என் கனவு
மாற்றம் ஒன்றே நான் காணும் கனவு. ஆம்! மாற்றம் ஒன்றே மாறாமல் இருக்கும் ஒன்றாகும். அம்மிக் கல் மாறி மிக்ஸி ஆனது. ஆட்டு உரல் மாறி கிரைண்டர் ஆனது. கால்குலேட்டர் மாறி கணினி ஆனது.
ஆம்! என் கனவு மாற்றம் தான் ! அனைவரும் மாற வேண்டும். அந்த மாற்றம் 2020 யை நோக்கிய கனவு அல்ல, அதை நினைவு ஆக்குவது ஆகும். நான் நினைக்கும் மாற்றம் மிக மிக சிறியது , ஆனால் அதன் பயன் மிகமிக பெரியது.
பாலிதீன் பை வாங்குவதை நிறுத்தி... துணிப் பை , காகிதப் பை பயன்படுத்தும் எண்ணம் வளர வேண்டும்.
எச்சிலை எங்கும் துப்பலாம் என்ற எண்ணம் மாறி .... உரிய இடத்தில் துப்ப கற்றுக் கொள்ள வேண்டும்.
குப்பையை குப்பைத் தொட்டியில் தான் போட வேண்டும் என்ற மாற்றம் வேண்டும்.
இளமையில் கல்வி , சுமையில்லா கல்வி ... சுவையான கல்வி என்ற மாற்றம் வேண்டும்.
அனைவருக்கும் கல்வி , அது சமச்சீர்கல்வி என்று மாற வேண்டும்.
திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை மாற்ற வேண்டும்.
மருத்துவரை தவிர்த்து நோய்க்கு நாமே மருந்து வாங்கும் பழக்கத்தை மாற்ற வேண்டும்.
உணவு முறையில் மாற்றம் வேண்டும். சரிவிகித உணவு உண்ண வேண்டும்.
பழங்கள் , காய்கறிகள் , கீரைகள் உண்ணும் பழக்கம் எற்பட வேண்டும்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அனைவருக்கும் வேண்டும் . இயற்கையை நேசிக்க வேண்டும்.
மரம் வெட்டுவதை நிறுத்தி ,மரம் நடுதல் வேண்டும்.
இரசாயண உரம் தவிர்த்து ,இயற்கை உரம் பயன் படுத்த வேண்டும்.
கழிவு நீர் வீட்டுக்கருகில் தோங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
உடல் பருமன் பெருதலைத் தவிர்க்க தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
இவை எல்லாம் நம்மால் முடியும் ... ஆம் ! இது என்ன பெரிய விசயமா ?ஏன் நம்மால் முடியாது ? என உங்கள் மனதில் கேள்வி எழுவது புரிகிறது . இந்த மன மாற்றம் தான் நான் விரும்பும் கனவு.
இந்த மாற்றம் வியாதியில்லாத ஆரோக்கியமான மனிதனையும் , சுற்றுச் சூழலையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை!
2 comments:
நல்ல பதிவு. உங்கள் கணவு நிறைவேற என் வாழ்த்துக்கள்.
உங்க கனவு மட்டுமில்ல சார், என்னோட கனவும் அதுதான்.... உலமெங்கும் குரலெழுப்பும் கிரீன்பீஸ் நண்பர்களது கனவும் அதேதான்.... ஆனா இது எல்லாத்துக்கும் மொதல்ல 'மனித' ஜனத்தொகையை குறைக்கணும்.... அப்புறம் எல்லாமே மாறும் சார்... கனவு நனவாக வாழ்த்துக்கள்.. (எனக்கும் தான்)
Post a Comment