Monday, January 2, 2012

இலவச கல்வி அரசு அறிவிக்குமா…!


அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….
     சமச்சீர் கல்வி சென்ற ஆண்டு நம்மை வாட்டி வதக்கி எடுத்து விட்டது. தரமான கல்வி அனைத்து மாணவர்களுக்கும் போய் சேர வேண்டும் என்பதில் அனைவருக்கும் மாற்று கருத்து இல்லை. இன்று மெட்ரிக் பள்ளிகள் பெருகி விட்ட சூழலில் ,சமச்சீர் பாடதிட்டம் , சமச்சீர் கல்வியில்  சமம் என்ற  மாய தோற்றத்தை உருவாக்கியுள்ளது.   தமிழகத்தில் இன்னும் பல்வேறு போர்டுகள்(வாரியங்கள்) இருந்து கொண்டு , ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி கொண்டு தான் உள்ளது. பொது பள்ளி முறை நடைமுறைப் படுத்தப்பட  வேண்டும். இப் புத்தாண்டு தமிழக அரசு மூலமாக அனைத்து கல்வி நிறுவனங்களையும் ஏற்ற தாழ்வுகள் எதுவும் இன்றி , அரசு நிறுவனமாக மாற்றி, மாணவர்களுக்கு இலவச கல்வியை வழங்க வேண்டும். இதற்கு அனைத்து கல்வியாளர்களும், அரசியல் வாதிகளும், பொது மக்களும் அரசுக்கு தந்தி மூலம் கோரிக்கையை வைக்க வேண்டும் என்ற சின்ன ஆசையை இந்த புத்தாண்டில் முன் மொழிகின்றேன்.  

    ஜனவரி முதல் அனைத்து பள்ளிகளும் 4.40 மணி வரை செயல்பட்டு வருவது மகிழ்ச்சியை தருகிறது. இதனால், பத்தாம் வகுப்பு மாணவர்கள் கூடுதலாக கல்வி பயில்வார்கள். அவர்களுக்கு பாட சுமையை திணிக்கும் விதமாக பள்ளிகளில் ஆசிரியர்கள் செயல்படுவது, அவர்களுக்கு கல்வியில் இனிய சூழலை உருவாக்காது என்பது மட்டும் மாணவர் நிலையில் நின்று உறுதியாக கூற முடியும். ஆகவே, பாடங்களை முடிக்க வேண்டும் என்பதுடன் அவர்களின் மனநலனையும் புரிந்து செயல் பட்டால் கற்றல் இனிமையாக அமையும் . ஆசிரியர்கள் புரிந்து செயல்படுவார்கள் என நம்புவோம்.    

    மாணவர்களின் கல்வி பாதிப்படையும் என்பதால் , பெற்றோர்கள் கல்வி நிறுவனங்கள் வசூலிக்கும் தொகையை செலுத்தி படிக்க வைக்கின்றனர். டி கட்டணங்களில் அரசு விதிகளுக்கு புறம்பாக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதை நிறுத்த வேண்டுமென்றால் , அனைத்து பள்ளிகளையும் பொதுவாக அரசே எடுத்து நடத்த வேண்டும். கட்டண விவகாரம் என்பது முற்றுபுள்ளிப் பெறும்.


     தரமான கல்விக்கு ஆசிரியர் மாணவர் விகிதம் மாற்றி அமைக்கப் பட வேண்டும். அண்மைக் கல்விக்கு ஆதரவு தர வேண்டும்.  இலவச கட்டாய கல்வி சட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும். இப்படி பல கனவுகள் காண்கிறேன். தமிழக முதல்வர் என் போன்ற ஆசிரியர்களின் கனவை எப்படி பொங்கல் போனஸ் முன்கூட்டியே அறிவித்தார்களோ அதேப்போன்று , பொது கல்வி முறையை செயல் படுத்த விரைவில் அறிவிப்பை வெளியிடுவார்கள் என நம்புகிறேம்.

5 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

தலைவரே...
அறிவிப்பு விரைவில் வந்தால் மகிழ்ச்சியே,,,,

அ. வேல்முருகன் said...

சரவணன் நல்ல எண்ணம். கல்வி மனிதனின் அடிப்படை உரிமை.

ஆனால் இந்த அமைப்பில் வருவது கடினம். அப்படி கொண்டு வருவதாக இருந்தாலும். அரசு பள்ளிகளின் எண்ணிக்கையை குறைத்து விடுவார்கள்.

கல்வி எப்போது வியாபாரமாக பார்க்கப்பட்டதோ அப்போது இதுபோன்று கனவு காண்பது தவறு

கனவு நிசமாக மாற்ற என்ன செய்ய வேண்டும்?......

G.M Balasubramaniam said...

கல்வியே சேவையாக எண்ணி செயல்படும் சரவணன், உங்கள் கனவு எதில் மெய்யானாலும் அரசே கல்வியை முன் நின்று நடத்த வேண்டும் என்பது நடக்க ஏதுவானதல்ல. கல்வி வியாபாரிகள் இதை நடத்த விட மாட்டார்கள். எல்லாக் கல்வி நிலையங்களிலும் 25% ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு என்னும் ரைட் டு எஜுகேஷன் திட்டமே அமலுக்கு வரவில்லையே. முதலில் எல்லோருக்கும் கல்வி என்பது சாத்திய மாகட்டும். உங்கள் கனவு பலிக்க வாழ்த்துக்கள்.

MaduraiGovindaraj said...

//ஜனவரி முதல் அனைத்து பள்ளிகளும் 4.40 மணி வரை செயல்பட்டு வருவது மகிழ்ச்சியை தருகிறது. ஆகவே, பாடங்களை முடிக்க வேண்டும் என்பதுடன் அவர்களின் மனநலனையும் புரிந்து செயல் பட்டால் கற்றல் இனிமையாக அமையும் . ஆசிரியர்கள் புரிந்து செயல்படுவார்கள் என நம்புவோம். //

" நம்புவோம்"
// என் போன்ற ஆசிரியர்களின் கனவை எப்படி பொங்கல் போனஸ் //
விசயத்துல கரெக்டா இருங்க

நன்றி

சித்திரவீதிக்காரன் said...

கல்வியும், மருத்துவமும் வியாபாரமாகி போன சூழலில் இன்று பொதுக்கல்விமுறை வர சாத்தியமேயில்லை. வியாபாரிகள் வரவிட மாட்டார்கள்.
பகிர்விற்கு நன்றி.

Post a Comment