Thursday, December 6, 2012

டெங்கு கொசு ஒழிப்பு பிரச்சாரத்தில் 5ம் வகுப்பு மாணவர்கள்


   மாலை மதுரையில் மழைபொழிய துவங்கியது. மாணவர்கள் மிகவும் உற்சாகமாக , “சார், இன்னைக்கு மழை நல்லா பெய்யட்டும், அப்ப தான் மழை விட்டவுடன் எல்லாரும்  வீட்டிலே இருப்பாங்க.. நம்ம நாடகம் போட்ட எல்லாரும் பார்ப்பாங்க… நம்ம செய்தி எல்லாருக்கும் போய் சேரும்”  என்றார்கள்.


“மழை நேரமாக இருக்கு, நாளைக்கு நாம டெங்கு பிரச்சாரம் செய்வோம்..” என்றேன். “சார், நம்ம கடமை பிரச்சாரம் செய்வது தொடர்ந்து செய்வோம்..டெங்கு கொசுவை ஒழிப்போம் “என்று மிரட்டல் விட்டாள் ஐஸ்வர்யா.
அவளை பின் தொடர்ந்து அனைத்து மாணவர்களும் கோரஸ்ஸாக “ சார், கட்டாயம் போகணும் “என்று கத்திக் கொண்டே கிளம்பினார்கள்.  
“வாங்கடா…மேக்கப் போடுவோம்… ரெடியா இருப்போம் … மழைநின்றவுடன் நாடகம் போடுவோம்”என்றாள் சத்தியப்பிரியா. 
மழை தூறல் நின்றவுடன் அனைவரும் ஒருங்கிணைந்து நிர்மலா பள்ளி அருகில் உள்ள அழகர் நகர் பகுதியில் டெங்கு ஒழிப்பு பிரச்சார நோட்டீஸ் வழங்கி , மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்தார்கள். பலர் மாடிகளில் நின்று மாணவர்கள் கூறும் கருத்தை கேட்க ஆரம்பித்தார்கள்.  
  வந்தனம் அய்யா வந்தனம் வந்த ஜனங்க குந்தனும் என்று பாட ஆரம்பிக்க ஆங்காங்கே இருந்த மக்கள் மாணவர்களை நோக்கி வந்து கூட ஆரம்பித்தனர். அனைவருக்கும் வணக்கம் சொல்லி டெங்கு பிரச்சாரத்தினை தொடங்கினார். 


 
                                             


காமராசர் நாடார் முன்னேற்ற பேரவை பகுதி செயலாளர் வி.மதியழகன் அவர்கள் தலைமையில் டெங்கு ஒழிப்பு பிரச்சாரம் தொடங்கப்பட்டது. எம்.மகாலெட்சுமி அவர்கள் முன்னிலை வகித்தார்கள். 

   இரா.பிரியதர்ஷினி, நா.அமிர்தவர்ஷினி, பா.சத்தியப்பிரியா, ப.ஐஸ்வர்யா, அ.ரேஸ்மா, பா. ரேஷ்மா, இரா.காமராஜ், மு.முகேஷ், செ.முருகவேல், நா.வல்லரசு, மு.சண்முகவேல், க.சமயமுத்து, ,ப.இராஜபாண்டி, மு.கார்த்திகேயன், க.சூர்யா, அ.அர்சத் அய்பு, பெ.வழிவிட்டான், ப. முகமதுஅலி, ப. பாலாஜி, லி.காளிஸ்வரி ஆகிய மாணவர்கள் இன்று 6-12-2012 மாலை 5.30 மணிக்கு நிர்மலா மகளிர் பள்ளி அருகில் டெங்கு கொசு ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 


தெருமுனை பிரச்சாரத்தின் முடிவில் மாணவர்களுக்கு மகாலெட்சுமி அவர்கள் டீ வழங்கினார். அவ்வழியாக சென்ற எம் பள்ளி ஆசிரியர் திருமதி. மா.ஓம்சக்தி ஆசிரியர் அவர்களின் கணவர் திரு.இரவிசந்திரன் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு மிக்சர் பொட்டலம் இலவசமாக வழங்கினார். எம் பள்ளி எஸ்.எம்.சி குழுவில் இடம்பெற்றுள்ள கல்வியாளர் திரு. வி.சுரேந்திரன் (எ) பாபு எங்களுடன் இணைந்து தெருமுனை பிரச்சாரத்தில் ஈடுபடுவது மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.


   
     தெருமுனைப் பிரச்சாரத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிவருகிறது. துவக்கப் பள்ளி அளவில் மாணவர்கள் டெங்கு ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள், இச்சிறிய வயதில் மக்கள் பணியில் ஈடுபடுவதை பாராட்டிச் செல்கின்றனர். மக்கள் என்னை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது, இப்பணியினை சிறப்பாக செய்ய தூண்டும் டானிக்காக உள்ளது. மதுரையில் உங்கள் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பிரச்சாரத்தை செயல் படுத்த என் செல் நம்பர் 9344124572 போன் போடலாம். உதவிகள் வரவேற்கப்படுகின்றன.
  

14 comments:

சித்திரவீதிக்காரன் said...

நல்ல விசயம். உங்கள் பள்ளி மாணவமணிகளுக்கு வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் சேவை. அடுத்தடுத்து நாடகசேவை தொடரட்டும். நன்றி.

தமிழ்வாசி பிரகாஷ் said...

குழந்தைகளின் நாடகம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

டெங்கு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.

J.Balajiavm said...

really good sir, am also doing this in my area. god
allways with u and your students....thanks

Rathnavel Natarajan said...

டெங்கு காய்ச்சல் தடுப்புக்காக மாணவர்களை வைத்து தெருமுனை பிரசாரம் திரு சரவணன், மதுரை ஆசிரியர் நடத்தியிருக்கிறார். அதை பற்றிய பதிவை பகிர்கிறேன். நண்பர்கள் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி திரு சரவணன், வாழ்த்துகள் பிரகாஷ்.

மதுரை சரவணன் said...

thanks blalji, prakash , chiththiraikaran...

வி.பாலகுமார் said...

சிறப்பான முயற்சி. குழந்தைகளுக்கு வாழ்த்துகள்.

MANO நாஞ்சில் மனோ said...

சரவணனுக்கும் அவர்தம் மாணவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் அண்ட் வாழ்த்துகளும்....

Krishna Moorthy S said...

தெருவோர நாடகம், பிரசாரத்தில் டெங்குவை ஒழிக்க என்னதான் சொன்னாங்கன்னு கடேசி வரைக்கும் சொல்லவே இல்லையே!

நம்ம மருதைக்கார ஆசிரியர்களில் இப்படியும் நல்ல முயற்சிகள் பண்ணுற சிலபேர் இருக்காங்கன்னு மட்டும் நல்லாத் தெரியுது!

வாழ்த்துக்கள் சரவணன்!

koodal bala said...

மிகச்சிறந்த சேவை ...மக்களுக்கு பலனுண்டாகட்டும் ....

G.M Balasubramaniam said...


The children should practice what they preach. என்பதையும் மாணவ மாணவிகள் உணரச்செய்ய வேண்டும். நல்ல பணி. வாழ்த்துக்கள் சரவணன்.

Yoga.S. said...

ஆசிரியரதும்,மாணவர்களதும் முயற்சிக்குப் பாராட்டுக்கள்!

p.boopathi Raja said...

சிறு துளி பெரு வெல்லம் சிறு உள்ளங்களுக்கு கூட தெரிகிறது இதனால் வரும் பாதிப்புகள் நானும் எனது வீட்டையாவது சுத்தமாக வைத்துக்கொள்வேன் இந்த சிரியவர்களுக்கும் ஆசிரியருக்கும் எனது வாழ்த்துக்கள்

Palani Chamy said...

வாழ்துக்கள்!!!!தொடருங்கள்-----நன்றி!!!

cheena (சீனா) said...

அன்பின் சரவணன் - மாணவச் செல்வங்களை வைத்து ஒரு சமூக சேவை - மத்ரையில் இன்றைய தேவை இந்நாடகம். டெங்குவினை பற்றிய நாடகம். ஆசிரியர் தலைமையில் மாணவச் செல்வங்கள் வில்லுப்பாட்டு, நாடகம், தெருமுனைப் பிரச்சாரம் என சமூக சேவை புரிவதற்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment