Wednesday, January 4, 2012

எது விழுமியம் தரும் கல்வி..?


    கல்வி சாலைகள் பெருகிவரும் இச்சூழலில்.. கல்வியின் தரம் உண்மையில் வளமை குறைந்து இருந்த போதிலும்,  ஒரு வித மாய தோற்றத்துடன் ஓங்கி பெருகி இருப்பதைப்  பார்க்கும் போது மக்கள் மேல் அதிர்ப்தி ஏற்படுகிறது. இன்னும் பள்ளி கூடங்களையும் , கல்லூரிகளையும்  ஆரம்பிக்க தொழில் அதிபர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஏனெனில் , கல்வி தொழில் ஆகி, முதலீடை நஷ்டமடையாத அசையா வைப்பு நிதியாக்கி, வட்டிக்கு வட்டி கணக்கு பார்த்து குட்டிப் போடும் நல்ல தொரு வியபார நிறுவனமாக உள்ளது. போட்டி உலகில் பெற்றோரும் எதையும் எதிர்ப்பாராமல் இங்கு சேர்த்தால், நல்ல வேலை வாய்ப்பு உள்ளது , எதிர்காலம் உள்ளது என முடிவுடன் பணத்தை அள்ளி கொட்டுகிறார்கள். கல்வியின் முழு தன்மை , விழுமம் செயல் இழந்து , நவீனத்துவத்தில், பணம் போட்டால் பணம் என்கிற ரீதியில் செயல் பெற்று , உண்மையான ஆற்றலை , மனிதன் புதைத்துள்ள திறனை மங்கச் செய்கிறது.
இதன் வெளிப்பாடு தான் … லஞ்சம், லாவண்யம். ஆயிரம் அன்னஹசாரே வந்தாலும் , அடிப்படையில் ஓட்டையை வைத்துக் கொண்டு சட்டம் இயற்றி சரி செய்து விடலாம் என்றால் முடியவே முடியாது. ஆதியாய் இருக்கும் கல்வி முறையில் விழுமியங்கள் பூஜ்ஜியமாய் இருக்கும் போது , மேல்மட்டத்தில்  லஞ்சத்தை ஒழிப்பது என்பது முடியாத காரியம்.

    தேசிய ஒருமைப்பாடு , வேற்றுமையில் ஒற்றுமை என ஏட்டளவில் , உதட்டளவில் விழுமியங்களை கற்று கொடுத்ததன் விளைவு இன்று முல்லை பெரியாறு பிரச்சனை. அன்றாடம் ஒருவரின் தீக்குளிப்பு. சிந்தியுங்கள். தொடரும் வன்முறை தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஏற்படப்போகும் ஆபத்தை  உணராமல் தொடரும் போரட்டங்கள். கேரள அரசின் பிடிவாதம்.  மக்கள் பற்றிய சிந்தைனைகள் அற்ற அரசியல் சதுரங்கத்தில்  மக்கள் கொண்டுள்ள வெறுப்பின் வெளிப்பாடு போரட்டமாக வெளிப்படுவதை நினைக்கும் போது , கல்வி முறையில் இந்திய அளவில் விழுமியங்கள் குறைந்து , வட்டார அளவில் அவை வித்தியாசப் பட்டுள்ளதை தெள்ள தெளிவாக காட்டுவதாகவே அமைகிறது.   நதி நீர் பிரச்சனையில் இந்தியா முழுவதும் நதிகளை ஒன்றிணைக்கும் முயற்சி செயலாக்கம் தரும் வகையில் நீர் பங்கீடுகள் தனிப்பட்ட ஆணையத்தின் கட்டுப்பாட்டில் , மாநில அரசுகளின் முடிவு இன்றி செயல் படும் அமைப்பின் கையில் கொடுக்கப்பட வேண்டும்.

   எக்ஸைல் நாவலில் சாரு குறிப்பிடுவது போல தமிழ்நாட்டில் வாழ்வது என்பது” ஒவ்வொரு நாளுமே மரண வேட்டை தான். ஒவ்வொரு நாளுமே உயிரைத் தக்க வைத்துக் கொள்வதற்காகப் போராடுவதிலேயே நம் சக்தியெல்லாம் போய்விடுகிறது”. எங்கும் எதற்கும் போராட்டங்கள். அணு உலை, மருத்துவர் கொலை, நான்கு வழிச்சாலையில் கோர விபத்து சாலை முற்றுகை… என சொல்லி மாயாது. செய்திகளை தேடி அலைந்த காலம் மாறி விட்டது. இவையெல்லாம் அடிப்படையில் நம் கல்வி முறையில் எதோ ஒரு இடத்தில் ஏற்பட்டுள்ள தவறின் அடையாளமாகவே நான் கருதுகின்றேன். விதி மீறல் என்பதே விழுமியம் அற்ற தன்மை. கல்வி ஆசிரியர்களிடம் இருந்து முழுமையாக வெளிப்பட வில்லை என்பதை விட அடிப்படையில் ஆசிரியர்களின் நியமனம் தவறாக உள்ளது என்பதையே சுட்டிக் காட்டுகிறது. கற்பித்தல் என்பது செயல் வடிவமாக்கப்பட்டு , அதன் உண்மை நிலை அறியாத அல்லது புரியாத தன்மையுள்ள ஆசிரியர்கள் வேலையில் அமர்த்த படுவதால், மாணவனிடம் விழுமியங்களும் , கற்றல் திறன்களும் முழுமையாக சென்றடைய வில்லை . அதன் தொடர்ச்சி  தான் மேல் படிப்பில் ஆதாயத்தை நோக்கிய கல்வி மதிப்பீடு . (தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரிகளைப் பொறுத்து வேலை வாய்ப்பு )

    அரசு இலவச கல்வியை கொண்டு வருவதால் மட்டும் இந்த நிலமை மாறிவிடும் என்பது அபத்தம். அதற்காக பொது பள்ளிமுறையை வேண்டாம் என சொல்வது அதை விட அபத்தம். கல்வியாளர்கள் சிறந்த ஆர்வமுள்ள , தன் பணியின் தன்மையை முழுவதும் உணர்ந்த , அற்பணிப்பு எண்ணம் கொண்ட ஆசிரியர்களை துவக்கப்பள்ளி முதல் பணியமர்த்த வேண்டும். சிறப்பாக செயல் படும் அலுவலர்களை கவுரவிப்பது போல , வட்டார அளவில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் ஆர்வம், அற்பணிப்பு , மாணவர்களின் விழுமியங்களின் மீது கொண்டுள்ள ஈடுபாட்டை கணித்து ஒரு விருது வழங்கலாம் . இது கூடுதலாக ஈடுபாட்டை கொடுப்பதுடன் பிற ஆசிரியர்களுக்கும் தூண்டுகோலாக அமையும். முதல்வர் ஆசிரியர்கள் மீது கவனம் செலுத்தி , நல்லாசிரியர் விருது போல ஒரு விருதை ஏற்படுத்தலாமே…!   

8 comments:

MaduraiGovindaraj said...

ஆசிரியருக்கு வணக்கம்
தமிழ்நாட்டில் பல பிரச்சனையை பற்றி குறிபிட்டுள்ளார்
ஆனால் மதுரை குடிநீர் ஆதாரம் முல்லை பெரியாறு வையும் சேர்த்து இருக்கலாம்
"ஆசிரியர் இனம் முல்லை பெரியாறுக்கு என்ன செய்துள்ளது "

/// எக்ஸைல் நாவலில் சாரு குறிப்பிடுவது போல தமிழ்நாட்டில் வாழ்வது என்பது” ஒவ்வொரு நாளுமே மரண வேட்டை தான். ஒவ்வொரு நாளுமே உயிரைத் தக்க வைத்துக் கொள்வதற்காகப் போராடுவதிலேயே நம் சக்தியெல்லாம் போய்விடுகிறது”. எங்கும் எதற்கும் போராட்டங்கள். அணு உலை, மருத்துவர் கொலை, நான்கு வழிச்சாலையில் கோர விபத்து சாலை முற்றுகை… என சொல்லி மாயாது. செய்திகளை தேடி அலைந்த காலம் மாறி விட்டது. இவையெல்லாம் அடிப்படையில் நம் கல்வி முறையில் எதோ ஒரு இடத்தில் ஏற்பட்டுள்ள தவறின் அடையாளமாகவே நான் கருதுகின்றேன். விதி மீறல் என்பதே விழுமியம் அற்ற தன்மை. கல்வி ஆசிரியர்களிடம் இருந்து முழுமையாக வெளிப்பட வில்லை என்பதை விட அடிப்படையில் ஆசிரியர்களின் நியமனம் தவறாக உள்ளது ///

சித்திரவீதிக்காரன் said...

இன்றைய கல்விமுறை மனிதத்தை கற்றுத்தருவதில்லை. சகஉயிர் மீதான அன்பை கற்பிக்காத கல்விமுறையை மாற்றி அமைக்க வேண்டும். வெறும்தகவல் களமாகவே இன்றைய கல்விமுறை உள்ளது. பகிர்விற்கு நன்றி.

MANO நாஞ்சில் மனோ said...

கண்டிப்பாக மனிதநேயம் பற்றி கல்வியில் குழந்தையில் இருந்தே கற்று கொடுக்கவேண்டும்...

Thooral said...

தேசிய ஒருமைப்பாடு , வேற்றுமையில் ஒற்றுமை என ஏட்டளவில் , உதட்டளவில் விழுமியங்களை கற்று கொடுத்ததன் விளைவு இன்று முல்லை பெரியாறு பிரச்சனை. அன்றாடம் ஒருவரின் தீக்குளிப்பு. சிந்தியுங்கள். ..

அருமை சார்..
நம்ம கல்வியும்
பணம் என்ற ஒன்றை குறி வைத்தே
பள்ளிகளில் நடத்தபடுகிறது ...
வீடுகளில் கூட
பெரிய வேலைக்கு போகணும்
காசு சம்பாதிக்கணும்
அப்படி சொல்லி தான் வளர்கிறார்கள் ...

கல்வி நம் நாட்டில் எப்போது
பொருள் வளர்க்க மட்டும் அல்லாமல்
அறிவு வளர்க்கவும் பயன்படுகிறதோ
அப்போது தான் இந்த நிலை மாறும்

சசிகலா said...

//கற்பித்தல் என்பது செயல் வடிவமாக்கப்பட்டு , அதன் உண்மை நிலை அறியாத அல்லது புரியாத தன்மையுள்ள ஆசிரியர்கள் வேலையில் அமர்த்த படுவதால், மாணவனிடம் விழுமியங்களும் , கற்றல் திறன்களும் முழுமையாக சென்றடைய வில்லை . //
உண்மைதாங்க இதற்க்கு கல்வி நிறுவனங்களும் , பெற்றோர்களும் எதையும் கவனியாத அரசும் ஒரு காரணம் தான் .

சசிகலா said...

வலைச்சரத்தில் மதுமதியின் அறிமுகத்தோடு இங்கு வந்தேன் வாசித்தேன் அருமைங்க .

Earn Staying Home said...

நன்று.

Earn Staying Home said...

நன்று.

Post a Comment