான பதிவு நண்பரே.. எப்போதும் உங்களின் எழுத்துக்கள் அற்புதம்.

தமிழ்வாசி - Prakash said...

தலைவரே... நல்ல பகிர்வு. விவேகானந்தரின் வரலாற்றை சிறுவர்கள் அறியச் செய்ததில் மகிழ்ச்சி.

cheena (சீனா) said...

அன்பின் சரவணன் - நாங்கள் பள்ளிக்கு வரும் போதெல்லாம் மாணவச் செல்வங்களின் திறமையினையும் ஆர்வத்தினையும் கண்டு மகிழ்வது வழக்கம். சிறப்பு இரயிலைப் பார்வை இடச்சென்ற மாணவ மாணவியர் கையில் நோட்டுடனும் பென்சில் பேனாவுடனும் சென்றது எவ்வளவு சிறந்த செயல். கர்ம வீரர் காம்ராஜரின் பிறந்த தினம் வருகிறதே ? என்ன செய்வதாக உத்தேசம் ?? நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment