Sunday, November 8, 2009

பிள்ளைகளின் மனதை கவனியுங்கள்






சமிபகாலமாக மாணவர்கள் வீட்டைவிட்டு வெளியேறுவதும் , அவர்களை ரயில்வே போலீஸ் பிடித்து ஒப்படைப்பதும் தொடர் கதையாக நடக்கும் சம்பவங்கள். ஆனால் இத்தவறுகளுக்கு பின்னால் பொற்றோர்களின் தவறுகள் ஒழிந்திருப்பதை ஒணர்ந்து மாணவர்கள் வாழ வழிவிடுங்கள்.

பொற்றோர்கள் தங்களால் முடியாதவற்றை, தாங்கள் இள்மையில் இழந்தவற்றை மீண்டும் நிறைவேற்ற அதை தங்கள் குழந்தைகள் மூலம் நிறைவேற்ற முயலும் போது, குழந்தைகள் மன அழுத்தம் பெற்று , அந்த சூழ்நிலையில் இருந்து விடுபட வீட்டை விட்டு ஒடிப்போகும் மனநிலைக்கு தள்ளப்படுகிறன்.

பிள்ளைகளுடன் அன்பாக பழகுங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் எதர்த்தமாக உங்கள் ஆசைகளை எடுத்துக் கூறுங்கள். அதற்ககாக தங்களின் ஆசைகளை அவர்களின் மீது திணிக்காதீர்கள்.

பல நேரங்களில் படிப்பின் மீது ஆர்வம் குறைவதற்க்கு காரணம் டி.வி. பார்க்கும் பழக்கம் தான். அதுவும் ரிமோட் கையில் வைத்து பார்க்கும் பழக்கம் படிப்பின் மீது உள்ள ஆர்வத்தை முற்றிலும் அகற்றி , அவனின் மன குவிப்பு திறனை குறைத்து , எதிலும் கவனக்குறைவை ஏற்படுத்தும்.

இன்று குழந்தைகள் ஒரே நேரத்தில் ஒரு சேனலைப் பார்பதில்லை . விளம்பர இடைவோளையில் அவர்களின் கை தானாகவே அடுத்தடுத்த சேனலை மாற்றுகிறது. இந்த மாற்றம் அவர்களின் மன நிலையில் மன குவிப்பு நேரத்தையும் சேர்த்து மாற்றி விடுகிறது. டி.வி பார்க்கும் போது ரிமோட் நம் கையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். அது நல்ல நிகழ்ச்சிகளை மட்டும் பார்க்கவும் உதவும்.

பொற்றோர்கள் தங்கள் குழந்தைகள் முன் சண்டை போடுவதை நிறுத்துங்கள்.அவர்கள் முன் அன்பாக நடந்துக் கொள்ளுங்கள். அவர்களிடம் அன்பாகவும் மரியாதையுடனும் பழகவும். நல்ல உணவுகளை தந்து ஆரோக்கியத்துடன் வளர்க்கவும். நிச்சயம் நன்றாக படிப்பார்கள்.

தங்கள் குழந்தைகள் பள்ளியில் என்ன படித்தார்கள் ? ஆசிரியர் என்ன சொல்லி கொடுத்தார் ? நண்பர்கள் இன்று என்ன பேசினார்கள் ? என்ற விபரங்களை கண்டிப்புடன் கேட்காமல் , விளையட்டாக கனிவுடன் கேளுங்கள். தங்கள் பிள்ளைகள் என்றும் தவறுகள் செய்யமாட்டார்கள்.

இன்று மனம் வெளுக்க வழியில்லையே என்று பாரதிஏங்கியது போல் குழந்தைகளின் மன அழுக்கை வெளுக்க வழியில்லை என நாமும் ஏங்குவது ஏன்?

மன அழுக்கு நீக்க புத்தகங்கள் தான் நல்லவழி. இன்று நீதி நெறி கதைகள் , நன்னெறி கதைகள் எங்கு௦ நாம் கூறுகிறோம் ?பள்ளியிலும் அப் பாடவேளையில் பிற பாடங்கள் தான் கற்றுத்தரப்படுகிறது.

எகிப்தின் பாரோ அரசன் தான் ௦படிக்கும் புத்தக வாசிப்புஇடத்தை மன மருத்துவ நிலையம் என்று பெயர் வைத்துள்ளார் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

காந்தி இளமையில் படித்த அரிச்சந்திர நாடகமும் , இராமாயணமும் அவரின் வாழ்க்கையை நொறிப்படுத்தியது . காந்தி வாழ்க்கையை படித்த மார்டின்லூதர்கிங் வாழ்க்கை அகிம்சையை கடைப்பிடிக்கச் செய்தது.

ஆசிரியர்களும் ,பொற்றோர்களும் தயவு செய்து மாணவர்களுக்கு நல்ல புத்தகங்களை வாங்கிதரவும் , வாசிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தவும். நன்னெறி கதைகள் கூறி பிள்ளைகளின் வாழ்க்கையை நெறிப்படுத்தி வளமுள்ளதாக மாற்றுவோம். .

2 comments:

Vel said...

ennudaya virupam...nam naatu kalvi murayayey matra vendum.

naan veli naatirku vantha piragu thaan namathu kalvi murai practical life-ku evalavu othu varavilai enru therikirathu...

neengal innum niraya ezhutha ennathu vazthukal

nanri
velmurugan

Aba said...

சார், மற்ற பெற்றோர்கள் எப்பிடின்னு எனக்கு சரியா தெரியாது. ஆனா என்னோட பெற்றோர்கள் எனக்கு செய்யுறது எல்லாமே கடமைக்குதான் சார். (உடனே அட்வைஸ் பண்ணாதிங்க சார்) (அவங்களே ஒவ்வொரு விஷயத்துக்கும் சொல்லுவாங்க)

படிக்க வசதி செய்தாங்க... வளர்ந்து தங்களோட பேர காப்பத்தவாம்! (ஒழுங்கா படிக்கலைன்னா தங்களோட உறவினர்கள் சிரிப்பாங்களாம்) சாப்பாடு தர்றாங்க.. இல்லன்னா என்னை ஒழுங்கா வளர்க்கலைன்னு மத்தவங்க சொல்வாங்களாம். இது மாதிரி எல்லாத்துக்கும்....

ஆனா எனக்கு இலட்சியம் இருக்கு சார்... சாதிக்கனுங்க்கிற வெறி இருக்கு, வாழ்க்கைய அனுபவிக்கனுங்க்கிற(கெட்ட வழியில இல்ல சார்) ஆசை இருக்கு.. உலகம் பூரா சுத்தி பாக்கணும்.. நல்லவனா வாழனும்.. கெட்ட பழக்கங்கள் பக்கம் போகப்படாது.. நல்ல ஒருத்திய உண்மையா காதலிச்சு, பெற்றோர் சம்மதததோட கல்யாணம் பண்ணி, அவளுக்கு நேர்மையா, துரோகம் பண்ணாம நிம்மதியா விட்டுக்கொடுத்து வாழனுங்க்கிற ஆசை இருக்கு சார்.... வாழ்வேன்கிற நம்பிக்க இருக்கு சார்...

என்னோட பெற்றோர் நல்லவங்க தான்.. எனக்கு எல்லாம் செய்து கொடுக்குறாங்க.. ஆனா எனக்கு பாசம் மட்டும் குடும்பத்தில கிடைக்கிறதில்ல சார்... சத்தியமா நான் என்னோட புள்ளைய இப்பிடி வளர்க்கமாட்டேன் சார்...

Post a Comment