Wednesday, April 22, 2015

கவிதை -

கடவுள் காஞ்சனாவாகி விடுகின்றார்...
*
சைக்கிளில் தடுமாறி விழுந்தவனை தூக்க
நினைத்தாலும் வேலை நிமித்தம் கடக்கும் போதும்
பைத்தியக்காரி என்று தெரிந்தும்
துணிவிலகி தெரியும் மார்பை மறைக்காமல்
பார்த்தவாறே கடந்து செல்லும் போதும்
மனைவி இருப்பது கூட தெரியாமல்
தொப்புள் தெரிய நடந்துவரும் பெண்ணை காண
அலைபாயும் கண்களுடன் கழுத்தை திருப்பும் போதும்
பேருந்தில் இருந்து தவறி விழுந்தவன் விபரம் தெரிந்தும்
வீண்வம்பு வந்துவிடுமோ என்று காணது செல்லும் போதும்
நண்பர் மகள் திருமணத்திற்கு கடன் கேட்டு வரும் போது
தன்னிடம் பணம் இருந்தும் தட்டிக்கழிக்கும் போதும்
இழவு என தெரிந்தும் அங்கு இளித்து நின்று
சொத்து குறித்தும் பாகப்பிரிவினை குறித்தும்
பேசி பிரச்சனை உண்டாக்கும் போதும்
மனிதனிடத்தில் பொதிந்துள்ள கடவுள்
கஞ்சனா வேடமிட்டு லாரன்ஸ் ராகவேந்தராக காட்சியளிக்கிறார்...!
மதுரை சரவணன்.

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பார்த்தாச்சா...?

G.M Balasubramaniam said...

/மனிதனிடத்தில் பொதிந்துள்ள கடவுள்
காஞ்சனா வேடமிட்டு லாரன்ஸ் ராகவேந்தராக காட்சியளிக்கிறார்...!/ தவறுகள் தெரிந்து திருந்தினால் சரி. உங்கள் மின் அஞ்சல் முகவரியை எங்கு வைத்திருக்கிறேன் நினைவில்லை. அனுப்பித் தருவீர்களா, உங்கள் வரவை ஆவலுடன் எதிர்நோக்கி

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான சிந்தனையில் உதித்த கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

துரை செல்வராஜூ said...

இன்றைய வலைச்சரத்தில் ஐயா GMB அவர்கள் -
தங்களைக் குறிப்பிட்டு சிறப்பித்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி.. வாழ்க நலம்!..

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வலைச்சரத்தில் ஜீஎம்பி ஐயா தங்கள் பதிவை அறிமுகப்படுததியது கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
http://drbjambulingam.blogspot.com/
http://ponnibuddha.blogspot.com/

Post a Comment