"காயம்படுகிறவர்கள் வாழ்கிறார்கள். பின்னடைகிறவர்கள் மரணிக்கிறார்கள்." என்கிறார். ஜே. கிருஷ்ணமூர்த்தி. பட்டால் தான் புத்திவரும் என்பது பழமொழி .
இன்று குழந்தைகள் பட்டறிவு இன்றி தானாக கற்கிறார்கள் என்ற வாதம் இருக்கிறது !
செயல்வழி கற்றல் நம் மாணவர்களுக்கு கிடைத்த வரபிரசாதம்.
இன்று தினமலர் பேப்பரில் வந்துள்ள கட்டுரையில் ' மாணவர்களின் கற்றல் திறன் குறைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது'.
செயல் வழி கற்றல் வந்ததில் இருந்து மாணவன் தன் அறிவு
திறனுக்கு ஏற்றவகையில் யாருடைய வற்புறுத்தலும் பயமும் இன்றி ,தன் சக மாணவன் துணையுடன் கற்கிறான் மற்றும் ஆசிரியர் கற்றல் சுழலை
ஏற்படுத்தும் நபராக செயல்பட்டு மாணவனை தன் போக்கில் காயம் பட ( தவறுகள் திருத்த) செய்வதன் மூலம் , மாணவனை நல்ல அறிவுள்ளவனாகா வாழச்செயகிறார்.
முந்தய பாடமுறையில் மாணவர்களுக்கு மொத்தமாக
கற்றுத் தரும்போது சில மாணவர்கள் பின்னடைய நேரலாம் .
இப்பின்னடைய்வு மாணவர்களை படிப்பை விட்டு மரணிக்கச்செயயலாம் .
ஆகவேதான் முந்தய காலங்களில் குழந்தை தொழிலாளர்கள் அதிகமாக இருந்தார்கள் ,
இன்று மிகவும் குறைவு .
மாணவர்கள் கட்டாயப்படுத்துதல் அவனின் கற்றல் திறனை குறைக்கச் செய்யும் என்பது உண்மை . ஆனால் தற்போதைய செயல் வழி கற்றல் முறை மாணவனை கட்டாய படுத்தி அறிவை திணிக்கவில்லை . எது மாணவன் படிப்பை இனிக்கச் செய்து கற்றல் குறைப்பாட்டை நீக்குகிறது. கற்றலை இனிமை ஆக்குகிறது .
No comments:
Post a Comment