Saturday, December 3, 2011

இவர்களையும் புறக்கணிக்கலாமா?


    இன்று சர்வதேச மாற்று திறனாளிகளின் தினம். மாற்று திறனாளிகள் என்பதனாலே குறைபாடு உடையோர் மனம் நெகிழ்ந்து விடுவர் என்று கருதினால் , அது போன்று ஒரு மூடதனம் வேறு ஒன்றும் இல்லை. இந்த தருணத்திலாவது , (மருத்துவ ரீதியாக இந்தியாவில் வெளிப்படையாக தெரியக்கூடிய ஊனத்தில் சதவீதம் 60% உள்ளவர்கள் மட்டுமே ஊனமுற்றோர் என கருதப்படுகின்றனர்.) மாற்று திறனாளிகளை நினைவு கூர்ந்து அவர்களையும் சக மனிதனாக கருதி, நம்மோடு பிறரைப்போல வாழ மதிப்பு அளிக்க வாய்ப்பு கொடுப்போம்.
    என் நண்பர் பேருந்தில் கன்னியாகுமரியிலிருந்து வரும் போது, ஒரு நிறுத்தத்தில் பஸ்ஸில் ஏறிய மாற்றுத் திறனாளியின் அடையாள அட்டையை வாங்கிப் பார்க்காமலே , ”உயிர வாங்குரதுக்குன்னே.. வந்துட்டானுங்க… பார்த்த நல்லா தானே இருக்க… டிக்கட் எடுக்க வேண்டியது தானே ”என ஏளனமாக பேசிய நடத்துனரை பற்றி சொல்லி வருத்தப்பட்டதை நினைவு கூற விரும்புகிறேன். உங்களுக்கும் இது போன்ற அனுபவங்கள் இருக்கலாம்.

     தயவு செய்து அவர்களையும் கொஞ்சம் தயவு கூர்ந்து ஒரு சக மனிதனாக பாருங்கள். இன்று காலை என்னுடன் பயிற்சிக்கு வந்திருந்த ஆனந்த வள்ளி என்ற ஆசிரியை கூறும் போது, மனநலம் பாதிக்கப்பட்ட நபர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய பின், நடத்துனர் சக பயணியிடம் , ”இவன ல்லாம் பார்த்த மெண்டல் மாதிரியா தெரியுது, எங்க ஏறணும் , எங்க இறங்கணும் ன்னு தெரியுது.. இவனுக்கு போய் சலுகை கொடுக்குறாங்க பாருங்க..” என்று பேசியது குறித்து வருத்தம் தெரிவித்தார்.

     இதற்காக நான் நடத்துனர் எல்லாம் மோசமாக நடந்து கொள்கின்றனர்  என்ற வாதத்திற்கு வரவில்லை. நம்மில் பலர் மாற்று திறனாளிகளை ஊதாசினப்படுத்தியும், அவமதித்தும், ஒதுக்கியும், புறக்கணித்தும் , இவ்வுலகில் வாழ தகுதியற்றவர்கள் என்றும் கருதுகிறோம். ஆனால், பன்னிரெண்டாம் நூற்றாண்றிலே இரண்டாம் ஹென்றி அவர்கள் மனவளர்ச்சி குன்றியோருக்கு என சட்டம் இயற்றியுள்ளார். மரியா மான்டிசோரி அவர்கள் சென்னையில் மாற்று திறனாளிக் குழந்தைகளையும் பிற குழந்தைகளுடன் கல்வி கற்று தந்தார்.

    இன்று நல்ல நிலையில் பயிலும் பள்ளிகளில் , மாற்று திறனாளிகளையும் சேர்த்து படிக்க வைக்க முடியும் என்ற நிலை வந்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் அவர்களையும் சேர்த்து எடுத்து வந்தாலும், பலரால்(குடும்பத்தில் உள்ளவர்களே) அவர்கள் புறக்கணிக்கப்பட்டு, சேர்க்கப்படாமல் உள்ளனர். இன்று அரசு அனைத்து மாற்று திறனாளிகளுக்கும் கல்வி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் , உள்ளடக்கிய கல்வி திட்டத்தில் , அனைவருக்கும் கல்வி திட்டத்தில் சிறப்பு ஆசிரியர்களை நியமித்து உள்ளது. அவர்கள் மூலமாக சாதாரண பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கும் சிறந்த கல்வியை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆசிரியருக்கான கல்வியையும் வழங்கி , ஆசிரியர்களை மாற்று திறனாளிகளின் சிறந்த கல்விக்கு உறுதுணைக்கு வழிவகுத்து, பயிற்சி அளித்து வருகிறது.

    அரசு ஒருபுறம் மாற்று திறனாளிகளின் நலம் பற்றி சிந்தித்து , தொடர் நடவடிக்கை எடுத்து வந்தாலும் , சக மனிதர்களாகிய நாம் நம் மனதில் மாற்று சிந்தனைகளை விதைத்து , அவர்களை நம்மில் ஒருவராக கருதி , அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் , திறனையும் வளர்க்கும் விதத்தில் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    பார்வையற்றோருக்கு கண் பார்வை மட்டும் தெரிவதில்லை. காது கேளாதவருக்கு கேட்கும் திறன் மட்டும் இல்லை. வாய் பேசத் தெரியாதவர்களுக்கு பேச இயலாது. கால் ஊனமுற்றோருக்கு காலின் செயல்பாடு குறைப்பாட்டின் அளவினைப் பொருத்து செயல்பாடு அளவு இருக்கும். இவர்களுக்கு எல்லாம் இவர்களின் ஊனம் தெரியும் அல்லது உணர முடியும். சற்று சிந்தியுங்கள். மனவளர்ச்சி குன்றியோருக்கு தனக்கு என்ன குறைபாடு உள்ளது என்பதே அவர்களுக்கு தெரியாது. நீ லூசு என்றாலும் புரியாது?  அவர்களை புறக்கணிக்கலாமா?


     மனவளர்ச்சிக் குன்றியோருக்கு  தேவையான அதாவது அன்றாட செயல்பாடுகளான குளித்தல், பல்துலக்குதல், சிறுநீர் மற்றும்  மலம் கழித்தல், உடம்பினை தூய்மையாக வைத்திருத்தல், சாப்பிடுதல், கை கழுவுதல்   என்ற தன்னை தானே தூய்மையாக வைத்துக்கொள்ள உதவும் அடிப்படை செயல்பாடுகளை கற்றுத்தரும் சிறப்பு ஆசிரியர்களின் பணியினை நினைத்து பார்க்க வேண்டும். இத் தருணத்தில் அவர்களை பாராட்டியே தீர வேண்டும்.

     இவர்களுக்காக செயல்படும் மதுரையை சார்ந்த அன்பகம் உண்மையிலேயே சிறந்த நிறுவனம் . அங்கு சிறப்பு ஆசிரியருக்கான பயிற்சி பெற நான் கடந்த முப்பது நாட்களாக செல்கிறேன். அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் அக் குழந்தைகளை அவர்கள் பராமரிக்கும் விதத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். அக்குழந்தைகளை பார்க்கும் போது , கடவுள் இவ்வுலகில் நம்மை எவ்வளவு சிறப்பாக படைத்துள்ளார் என்பதன் அருமை புரியும். நாம் பிறந்த நோக்கத்தின் புனிதம் புரியும் . தவறு செய்த யாரையும் சிறைச்சாலைக்கு அனுப்ப வேண்டாம் இக்குழந்தைகளுடன் ஒரு வாரம் தங்கியிருந்து பணிவிடை செய்ய சொல்லுங்கள் . அதுவே அவர்களை நல்வழிப் படுத்திவிடும்.

மாற்று திறனாளிகள் பிறக்காமல் இருக்க….
1.   சொந்தத்தில் திருமணம் வேண்டாம்( காதல் செய்தா சும்மா கட்டி வைங்கப்பா)

2.   இரத்த வகை சரிபார்த்து திருமணம் செய்தல் நலம். ஆர்ஹெச்+ க்கும் + க்கும் திருமணம் நலம். _ க்கும் – க்கும் திருமணம் நலம். –க்கும்  +  க்கும் என்றாலும், + க்கும் – க்கும் என்றாலும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பின் குழந்தைப் பெற்றுக்கொள்ளல் நலம்.
3.   
கற்பகாலத்தில் சந்தோசமாக இருக்க வேண்டும். மருத்துவர் ஆலோசனையுடன் மருந்து உட்கொள்ள வேண்டும்.

4.   கருவுற்ற காலத்தில் அடிப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
5.   பயிற்சி பெற்ற அனுபவமிக்க மருத்துவர் உதவியுடன் பிரசவம் பார்க்க வேண்டும்.

6.   பிறந்தவுடன் குழந்தை அழுவதில் ஏற்படும் பிரச்சனைகளை பார்க்க வேண்டும்.

7.   பதினெட்டு வயதுக்கு முன் திருமணம், மூப்பத்தைந்துக்கு மேல் திருமணம் செய்து , குழந்தை பிரசுவித்தல், குறைபாடுடைய குழந்தைக்கு வாய்ப்பளிக்கிறது.

7 comments:

கோகுல் said...

தவறு செய்த யாரையும் சிறைச்சாலைக்கு அனுப்ப வேண்டாம் இக்குழந்தைகளுடன் ஒரு வாரம் தங்கியிருந்து பணிவிடை செய்ய சொல்லுங்கள் . அதுவே அவர்களை நல்வழிப் படுத்திவிடும்.
//
அருமைநண்பரே!
நல்லதொரு பகிர்வு.
மாற்றுதிரனாளிகள் பிறக்காமல் தவிர்க்க சொன்ன வழிமுறைகள் கவனிக்க வேண்டியவை.
நானும் இன்று இதே கருத்தை ஒட்டிய பதிவிட்டேன்.இந்த பதிவை பார்த்ததில் இன்னும் மகிழ்ச்சி.

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! பெற்றவர்களே அவர்களை பாரமாய் நினைக்கும் காலம் இது. சமுதாய அக்கறை உள்ள கட்டுரை. ஊனமுற்றோர் என்பதற்கு மாற்றுத் திறனாளி என்பது சரியான சொல்லா? என்று தெரியவில்லை.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்ல பதிவு
வாழ்த்துக்கள்.

shanmugavel said...

ஆலோசனைகள் அத்தனையும் சரியானவை,நல்ல பகிர்வு.

சத்ரியன் said...
This comment has been removed by the author.
சத்ரியன் said...

அருமையான பகிர்வுங்க சரவணன்.

நானும் அது போன்ற ஒரு அனுபவத்தைக் கண்டிருக்கிறேன்.

ஒரு தனியார் பேருந்தில் நண்பனின் ஊருக்குச் சென்ற போது ஏற்பட்ட அனுபவம்.இரண்டு கால்களும் முடமான ஒரு முதியவர் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தது. கூட்ட நெரிசல். அவரால் தவழ்ந்துச் சென்று இறங்க முடியவில்லை.

நடத்துனர் உதவி செய்து அவரை இறக்கி விடுவதைத் தவிர்த்து , கன்னாபின்னா வென கத்தினார். அவரை வாயமர்த்தி விட்டு ஒரு குழந்தையைப் போல் தூக்கி கீழே இறக்கி விட்டுவிட்டு பிறகு அந்த ’நாதாரி’ நடத்துனரை ஒரு பிடிபிடித்து அனுப்பினேன்.

Suresh Subramanian said...

nice post....www.rishvan.com

Post a Comment