Thursday, September 23, 2010

தோற்றுப்போனேன் ...

சொற்கள் வந்து விழ
மூளையை முடுக்கி
பொதிந்த நியூரான்
பதிவுகளை வேரோடு
பிடுங்கி பார்க்கிறேன்
குரோமோசோம் பிரதியிலும்
வெளிப்படாத இடங்களையும்
புகுந்து தேடுகிறேன்
உன்னை வருணிக்க
வரிகள் தேடி ....

கணையத்தில் இருக்குமெனக்
கனவு கண்டு
தேடினேன்....
வரிகளில் இனிமை
இன்சுலினுக்கு ஆகாதாம் ....
கட்டுப்படுத்தவே மட்டுப்பட்டு
வெளியேறினேன் வரிகள் தேடி ...

நடை பயின்ற
நாட்களில் இருந்து
நாடி நரம்பு நாளங்கள்
புகுந்து தேடினேன்
கிடைத்தது...
இரத்த அழுத்தம் !
 
நீண்ட தேடுகையில்
ஒரே இடத்தில் அமர்ந்து
உன் நினைவில் பூத்த
மதுவுக்கு அடிமையானதால்
வந்ததாம் இந்த கொதிப்பு ..

செயற்கை கருத்தரிப்பு
போல ...
பிற கவி வரிகளிலும்
புகுந்து முயற்சித்தேன்
இணைய  மறுத்து
சினையாக வில்லை
தோற்றுப்போனேன் ...

நீண்ட தேடுதலில்
நரம்புகள் செயல் இழந்து
மூளை நரம்புகள் செயல்பட
மறுக்கவே ...
வலிப்பு வந்து
முகம் கோணி
கை கால் இழுத்து கிடந்தேன்
வாரி எடுத்து
மடியில் கிடத்தினாய்
முகம் பார்த்தேன் ....

'அம்மா' என்றது வாய்
இதற்க்கு ஈடு  இணையான
வார்த்தைகள் உண்டோ ...!

7 comments:

அன்பரசன் said...

//'அம்மா' என்றது வாய்
இதற்க்கு ஈடு இணையான
வார்த்தைகள் உண்டோ ...!//

இந்த வார்த்தைக்கு இணையேதும் உண்டோ..

thiyaa said...

சூப்பர்

ம.தி.சுதா said...

மீண்டும் என்னை விஞ்ஞான உலகிற்கு அழைத்துப் போனமைக்கு மிக்க நன்றி
சகோதரம்... தயவு செய்து இந்தப் பதிவை பார்த்து இச் செய்தி உரியவரிடம் சேர உதவுங்கள்..
ஃஃஃஃ...அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!ஃஃஃ
http://mathisutha.blogspot.com/2010/09/blog-post_23.html

Balakumar Vijayaraman said...

என்னாச்சு அண்ணே, ஒரு உத்வேகத்துல கிளப்பிட்டீங்க போல. புதுமுயற்சிக்கு வாழ்த்துகள்.

/நீண்ட தேடுகையில்//
கொஞ்சம் இடிக்குற மாதிரி இருக்கே?

Admin said...

கோடி வரிகளில் எழுதினாலும் விளக்கமுடியாத உறவு,
அம்மா....
விஞ்ஞான வார்த்தைகளை கவிதையில் இணைத்திருப்பது நன்று...

உங்களுக்காக:
http://bloggernanban.blogspot.com/2010/09/automatic-read-more.html

மோகன்ஜி said...

சரவணன் அம்மா என்றுமே அலுக்காத விஷயம்.. அழகான கவிதை. உங்கள் வரிகள்படித்த பின் , நான் பலவருடங்களுக்கு முன், தூங்கிக் கொண்டிருந்த என் அம்மாவைக் கண்டு எழுதிய கவிதை, மனதில் நிழலாடுகிறது. தேடி எடுத்து பதிய முயல்கிறேன். சில வரிகள் நினைவில்லாததால். வாழ்த்துக்கள் நண்பரே!

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

Different approach but nice one :)

Post a Comment