Tuesday, September 21, 2010

அண்ணாவின் வழி வந்தவர்கள் ...

கடந்த ஞாயிறு அன்று மதுரையில் செனாய்நகர் மாநகராட்சி பள்ளியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணிச் செல்ல தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் இயக்கங்களின் கூடு நடவடிக்கைக்குழு , ஒரு நபர் குழுவில் கைவிடப்பட்டுள்ள மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் தர ஊதியத்தினை வழங்கிடக் கோரி தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் ஒன்றுகூடினர்.


       அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைப்பு என்பதால் அனைத்து ஆசிரிய நண்பர்களையும் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.  நண்பர்களை சந்திக்க வேண்டும் என்றால் ஒன்று திருமண விழா,காதணி விழா, புதுமனைப்புகு விழா மற்றும் ந்த மாதிரி பொது பிரச்சனைகளில் மட்டுமே முடிகிறது. ஆமாம் இலவுக்கும் ஒன்றுக்கூடுவோம் அங்கு தான் சிரித்து மிகவும் தமாசகவும் பேசமுடியும்.

    அங்கு நம் பிரபல பதிவர், ஆசிரிய நண்பர் ,எழுத்தாளர் வந்துஇருக்காங்க நிறையக் காய் வைங்க என்று தன் அன்பைப் பொழியும் , என்னைப் போன்று நம் மணி ஜிக்கு பிடித்த , யானை மலை மீட்பில் முத்துக்குமாருடன் தீவிரமாக இருக்கும் பிரபலம் , ஆசிரியர்களுக்கு முன்னோடி ( ஓவர் பில்டப் , மதுரைக்காரங்கானாலே பாசக்காரப்பயலுக தானப்பா) திரு ஜெர்ரி யை காண முடிந்தது.

சரி ...ஏன் இந்த போராட்டம் என நீங்கள் கேட்பதை விளாவாரியாக சொல்லுகிறேன். ஆசிரியர்கள் என்றால் கலைஞர் அவர்களுக்கு கொள்ளைப்பிரியமாயிற்றே பின் எப்படி எந்த அநியாயம் என குமறி , அதிகாரிகள் சரிவர கவனிக்காததை சுட்டிக்காட்டவே இந்த போராட்டம் ஆரம்பம் என சொல்லி பல்லாயிரக்கனக்கான ஆசிரியார்கள் அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் திரண்டனர்.

இது கலைஞருக்கு அவருடைய அரசுக்கு எதிரான போராட்டமோ என எண்ணிவிடாதீர்கள். தமிழர் நலன், தமிழகத்தின் நலன் பாதிக்கப்படும்போதெல்லாம் எம்பத்து ஏழு வயதிலும் உணர்ச்சிப் பொங்கிட தானே தலைமை வகித்து போராடி வருகிறவர் நம் கலைஞர். அவர் நமக்கு கேட்டும் தருவார். கேட்காமலும் தருவார்.
அவரால் நேசிக்கப்பட்டு வருகிற ஆசிரியர் சமுதாயம் தமது உணர்வுகளை வெளிப்படுத்த இந்த போராட்டம் நடத்துகிறது. இது அவரையோ , அவரது அரசையோ காயப்படுத்த நடத்தப்படும் பேரணி இல்லை என்ற வாசகத்துடன் தாங்கள் ஒரு நபர் கமிஷனால் ஏமாற்றப் பட்டுவிட்டோம் என அணி திரண்டனர்.

    காரணம் அரசாணை எண் 271 படி லேப் அசிஸ்டெண்ட் , 303 படி போர்மேன் , 326 படி    
கிரேடிங்அசிஸ்டெண்ட், 273 படி ஹாஸ்டல் சூப்ரண்டண்ட் , 308 படி ஆடியோ விசுவல் டெக்னிசியன் என அனைத்து துறைகளிலும் 5200 -20200 +(1900 /2400 /2800 ) என்பது திருத்திய ஊதியத்தில் 9300-34800+4200 என மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் 5200 -20200 +2800 என்ற நிலையில் வெறும் 500 ரூபாய் சிறப்புப்படியாக கொடுத்து ஏமாற்றுவதுப்போல தெரிகிறது என்கின்றனர்.
  
அண்ணாவின் வழி வந்தவர்கள் ஆசிரியர்கள் தேங்கினால், நாடு தேங்கும் என்பதை அறிய மாட்டார்காளா .... ? என பொறுமைகாக்கும் ஆசிரியர்கள் போராட்டம் தீவிரமாகும் முன் ஆசிரியர்களைக் கொண்டே அரியணை ஏறிய அரசு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகின்றனர். பார்க்கலாம். 

7 comments:

ம.தி.சுதா said...

வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்து தான் பார்க்கணும்.... இந்த வரி தான் நினைவுக்கு வருகிறது..

thiyaa said...

ஆஹா

Jerry Eshananda said...

அன்பின் சரவணா...சுடச்சுட தகவலா...அசத்துங்கப்பு......

Jerry Eshananda said...

இது ஓவர் பில்டப்பு இல்ல...உலக பில்டப்பு..[ நான் ஒரு அப்பாவிங்கோ...]

அன்பரசன் said...

:)

Anonymous said...

CM Kalaignar eppavum arasu oozhiyar-glukku kurippaaga Aasiriyargalukku nallathaye seivaar ena nambuvom!

smart said...

சரவணன் அவர்களுக்கு,
9300-34800+4200 பலமுறை இப்படிப் பார்த்ததுண்டு இது என்ன கணக்கென்று புரியவில்லை. குறைந்தது 9300 முதல் அதிகபட்சமாக 34800 என்று புரிகிறது அது என்ன 4200?

Post a Comment