இன்று உலக எய்ட்ஸ் தினம், டிசம்பர் 1. எய்ட்ஸ் என்ற வார்த்தையைக் கேட்டாலே எதோ கெட்டவார்த்தைப் போல் உணர்கிறார்கள்! நானும் என் நண்பர்கள் , முதியவர்கள் ,ஆசிரியர்கள் , மாணவர்கள் என அனைவரிடமும் இதைப் பற்றி பேசியுள்ளேன், அனைவரும் வயது வித்தியாசம் இன்றி வெட்கப்படுகிறார்கள் அல்லது “சார் வேறு எதையாவது பேசுவோமா ? இதெல்லாம் நமக்கு எதுக்கு சார்?” என மழுப்பலானப் பதிலைத் தருகிறார்கள்.
ஏன் இந்த வெட்கம் ? ஏன் இந்த பதற்றம் ?தமிழகம் இன்று எய்ட்ஸில் முதலாவது இடத்தைப் பிடித்தாலும் ஆச்சர்யம் இல்லை.!
நேற்று மதுரை தினமலரில் ஒரு செய்தி படித்தேன், அதில் மூன்று பெண்கள் விபச்சாரத்தில் கட்டாயப்படுத்தி ஈடுபடச் செய்ததாக செய்தி வந்திருந்தது. இதில் முக்கிய பிரச்சனை என்னவென்றால் புரோக்கர் பங்கு கொடுக்கவில்லை என்பதால் போலீஸ் ஸ்டேசன் வந்துள்ளனர்.
தங்களால் எய்ட்ஸ் பரவுகிறது என்றதொரு பதற்றம் வரவில்லை! பங்கு அதிகமாக சம்பாதிக்கிறான் தன்னை வைத்து பணக்காரனாக இருக்கிறான் என்பாதால் வந்தப் பிரச்சனை ! இவர்களால் இனி யாருக்கும் எய்ட்ஸ் பரவக்கூடாது என உதவிய தொண்டு நிறுவனத்தை இங்கு பாராட்டியே ஆக வேண்டும். சபாஷ்!
Where to fix the sex in schools? என்பது தமிழகத்தில் மிகப் பெரியப் பிரச்சனை !
என்னைப் பெருத்தவரை எந்த நல்லப் பண்பாக இருந்தாலும் அது தொடக்கக் கல்வியிலே தான் கொடுக்கப் பட வேண்டும். அப்போது தான் அது பசுமரத்தாணி போல் நன்றாகப் பதியும். திருடக்கூடாது, பொய் பேசக் கூடாது, பிறர் பொருள் மீது ஆசை வைக்கக்கூடாது, கண்ட இடங்களில் குப்பை போடக்கூடாது, சக மாணவனிடம் சண்டைப் போடக்கூடாது, புத்தகங்களை கிழிக்கக்கூடாது, உடை நன்றாக துவைத்து அணிய வேண்டும், எடுத்தப் பொருளை எடுத்த இடத்திலே வைக்க வேண்டும் (இப் பண்பு செயல் வழிக் கற்றலில் அட்டையை டீரே யில் எடுத்து , குரூப்பில் அமர்ந்து , அந்த குரூப்பிற்க்கு தகுந்த மாதிரி ஆசிரியர் உதவியோ அல்லது சக மாணவன் உதவியோ பெற்று, நன்றாக படித்து , பின் எடுத்த டீரே யில் அந்தக் கார்டை மீண்டும் வைப்பதால், தன்னை அறியாமலே அப்பண்பைப் பெறுகிறான்) போன்ற பண்புகளை கற்றுத்தருகிறோம்.
தொடக்கக்கல்வியில் ஏன் பாலியல் கல்வியை கற்றுத்தரக்கூடாது?
கலாச்சாரம், பண்பாடு என்று கூறி நம் குழந்தைகளின் எதிர்காலத்தை வீணாக்குகிறோம்! ஒன்றாம் வகுப்புப் படிக்கும் பையன் எத்தனை பள்ளிகளில் சக மாணவியை தன்னையறியாமலே கட்டிபிடிக்கிறான் ? மனச்சாட்சியை அடகுவைக்காமல் கூறுங்கள். எத்தனை முறை நாம் டி.வி பார்க்கும் போது காதலிக்கும் காட்சி வரும் போது “அம்மா ச்சீ அசிங்கம்” எனக் கூறி ரிமோட்டை வைத்து வேறு சேனல் மாற்றுவது உண்டு. என் கேள்வியெல்லாம் பாலியல் பற்றி அறிவு அல்லாமலா இது போல் நடக்கிறது?
மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் இந்த பாலுணர்வு இயற்க்கையிலே மனதில் பொதிந்துக் கிடைக்கிறது. இதை நாம் அமுக்கப் பார்க்கிறோம், இந்த அமுக்கம் தான் பிற்காலத்தில் காமமாக வெளிப்படுகிறது . அந்தக் காமத்தையும் முறையான வழியில் செலவிடத் தெரியாமல் , கற்பழிப்பு , கொலை, கொள்ளை என வழிமாறி செல்ல துண்டும் . முடிவில் எயிட்ஸ் நோயாளியாக மாறி வாழ்க்கையை தொலைத்து அவதிப்பட நேரிடுக்கிறது.
இன்று தகவல் தொடர்பு சதனங்கள்,சிறுவயதிலேயே அனைத்து விசயங்களையும் எளிய முறையில் கற்றுத்தருகிறது. பல மாணவர்களுக்கு அவர்கள் வாழிடங்களே வழிய வந்து வசதியாக பாலியல் சம்பந்தமான விசயங்களைக் மோசமான முறையில் கற்றுத்தருகிறது. இது யாவரும் மறுக்க முடியாத உண்மை . அப்படி இருக்க நாம் இன்னும் என் நம் குழ்ந்தைகளுக்கு பாலியல் கல்வியை தொடக்கக் கல்வியில் தரக் குடது?
கல்வியாளர்கள் சிந்திக்கவும்! கட்டிப்பிடித்தல், மாணவிகளுடன் விளையாடுதல், மாணவிகளுடன் பழகுதல் , காதல் பற்றி பேசுதல் , காதலித்தல் , ஆண், பெண் பேதம் பேசுதல் , பெண்ணுடன் கைகுலுக்குதல் போன்றவற்றை நம் சமுகம் தவறுதலாகவே சித்தரிக்கின்றது.
ஆகவே, தான் பல பள்ளிக் ௯டங்களில் கழிப்பறை சுவற்றில் மாணவர்கள் ஆசிரியரைப் பற்றியும் , மாணவிகளைப் பற்றியும் தவறான முறையில் எழுதிவைக்கின்றனர். சிறுவயதிலேயே இது பால் வேறுபாடுதான் வேறு ஒன்றும்மில்லை, பால் உறுப்புகளை சிறுநீர் கழித்தப்பின் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், கட்டிபிடித்தல் என்பது தவறானதன்று, ஆனால் தவறான உணர்வுகளுடன் பிடித்தல் குடாது . அனைவரும் நம் சகோதர, சகோதிரிகள் தவறானக் கண்ணோட்டம் நம் வாழ்வை சீரழித்து விடும் என பொறுமையாகக் ௯ற வேண்டும். சற்றுக் கடினம் தான் என்ன செய்வது நம் குழந்தைகளை நாம் தானே காப்பாற்ற வேண்டும்.
என்னுடன் பணியாற்றும் ஆசிரியர்கள் பலர் தம் வகுப்பில் வயதுக்கு வந்து , அதாவது பூப்பெய்தும் குழந்தைகளை என்னிடம் அழைத்து வந்து, அந்த விஷயத்தை சொல்ல (அச்சம் என்பதா? கூச்சம் என்பதா?) தயங்குகின்றனர் . அதுவும் தற்காலத்தில் நான்கு, ஐந்தாம் வகுப்பில் பூப்பெய்துவது என்பது சகஜம் ஆகிவிட்டது . காமுகர்களிடம் இருந்து நம் குழந்தைகளை காப்பாற்ற , பாலியல் கல்வி மிகவும் அவசியம் . தொடக்கக்கல்வியிலே அதனைத் தருவது சாலச்சிறந்தது.
சிறுவயதில் சிறுவர்கள் பால் உறுப்பை அடிக்கடி தொட்டுக்கொண்டு இருப்பதை தவறு என உணர்த்த வேண்டும் . சக மாணவியின் அங்க அவையங்களை பார்ப்பதை தவறு என்று உணர்த்துவதுடன் , உனக்குப் போன்றே அவளுக்கும் உறுப்புக்கள் உள்ளன என உணர்த்தவேண்டும் .
எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுகளை தொடக்கக்கல்வியிலே தருவதுதான் மிகவும் சிறந்தது. எச்.ஐ.வி. பற்றி டாக்டர் லுக் மாண்டேக்ணன் என்ற விஞ்ஞானி பிரான்சில் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து ஐந்தில் கண்டுபிடித்தார் என போதிப்பதுடன் எய்ட்ஸ் நோயாளிக்கு போதுமான நோய் எதிர்ப்புதன்மையை ஏற்படுத்துவதுடன் , சமுகம் அவர்களை ஒதுக்காமல் பாதுகாத்து , பராமரிக்க நம் குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டும். எய்ட்ஸ் ஒழிப்போம்! முறையான பாலியல் கல்வியினை தொடக்கக் கல்வியிலே தந்துவிடுவோம்!