Monday, December 3, 2012

இலவச மடிக்கணிணி எதிர் நோக்கியுள்ள சவால்கள் ...



உலகமே தகவல் தொழில்நுட்பம் சார்ந்து இயங்கி வருகிறது.  எல்லாத் துறைகளிலும் கணிணி ஆக்கிரமித்துள்ளது. பள்ளிக் கல்வித் துறை தேர்வு முறையில் கிரேடிங்க் சிஸ்டம் கொண்டு வந்து அனைவர் பாராட்டையும் பெற்றிருக்கும் இந்த முக்கிய தருணத்தில் இது குறித்து விவாதிக்காமல் இருப்பது நல்லது அல்ல. எதிர்கால சந்ததியினர் தொழில்நுட்ப ரீதியில் எந்த வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்ற ரீதியில் அரசு அனைத்து மாணவர்களுக்கும் இலவச மடிக் கணிணி கொடுக்க முடிவெடுத்து வழங்கிக் கொண்டு இருப்பது வரவேற்க்கத் தக்கது. ஆனால், இதுவும் இலவச சைக்கிள் மாதிரி சந்தைக்கு வந்து விடக்கூடாது என கல்வி யாளர்கள் கவலைக் கொண்டுள்ளது முக்கியமானது.

     அனைவருக்கும் கல்வி திட்டம் மூலமாக , தமிழ் நாட்டில் மாவட்டம் தோறும் CALL சென்டர்கள் இயங்கி வருகின்றன. துவக்க கல்வி முதலே கணிணி வழி கல்வி செயல்பட்டு வருகிறது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கு கணிணி குறித்து அடிப்படை அறிவுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. அசிம்பிரேம்ஜி பவுண்டேசன் மூலமாக கல்வி குறித்த சி.டிக்கள் வழங்கப்பட்டுள்ளது. இப்படி அரசு துறைச் சார்ந்த அனைத்து பள்ளிகளுக்கும் கணிணி குறித்த அடிப்படை அறிவு கல்வித் துறையால் வழங்கப்பட்டுள்ளது.
இனி கேரளா கல்வி துறையில் நடைபெறும் கணிணி சார்ந்த கல்வி முறையை நோக்குவோம். கேரளாவில் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு (மொத்தமுள்ள 5500 பள்ளிகளுக்கும்) கணிணி வழிக் கல்வி கொடுக்கப்படுகிறது.  பாடம் சார்ந்த மென்பொருட்கள் கொண்டு (உபண்டு சாப்டு வேரில் இயங்கக் கூடியவை) வாரத்தில் இரண்டு தியரி மற்றும் இரண்டு செய்முறை வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு அனிமேசன் ஆசிரியர்களால் கற்றுத்தரப்படுகிறது.
கேரள அரசு அனைத்து ஆசிரியர்களுக்கும்  (மொழிப்பாடம் கற்றுத்தரும் ஆசிரியர்கள் உட்பட) கணிணி பயிற்சி முறையாக கற்றுகொடுத்துள்ளது மட்டுமல்லாமல்,  பள்ளிகளில் மாணவர்களுக்கு அரசு மூலமாக வழங்கப்பட்டுள்ள கணிணிகள் மூலமாக சிறந்த கல்வி வழங்கி வருவது பாராட்டுக்குரியது. சுமார்ட் எசுகேசன் செயல் பட கேரள கல்வி துறை  அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஒரு எல்.சி.டி புரஜெக்டர் வழங்கியுள்ளது .  பாடம் சார்ந்த சி.டிக்கள் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒரு பள்ளிக்கு மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்து குறைந்தது (அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் உட்பட) பத்து முதல் பதினைந்து கணிணிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு மின் இணைப்பு வசதி வழங்க( ஒரு பிளக் பாயிண்டு, ஒரு பேன், ஒரு டுயுப்லைட்) ரூபாய் ஆயிரத்து ஐநூறு கொடுக்கப்பட்டுள்ளது.  ஹர்ட் வேர் கிளினிக் மூலமாக பழுதடைந்த கணினிகள் சரி செய்யப்படுகின்றன. 

     கணினி சார்ந்த கல்வி பாடவேளையில் ஒரு பகுதி.  வாரத்தில் நான்கு வகுப்புகள் கணினிக் கல்விக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. இதற்கென தேர்வுகளில் கட்டாயம் பாஸ் மார்க் எடுக்க வேண்டியுள்ளதாலும் மாணவர்கள் ஆர்வமாக கற்கின்றனர். ஆசிரியர்களும் தங்கள் மாணவரகளுக்கு பாடம் சார்ந்த திறனை கணிணிக் கொண்டு கற்றுத் தருவதால், புரிதல் எளிமையாவதுடன் நல்ல தேர்ச்சி விகிதமும் பெறமுடிகிறது என்கின்றனர்.

    இன்னும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி  மாணவர்களுக்கு எந்த வித அடிப்படை கணிணி அறிவும் இல்லாமல் இலவச மடிக் கணிணி வழங்குவது என்பது எதன் அடிப்படையில்….? என்பது கல்வியாளர்கள் கேள்வியாக உள்ளது.    உயர்ந்த நோக்கத்துடன் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச மடிக் கணிணி அடிப்படை கணிணி அறிவு இல்லாமல் வழங்குவதால் அதன் பயன்பாடு அறியாமல் சந்தைப் பொருளாவது உறுதி என பயம் கொண்டுள்ளனர் ஆசிரியர்களும், கல்வியாளர்களும்.

3 comments:

Yaathoramani.blogspot.com said...

இலவச மடிக் கணிணி அடிப்படை கணிணி அறிவு இல்லாமல் வழங்குவதால் அதன் பயன்பாடு அறியாமல் சந்தைப் பொருளாவது உறுதி என பயம் கொண்டுள்ளனர் ஆசிரியர்களும், கல்வியாளர்களும்/

/மிகச் சரியானக் கருத்தை
பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி


G.M Balasubramaniam said...


தற்கால கல்வி முறைகள் பற்றி உங்கள் பதிவின் மூலம் புரிந்து கொள்கிறேன். வெகு நாட்களாகக் காணோமே சரவணன்..

சித்திரவீதிக்காரன் said...

மடிக்கணினியில் மாணவர்கள் திரைப்படங்கள் ஏற்றிவைத்து வகுப்பறையில் பார்க்காவிட்டால் சந்தோஷந்தான்.

Post a Comment