Sunday, December 9, 2012

யார் யாரை குறை கூறுவது..!


எல்லா இடங்களிலும் மரங்களை
வேரோடு புடிங்கி எடுத்து விட்டனர்
புதியதாய் முளைத்த
வானுயர்ந்த கட்டிடங்களின்
நிழலில் நின்று
ரமணனை ஏசிக்கொண்டிருந்தனர்
மழை பொய்த்துவிட்டதென்று..
இவர்களை யார் ஏசுவது..?

4 comments:

Yaathoramani.blogspot.com said...

வான் நோக்கி எச்சில் துப்பியவர்களின் நிலைதான்
நம் நிலையும் என்று என்று உணரப்போகிறோம்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Anonymous said...

அருமை, தவறை தாம் செய்துவிட்டு இயற்கையை தூற்றுவதே மனித குணம்.

cheena (சீனா) said...

அன்பின் சரவணன் - அருமை அருமை கவிதை அருமை - விளை நிலங்களெல்லாம் குடியிருப்புகளாக மாறீய பின் - இயற்கையினை மறந்த பின் - மழை பெய்ய வில்லை என்றால் ரமணன் என்ன செய்வார் பாவம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

G.M Balasubramaniam said...


நன்றாகச் சொன்னீர்கள் சரவணன்.

Post a Comment