பள்ளி தோட்டத்தின் பலகையில்
பூக்களை பறிக்காதீர்கள்
கையில் குச்சியுடன் ஆசிரியர்
வகுப்பறையில்…!
தெருவோர குப்பைதொட்டி
சிரிக்கிறது…
வகுப்பறையில் மாணவர்கள்…!
வகுப்பறையில்
மரப்பாட்சி பொம்மைகள்
ஆசிரியரின் தோதுக்கு ஏற்ப
ஆட்டுவிக்கப்படுகின்றன…
மரக்குச்சிகளின் தலையில்
மருந்திடப்பட்டாலும் …
அது உராய்சும் இடத்தின்
பதத்தை பொருத்தே
பற்றி எரிகிறது….!
9 comments:
மரக்குச்சிகளின் தலையில்
மருந்திடப்பட்டாலும் …
அது உராய்சும் இடத்தின்
பதத்தை பொருத்தே
பற்றி எரிகிறது….!///
அப்போ ஆசிரியர் கையில் மாணவர்கள் எதிர்காலம் இல்லையா? தலைவரே........
தலைவரே தேடிபிடிச்சு வந்துட்டோம்ல.... ஹி..ஹி...
உரசி பார்க்கிற முதல் இடமே ஆசிரியர் தானே….
அங்கே வாய்ப்பு இல்லை எனில் அவன் எங்கும் வாய் திறக்க வாய்ப்பு இல்லை தலை…! கவிதை சரிதானே..!
// தெருவோர குப்பைதொட்டி
சிரிக்கிறது…
வகுப்பறையில் மாணவர்கள்…! //
புரியலையே...
ஆசிரியர் அவர்களே வணக்கம்
விமர்சிக்கலாம?
ஒவ்வொரு மருந்திடப்பட்ட குச்சியையும் பதம் பார்த்து உரச உங்களைப்போல ஆசிரியர்கள் வேணும்.
//மரக்குச்சிகளின் தலையில்
மருந்திடப்பட்டாலும் …
அது உராய்சும் இடத்தின்
பதத்தை பொருத்தே
பற்றி எரிகிறது….!//
உண்மைதான். உங்களை மாதிரி பதமான இடமானால் பளிச்சென மாணவன் பிரகாசிப்பான். எத்தனைபேர் உங்களைப்போல் டெடிகேசனோடு செயல்படுகிறார்கள்?!
////பள்ளி தோட்டத்தின் பலகையில்
பூக்களை பறிக்காதீர்கள்
கையில் குச்சியுடன் ஆசிரியர்
வகுப்பறையில்…!
////
சிறப்பான கவிதை வரிகள் பாஸ்
பள்ளி தோட்டத்தின் பலகையில்
பூக்களை பறிக்காதீர்கள்
கையில் குச்சியுடன் ஆசிரியர்
வகுப்பறையில்…!
அருமை
Post a Comment