Friday, January 6, 2012

மருத்துவர்களாலும் ஆசிரியர்களாலும் புறக்கணிக்கப்பட்ட குறைபிரசவக் குழந்தையின் உலக சாதனை


    வானொலியில் கணீர் குரலுக்கு சொந்தக்காரர் சேது ராக மாலிகா தன் குழந்தைக்காக பட்டுள்ள கஷ்டங்களை கேட்டால் நீங்கள் கண்ணீர் வடித்து விடுவீர்கள். எட்டுமாதத்தில் குறைபிரசவம் … தட்டை குச்சியாய் இன்குபேட்டரில் வைக்கப்பட்ட குழந்தையை பார்க்க வந்து செல்வோரும் , மருத்துவரும் இக்குழந்தை இறந்து விடும் .. இதற்கு மேல் செலவழிக்காதீர்கள் என கை விரித்து விட்ட நிலையில், தந்தை கல்யாண குமார சாமி மற்றும் ராக மாலிகாவின் தன்நம்பிக்கையிலும் தெய்வ நம்பிக்கையிலும் பிழைத்து வந்த குழந்தை விசாலினி.  வாய் பேச வில்லை என மருத்துவர்கள் பலரை பார்த்துள்ளார். அனைவரும் அறுவை சிகிச்சை செய்தால் தான் பேச்சு வரும் என கைவிரித்து விட்டனர். இது குறைமாதத்தில் பிறந்ததால் குறைபாடுள்ள குழந்தை ,தட்டையான நாக்கு அறுவை சிகிச்சை அவசியம் என்று பலர் முன்மொழிந்த நிலையில் மருத்துவர் ராஜேஸ் விசாலினியிடம் புதைந்துள்ள அற்புத ஆற்றலை கண்டு ஐக்யு டெஸ்ட் எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

”என்ன கதை விடுறீங்களா ? குறைமாதம்… பேச்சுக்குறைபாடு … இதுக்கு எதுக்குங்க ஐக்யூ டெஸ்ட் ? யாராவது காதுல பூ சுத்தியிருப்பான் அவன் கிட்ட போய் சொல்லு …” என்று நீங்கள் விமர்சிப்பது கேட்கிறது. ”ஏன் ?எதற்கு? எப்படி? ” ன்னு கேள்வி கேட்டால் தான் அறிவு வளரும் என்றார் சாக்ரடீஸ்.  நம்ம விசாலினி இரண்டு மாத குழந்தையாக இருக்கும் போதே டாக்டரிடம்…” ஏன் இந்த விசமம் புடிச்ச மீனு தண்ணில இருந்தா உயிர்வாழுது.. தரையில வந்தா செத்து போகுது…? என டாக்டரிடம் கேள்வி கேட்டுள்ளார். இரண்டு வயதில் இப்படி சிந்தனை வர வாய்ப்புயில்லை என உணர்ந்த டாக்டர் ராஜேஸ் இவர்களை சரியான பாதையில் பயணிக்க வைத்துள்ளார். குழந்தைக்கு மதுரை மருத்துவர் உளவியலாளர் நம்மாழ்வாரிடம் பினேகாமத் என்ற ஐக்யூ டெஸ்ட் எடுத்தப்போது அவரின் நுண்ணறிவு திறன் ஈவு 225 என அறியப்பட்டுள்ளது.

      சாதரண மனிதனின் நுண்ணறிவு திறன் ஈவு 90 முதல் 110 வரை. மனவளர்ச்சி குன்றியோருக்கு ஐக்யூ லெவல் 60 விட குறைவு.  அதிக பட்சமாக கவிஞர் பைரன் ,தத்துவ மேதை பேகன் ஆகியோருக்கு ஐக்யூ 200 தானாம். அத விடுங்க நம்ம பில்கேட்சுக்கு ஐக்யூ லெவல் 160 தான் பாருங்களேன். இது வரை உலக சாதனைக்கான ஐக்யூ லெவல் சவுத் கொரியாவின் கிம் யுங் எங் (Kim Ung Yung)   உடையதாம் IQ 210. உலக சாதனைக்கான பதிவில் வெளிவர போதிய வயது வரம்பு இல்லை என்பதால் இன்னும் பதியப்பட வில்லை எனப்து வருத்தத்துக்குரியது.
     
  அதை விட கொடுமை பள்ளிகளில் இவரின் நுண்ணறிவு திறன் மற்றும் கேள்வி கேட்கும் ஆற்றல், தான் படிக்கும் வகுப்பையும் தாண்டி பிற வகுப்பு பாடங்களையும் ஒரே வருடத்தில் முடிக்கும் அறிவு ஆற்றலை கண்டு இவரை பள்ளியில் இருந்து தூரத்தியது தான். அதிக அறிவு ஆபத்து என்பது விசாலினியையும் விட்டு வைக்க வில்லை. தற்போது ஆறாம் வகுப்பு படிக்க வேண்டும் ஆனால் எட்டாம் வகுப்பு பாடங்களை படிக்கிறாள். இதற்கு இவளின் பெற்றோர்கள் போராடிய கொடுமைகளை அவரின் வீட்டில் அடிக்கி வைக்கப்பட்டிருக்கும் யுனிபார்ம்களே சாட்சி என இவரின் பாட்டி சிரித்து கொண்டு சொல்கிறார். இன்னும் கல்வி துறையில் இருந்து இவளுக்கு டபுள் புரமோசன் கொடுக்க எந்த ஆணையும் பெறப்படவில்லை என்பது கொடுமையிலும் கொடுமை. வெளிநாட்டில் இக்குழந்தை பிறந்திருந்தால் தலையில் வைத்து கொண்டாடியிருப்பார்கள். வெளிநாடுகளில் விசாலினியை தத்து கேட்கின்றனராம். 
  
    விரைவில் தமிழக முதல்வர் அம்மாவின் பார்வை கிட்ட நாம் அனைவரும் ஒன்று சேர்வோம் . அதன் தொடக்கம் தான் அஅதிமுகவின் அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ திரு. இசக்கி சுப்பையன் அவர்களிடம் பிளாக்கர்கள் ஒருங்கிணைந்து தமிழக முதல்வர் அம்மாவிடம் விசாலினியை சந்திக்கவும் அதன் மூலம் உலகுமுழுவதும் புகழ் பரப்பவும் ஏற்பாடு செய்து தருமாறு சிறிய வேண்டுகேளை கொளசல்யா , செல்வா ஸ்பிக்கிங் ஆகியோரின் முயற்சியில் வைத்துள்ளோம். மதுரையில் இருந்து சீனா அய்யாவும் , நானும் கலந்து கொண்டது மகிழ்ச்சிக்குரிய விசயமாகும்.

   ஐக்யூ வைத்து மட்டும் விசாலினையை நாங்கள் முன் நிறுத்த வில்லை. அமெரிக்காவின் முன்னணி நிறுவனம் CISCO நிறுவனம் நடத்தும் ஆன்லைன் தேர்வான (எம்.பி.ஏ மற்றும் பி.டெக் , எம்.இ. மாணவர்கள் எழுதும் கடினமான தேர்வு)  CCNA தேர்வை தன் பத்தாவது வயதில் எழுதி முடித்துள்ளார். நான்காம் வகுப்பு மாணவி எழுதும் தேர்வா இது?




    இந்த தேர்வை தன் பன்னிரெண்டாவது வயதில் முடித்த பாகிஸ்தான் மாணவன் இர்டிசா ஹைதர் என்பவனை பாகிஸ்தான் நாடு ராணுவ வெப்சைட்டில் PRIDE OF PAKISTHAN என குறிப்பிட்டுள்ளதை நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன். இந்தியாவில் விரைவில் இப்படிபட்ட அங்கீகாரம் பாளையங்கோட்டை விசாலினிக்கு கிடைக்க அனைவரும் முயற்சி மேற்கொள்வோம்.

    இவர் அகில உலக சான்றிதழ்களான மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் MCP , ORACLE நிறுவனத்தின் OCJP , CISCO நிறுவனத்தின் CCNA SECURITY முடித்துள்ளார். இன்னும் பல கணினி பட்டங்களை படிக்கிறார்.
அவருக்கு தமிழக கல்வி துறையின் சார்பாக கூடுதல் வகுப்பில் பயில்வதற்கான புரமோசன் ஒப்புதல் ஆணை பெறவும் ,அரசு முறையான அங்கீகாரம் வழங்கவும் அனைத்து பிளாக்கர்களும் உதவுவோம்.   

15 comments:

cheena (சீனா) said...

அன்பின் சரவணன் - அனைத்துச் செய்திகளையும் நினைவில் நிறுத்தி - அழகான உரையாக வடித்தமை நன்று. நினவாற்றல் அபாரம். பதிவு நன்கு அமைந்துள்ளது. நல்லதே நடக்கும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Balakumar Vijayaraman said...

நல்வாழ்த்துகள் விசாலினி :)

Unknown said...

நாம் அனைவரும் இந்த முயற்சியை ஒருங்கினைப்போம்...

MANO நாஞ்சில் மனோ said...

விசாலினிக்கு வாழ்த்துக்கள், விபரங்களை விரிவாக விளக்கியமைக்கு நன்றி...!!!

தமிழ்மகள் உலகெங்கும் சுடர்விட பதிவர்கள் நாம் ஒன்றினைவோம் வாருங்கள்...

Pathman said...

இந்தக் குழந்தையின் சாதனையை மதிக்காத , தமிழகம் , இந்தியா எப்படி முன்னேறும் ..இதை வெளிக்கொண்டுவந்த சரவணனுக்குப் பாராட்டுக்கள்.... முகப்புத்தகத்தில் இக்கட்டுரையை ப்ரசுரிக்க முயன்றேண் முடியவில்லை http://veeluthukal.blogspot.com/2012/01/blog-post_06.html

Rathnavel Natarajan said...

மிக்க நன்றி சரவணன்.
எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
மனப்பூர்வ வாழ்த்துகள்.

Thenammai Lakshmanan said...

மிக அருமை சரவணன்.. நல்ல பதிவு.. முடிந்தால் அவளை சந்திக்கணும்.:)

திருநெல்வேலி வெங்கட்ராமன் said...

correct sir intha ponnoda interview exam paas pannina irandavathu nale en programla vanthuchu i too share this link in social networks let us join to give a good exposure for that girl

கடம்பவன குயில் said...

உண்மைதான் சார். நம் இந்தியாவில் பிறந்ததால் இக்குழந்தையின் சாதனை இத்தனை நாட்களாகியும் உரிய அங்கீகாரம் உலகளவில் கிடைக்காமல் இருக்கிறது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். வாழ்த்துக்கள் விசாலினி.

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல அலசல்.. சரவணன்

MaduraiGovindaraj said...

// விரைவில் தமிழக முதல்வர் அம்மாவின் பார்வை கிட்ட நாம் அனைவரும் ஒன்று சேர்வோம் . அதன் தொடக்கம் தான் அஅதிமுகவின் அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ திரு. இசக்கி சுப்பையன் அவர்களிடம் பிளாக்கர்கள் ஒருங்கிணைந்து தமிழக முதல்வர் அம்மாவிடம் விசாலினியை சந்திக்கவும் அதன் மூலம் உலகுமுழுவதும் புகழ் பரப்பவும் ஏற்பாடு செய்து தருமாறு சிறிய வேண்டுகேளை கொளசல்யா , செல்வா ஸ்பிக்கிங் ஆகியோரின் முயற்சியில் வைத்துள்ளோம். மதுரையில் இருந்து சீனா அய்யாவும் , நானும் கலந்து கொண்டது மகிழ்ச்சிக்குரிய விசயமாகும்.//
உங்கள் முயற்சி வெற்றிபெரும்

www.visionconsultancy.co.in said...

உண்மைதான் சார். நம் இந்தியாவில் பிறந்ததால் இக்குழந்தையின் சாதனை இத்தனை நாட்களாகியும் உரிய அங்கீகாரம் உலகளவில் கிடைக்காமல் இருக்கிறது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். வாழ்த்துக்கள் விசாலினி.

Kousalya Raj said...

முதலில் விரிவாக/விளக்கமாக பதிவிட்ட உங்களுக்கு என் பாராட்டுகள்...

பிறந்ததில் இருந்து பல சிக்கல்கள் சோதனைகளை தாண்டி வந்த விசாலினி பற்றி அவளின் பெற்றோர்கள் சொன்ன எல்லா விசயங்களையும் நினைவில் நிறுத்துவது மிக சிரமம்...அவ்வளவு இருக்கிறது !! இருப்பினும் வெளிஉலகம் இன்னும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தில் அவர்களிடம் இருந்து செய்திகளை நீங்கள் கவனமெடுத்து கேட்டுதெரிந்து கொண்டதை நான் கவனித்தேன்.

விசாலினியின் திறமை உலகறிய செய்ய வேண்டும் என்கிற ஆர்வம்/அக்கறையில் வெகு தொலைவில் இருந்து நீங்க, சீனாஐயா, சி.பி.செந்தில்குமார் வந்திருந்து இந்த விழாவில் கலந்து கொண்டதுக்கு என் மனமார்ந்த நன்றிகளை சொல்லி கொள்கிறேன்.

கே.ஆர்.பி.செந்தில் சொல்வது போல் இந்த முயற்சியை நாம் அனைவரும் ஒருங்கிணைக்கவேண்டும்...தொடர்ந்து நம் முயற்சிகளை செய்துகொண்டே இருப்போம்...

சரவணன் உங்கள் அனைவரின் ஒத்துழைப்பால் தான் சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் இச்செய்தியை அழுத்தமாக கொண்டு சேர்க்க முடிந்தது. மீண்டும் நன்றிகள் சரவணன்.

சித்திரவீதிக்காரன் said...

விசாலினியின் ஆற்றலைக் கண்டு வியப்பாய் இருக்கிறது. அவருக்கு உரிய அங்கிகாரம் கிடைக்க வேண்டிக்கொள்கிறேன். பகிர்விற்கு நன்றி.

Chitra said...
This comment has been removed by the author.

Post a Comment