அன்பான மொழியாலே பண்பை வளர்ப்பவரே !
ஆற்றலை முறைபடுத்தி ஒழுக்க நெறி வளர்ப்பவரே !
இனிமையாய் கற்றலை இனிதாய் வளர்ப்பவரே !
ஈதலின் பண்பை வளர்த்து மனித நேயம் வளர்ப்பவரே !
உண்மையாய் பேசி சத்தியம் வளர்ப்பவரே !
ஊறு விளைவிக்கும் எண்ணம் அழித்து உதவி செய்யும் பண்பை வளர்ப்பவரே!
௦௦எண்ணங்களிலே நல்லதையே விதைப்பவரே !
ஏணிப்படியாய் இருந்து எங்களை உயர்த்திப் பார்ப்பவரே !
ஐயம் நீக்கி அறிவை வளர்ப்பவரே !
ஒளியாய் இருந்து வழி காட்டுபவரே!
ஓங்கும் வளர்ச்சிக்கு உரமாய் விளங்குபவரே!
ஒளவை மொழியில் தமிழை தவமாய் வளர்ப்பவரே!
எஃகு மனம் கெண்டு தேசியம் வளர்ப்பவரே!
2 comments:
அன்பின் சரவணன்
ஆசிரியப் பணியே அறப்பணி !
அதற்கே உனை அர்ப்பணி !
என்ற நோக்கத்துடன் பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் உள்ள நாடு நம் நாடு
நல்ல குரு வணக்கத்துடன் துவங்கப்பட்ட பதிவு
நல்வாழ்த்துகள் சரவணன்
நட்புடன் சீனா
Post a Comment