சிறுவர்கள் ஏன் தன் வயதை மீறி நடந்து கொள்ள ஆசைபடுகிறார்கள் .
ஆறாம் வகுப்பில் காதல் தோல்வி கண்ட சிறுவர்கள் இன்று இருக்கிறார்கள் . ஒன்பதாம் வகுப்புக்கு போவதற்குள் பாய் பிராண்ட் மற்றும் கேர்ள் பிராண்ட்
எண்ணிக்கை எத்தனை என்று கணக்கிடுகிறார்கள் .
இணையத்தின் வழியே எளிதாகக் கிடைக்கும் ஆபாசப் படங்கள் அவர்கள் பாலியல் ஆசைகளைக் கொந்தளிக்கச் செய்கின்றன. ... குற்றத்தைக் கொண்டாடும் திரைப் படங்கள் அவர்களுக்கு முன் உதாரணமாகின்றன.
அவனைப் புரிந்துகொள்வதற்குப் பெற்றோர்கள், ஆசிரியர்கள் இரு தரப்பும் தவிக்கிறது. தமிழகத்தில் முன்பு வறுமையால் வீட்டை விட்டு ஓடியவர்கள் அதிகம் இருந்தார்கள் . இன்று ஓடுகிறவர்களில் பெரும்பான்மையினர் வீடு அனுமதிக்காத உல்லாசங்களைத் தேடியே வெளியேறுகிறார்கள் .
ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பார்வையில் என் கருத்துகளை முன் வைக்கிறேன் .
சீர்கெட்டுக் கிடக்கும் உலகச் சூழ்நிலையை நல்ல கல்வி ஒன்றினால் தான் மாற்ற முடியும் .
நம்முடைய உலகின் எதிர் காலம் மாணவ மாணவிகளின் கைகளில் தான் இருக்கிறது. அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் கல்வியின் தரத்தை பொறுத்துத்தான் நம் உலகச் சூழ்நிலை அமையப் போகிறது .
தரமான கல்வி கொடுக்க, நம் தமிழக அரசு சமச்சீர் கல்வி முறையை கொண்டுவருவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் ஆகும் .
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே ஒளிவு மறைவில்லாத உறவு ஏற்படும் போதுதான் , கல்விக் ௯டங்களில் கற்றுக் கொள்ளுவதற்கான சூழ்நிலை உருவாகும். ஒற்றுமை , தோழமை போன்றவைகளினால் ஆசிரியர்களும் மாணவர்களும் பிணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
செயல் வழிக் கற்றல் முறையில் ஆசிரியர், மாணவர் உறவு தோழமையுடன் ஒற்றுமை உடையதாக உள்ளது என்பதை நினைவு படுத்த கடமைப் பட்டுள்ளேன் .
அன்புக்காட்டுதல் , பகிர்ந்து கொள்ளுதல் , ஒளிவு மறைவின்றி கருத்துக்கள் பரிமாற்றம் செய்து கொள்ளல் போன்றவைகள் புதிய விசயங்களை சுலபமாகவும் , ஆர்வத்துடனும் கற்றுக் கொள்ளுவதற்கு உதவும்.
ஒரு உண்மையான நல்ல ஆசிரியர் தன்னுடைய மாணவர்களை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை கொண்டிருக்க மாட்டார். அவர் தன் மாணவர்களை சுயமாகச் சிந்தித்து சுதந்திரத்துடன் செயல்படுவதற்கு அனுமதித்து வருவார்.
புத்தகங்களைப் படிப்பதால் மட்டும் கல்வி முழுமை பெறுவதில்லை.
தன்னைச் சுற்றிலும் நடப்பவைகளிலிருந்து ஒருவன் நிறைய கற்றுக் கொள்ள முடியும். ஆசிரியரின் முக்கிய பணி மானவிர்களிடம் உண்மையை கண்டுக் கொள்ளும் திறமையை வளர்பதுதான்.
பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுடைய நிறைவேறாத ஆசைகளை, தங்கள் குழந்தைகளின் மூலமாக அடைய வேண்டுமென்று ஆசைப்பட்டு , அவைகளை அதங்கள் குழந்தைகள் மீது திணித்துவருகிரர்கள்.
பெற்றோர்களும் ,ஆசிரியர்களும் செய்ய வேண்டிய முக்கியமான பணி இதுதான். முதலில் குழந்தைகள் என்ன செய்ய விரும்பு கிறார்கள் என்ற அவர்களுடைய விருப்பங்களைக் கண்டறிந்து கொள்ள வேண்டும் . அந்த விருப்பங்களை ஊக்குவித்து அந்த விருப்பங்களை நிறைவேறுவதற்கு தங்களால் ஆனா உதவிகள் அனைத்தையும் , அவர்கள் செய்ய வேண்டும். அப்போது தான் குழந்தைகளிடமிருந்து ஆக்கப்பூர்வமான , முழுமையான பரிபூரணம் நிறைந்த நல்ல செய்கைகள் மலர்ந்து, கெட்டுவிட்டிருக்கும் உலகச் சூழ்நிலையை தூய்மை படுத்தும்.
இதை ஆசிரியர்களும் பெற்றோர்களும் புரிந்து செயல் பட்டால் , மாணவர்கள் வீட்டை விட்டு ஓடிப்போவது முற்றிலும் நின்றுவிடும் .
No comments:
Post a Comment