Monday, December 19, 2011

சமூக அக்கறையில் ஈரோட்டின் பங்கு


   ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக கடந்த ஞாயிறு காலை பதிவர்கள் சந்திப்பு நடைப்பெற்றது. நாளைய சமூகத்தை உருவாக்குவதில் வலைப்பதிவர்களின் பங்கு எவ்வளவு முக்கியத்துவம் வாயந்தது என்பதை பதினைந்து நபர்களை மேடையேற்றி அறிமுகம் செய்து வைத்த போது உணரச் செய்தது. 

        
         ஏதோ பொழுது போக்குக்கு எழுதுபவர்களை , இணையத்தின் முக்கியத்துவத்தை இந்த அறிமுகம் உணர்த்துவதாக இருந்தது. புதியவர்களுக்கு ஒரு அறிமுகத்தையும் , அவர்களுக்கு தேவையான உற்சாகத்தையும் , அவர்களுக்கு ஒரு வழிகாட்டுதலையும் இந்த சந்திப்பு ஏற்படுத்தியுள்ளது என்பது யாராலும் மறுக்க முடியாது. 







         சமூகப் பங்களிப்பு என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாயந்தது என்பதை உணர்த்துவதாக சிறப்பு அழைப்பாளர் ஸ்டாலின் குணசேகரனின் பேச்சு அமைந்தது. எழுத படிக்க தெரிந்த எவனும் புத்தகம் வாங்கி வாசிக்க  வேண்டும் என்ற உணர்ச்சிகரமான பேச்சு அவரின் சமூக அக்கறையை உணர்த்துவதாக அமைந்தது.  



    சமூகத்தில் சிறந்த தலைவனாக விளங்க உழைப்பும் , உண்மையும் எவ்வளவு முக்கியத்துவம் . ஆம் , பிற துறைகளில் உழைப்பும் , உண்மையும் முழுமையாக  இல்லையெனில் பாதிப்பது என்பது அவர்களுக்கு மட்டுமே. ஆனால், சமூக பங்களிப்பில் என்பது இச்சமூகத்தின் ஒட்டு மொத்த சீரழிவுக்கும் காரணமாகவும் , சமூகத்தின் நேர்மறையான வளர்ச்சிக்கு பாதகமாக அமைந்துவிடும்.   கதிர் , தாமோதர் சந்துரு, ஜாபர் , லவ்டேல் ….என பெயர் சொல்லி எழுதி தள்ள ஆசை இருந்தாலும் ,ஈரோடு பதிவர்களின்  தோழமைப்பண்பு, கட்டுப்பாடு, நம்பகத்தன்மை , கவர்ச்சி , அத்துடன் போட்டிப்போடும் பண்பு என்னை வியக்க வைக்கிறது. அனைவரின் ஒட்டுமொத்த உழைப்புக்கு கிடைத்த ஒரு பரிசு தான் அரங்கம் நிரம்பி வழிந்தற்கு சாட்சியாக அமைந்திருந்தது. கல்யாண விருந்தை போன்ற பிரமிப்பு… முதல் நாள் இரவில் இருந்து ஆரம்பித்து , மறுநாள் மதியம் வரை சைவம் , அசைவம் என நிறைவான விருந்து…. இவர்களால் மட்டும் எப்படி சாத்தியம் என மதுரை பதிவர்களை மட்டுமல்ல அனைத்து பதிவர்களையும் வாய் பிளக்க செய்யும் பெருமை ஈரோடுக்கே உள்ள தனித் திறமை ….! 



    இந்த சந்திப்பு எனக்கு நிறைய நண்பர்களை தேடி தந்துள்ளது. புது உற்சாகத்தை , உத்வேகத்தை கொடுத்துள்ளது. சமூகத்தில் எனக்குள்ள பொறுப்பை உணர்த்துவதாக உள்ளது. இது வருங்காலத்தில் நல்ல மாற்றம் தரும் அரசியல் அமைப்பாகவும் மாறலாம் என மணிஜி சிரித்துக் கொண்டே வெற்றி சின்னத்தை காட்டி … இந்த நிகழ்ச்சியின் வெற்றியை உறுதிப்படுத்துவதை பாருங்கள். 

7 comments:

Ravikumar Tirupur said...

சுருக்கமான நேர்த்தியான பதிவு நன்றி

Yaathoramani.blogspot.com said...

சுருக்கமான தெளிவான பதிவு
மதுரையில் உங்களால் முன்னின்று ஓர் அமைப்பை
ஏற்படுத்த முடியும் எனக் கருதுகிறேன்
முயன்றால் நானும் உடனிருக்க தயாராயிருக்கிறேன்த.ம 1

செல்ல நாய்க்குட்டி மனசு said...

ஆமாம் சரவணன் ரமணி சார் சொன்னது போல மதுரையில் ஒன்று ஏற்பாடு செய்யுங்களேன்

தமிழ்வாசி பிரகாஷ் said...

தலைவரே... நச் பகிர்வு...

arasan said...

எளிமையான மற்றும் வலிமையான பகிர்வு ...

cheena (சீனா) said...

அன்பின் சரவணன் - நல்ல பதிவு - நன்று - நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

சித்திரவீதிக்காரன் said...

ஈரோடு பதிவர் சங்கமத்தில் கலந்து கொண்டது மறக்க முடியாத அனுபவம். தங்களது பதிவு மீண்டும் அதை நினைவுக்கு கொண்டு வந்தது. இரண்டு நாட்கள் மகிழ்ச்சியான உரையாடல்கள் மறக்க முடியாத அனுபவம். பகிர்விற்கு நன்றி.

Post a Comment