Wednesday, November 30, 2011

பொய்


    ராகவன் மிகவும் கோபமாக சென்றான். அவன் இதற்கு முன் மோனிகாவிடம் இப்படி பேசியது கிடையாது. மோனிகா ராகவனின் ஒரே செல்ல மகள் . இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். மோனிகா அப்படி ஒன்றும் பெரிதாக பொய் சொல்லவில்லை.

வெள்ளி அன்று நடைப்பெற்ற பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் அவளின் ஆசிரியை ராணியை சந்தித்து பேசி விட்டு வந்தான். ஆசிரியை ராணியும் அப்படி ஒன்றும் தவறாக சொல்லி விட வில்லை. மோனிகா ஒரு டாக்கேட்டிவ். அதே சமயம் எதையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகம்.வகுப்பறையில் கூர்ந்து  கவனிப்பாள் . எந்த பாடத்திலும்  நூறு மார்க் எடுக்கவில்லை என இவனும் இவனின் மனைவியும் புலம்பி தவித்தார்கள். மோனிகாவின் அம்மாவும் ஆசிரியை என்பதால் , நிதானமாகவே, நல்ல முறையிலேயே மோனிகாவை பற்றி பேசினார்கள்.
பள்ளி விட்டு வந்தவுடன் பேசிக் கொண்டிருந்த ராகவன், கோபப்பட்டு பேசுவதை கண்டு , மாளவிகா தன் குழந்தையை அள்ளிக் கொண்டாள்.

உங்களுக்கு என்ன பைத்தியமா பிடித்துக் கொண்டது …?பிள்ளையை அடிக்க வருகிற மாதிரி பேசுறீங்கஎதுனாலும் என் கிட்ட சொல்லுங்க..சும்ம அதட்டுற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க

 விவரம் தெரியாமாபேசாத…. இன்னைக்கு பள்ளியில அவுங்க டீச்சர்உங்கம்மா.. என்ன சொன்னாங்கன்னு கேட்டதுக்கு என்ன சொல்லி யிருக்கா..தெரியுமா..?”

   ”இதில என்னங்க தப்பு…. வந்தவுடனே எல்லாத்தையும் ஒப்பிச்சுட்டாநல்ல விதமா தானே சொல்லியிருக்கா….”

எதுக்கும் பொய் பேசுறது எனக்கு பிடிக்காதுஇந்த சின்ன பொய் பெரிசா சொல்ல தோணும்

உங்க ஆபிசர் புத்திய குழந்தைக்கிட்ட காட்டாதீங்ககுழந்தைன்னா அப்படி தான் இருக்கும்என் குழந்தை பொய் ஒண்ணும் சொல்ல வில்லை…”

வீட்டில உங்கம்மா என்ன சொன்னாங்கன்னா.. ?எதுவும் சொல்லலைன்னு சொல்ல வேண்டியது தானே..”

அவுங்க மிஸ் இன்னும் நல்ல சொல்லி தரட்டுமேன்னுநல்லதா தானே சொல்லி யிருக்கா.. அதுக்கு ஏங்க இப்படி கத்து கத்துறீங்க…”

அம்மா.. எதுவும் பேசல.. என்னை தான் நல்ல படிக்க சொன்னாங்கன்னு உண்மையை சொல்ல வேண்டியது தானே..”

என்ன புரியாம சொன்னதையே சொல்லிட்டு இருக்கீங்கஎங்க அம்மா உங்கள நல்ல மிஸ்ன்னு சொன்னாங்க…. நல்ல சொல்லி தருவாங்கநீ கூர்ந்து கவனிச்சு செண்டம் எடுக்கணும்ன்னு சொன்னாங்கன்னு தானே சொல்லியிருக்கா… “

எப்படி பொய் பேசியிருக்கா பார்த்தியாஅப்பதான் இவ டீச்சர் நாளைக்கு உன்னை பார்க்கும் போது நல்ல படியா பேசுவான்னும்.. உன் கிட்ட தப்பா பேச மாட்டான்னு பிளான் பண்ணி பொய் பேசியிருக்கா…”

இதில என்ன தப்பு இருக்குதன்னையும் பாதுகாத்து, என்னையும் நல்ல எண்ணத்தோடு சொல்லியிருக்கிறஅவ சமயோசித புத்தியை பாராட்டுங்க….”

  ராகவன் தன் வேகன் ஆர் காரை ஓட்டி கொண்டேரெம்ப கோபப் பட்டுவிட்டோமோ என யோசித்தே வண்டியை திருப்பும் போதுவண்டி மாறு பட்ட தன்மையுடன் ஓடுவதை காண்கிறான். மெதுவாக காரை நிறுத்தி பார்க்கும் போது முன் சக்கரம் பஞ்சர் . அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் காற்று நிரப்பி அருகிலுள்ள பஞ்சர் கடையை விசாரித்து விரைந்தான். இரண்டு நாட்கள் முன் தான் காரினை கேட் கதவில் மோதி முன்னாடி பேனட் நெளிந்து இருந்தது.

கோபம் மனிதனை எல்லா வழிகளிலும் சீரழித்து விடும் என்பது அவனுக்கு இப்படி பட்ட கஷ்டங்கள் வரும் போது தான் உணரச் செய்யும். மோனிகா மீதான கோபத்தில் வந்தவன் , எதிரில் வரும் லாரியை கவனியாமல் முந்தி செல்ல எத்தனித்தான், முடியாததால் குப்பை நிறைந்த அந்த மேட்டுப் பகுதியில் வண்டியை ஏற்றி இறக்க ஏதோ குத்தி பஞ்சராகி யிருந்தது .

அண்ணே , வண்டியை கொஞ்சம் முன்னாடி கொண்டு வாங்கண்ணே…” என்ற சிறுவன் இவனை பார்த்தவுடன் , ”என்ன சார் .. பஞ்சரா..?” என்று சொல்லிக் கொண்டே ஸ்பானரையும் , சாக்கியையும் கொண்டு வந்தான்.

என்ன சார்பார்த்து ஓட்டக்கூடாதா…? ரோடாவா சார் இருக்கு நாம தான் சுலோவா வரணும்வேகமா வந்த இப்படி தான் சார் ஆணி குத்தி பஞ்சராயி போகும்…” என்ற சிறுவனின் பேச்சில் ஆர்வமாகி..

சரி என்ன செய்ய.. பஞ்சர் சொல்லிகிட்ட குத்துது…?”
ஜாக்கியை கொண்டு வண்டியை ஏற்றினான். நாலு போல்ட் நட்டை கழட்டினான், டயரை அப்படியே உருவினான்.

எத்தனை பஞ்சர்ன்னு பாருப்பாசீக்கிரம் ஒட்டிக் கொடு…”

சார் இது டீயுப் லஸ் டையர் சார்.. இதுக்கு முன்னாடி பஞ்சர் பார்த்தது இல்லையா….? சார் பொறுமையா பாருங்க.. தண்ணில முக்கி ஏர் போற இடத்தை  கண்டு பிடிக்கணும்அப்புறம் இந்த மெழுகு போன்ற இந்த குச்சியை அங்க வைச்சு ஒரு அமுக்கு தான்…”

டேய்காத்து போற இடத்தில எதாவது இருக்கான்னு பாருடா.. ஆணியிருந்த எடுத்து போடு…”

சார்ஆணியில்ல சார்இது பீங்கான்.. இத வெளிய எடுக்க முடியாதுஉள்ள தான் தள்ளி விடணும்..”

டேய் உள்ள போனா .. அது மீண்டும் பஞ்சராகாதா..?”
சார் பீங்கான் பொடி பொடியா ஆகிடும்.. கவலை படாதிங்க.. அது டியுப் லஸ்ஒண்ணும் ஆகாதுஎன சொல்லி கொண்டே பீங்கானை டயரில் ஓட்டை போட்டு உள்ளே தள்ளினான்.

சார்.. முப்பது பாயிண்டு ஏர் வச்சுருக்னேன்போதுமா…”ராகவன் தலையாட்டி முடிக்கும் முன் சக்கரத்தை நோக்கி நகர்ந்து இருந்தான்.
டயரை மாட்டிய சிறுவனை பார்த்து
உனக்கு என்ன வயசு இருக்கும்..?”
ராகவனை ஒருவித சந்தேக பார்வை பார்த்து…( தொழிலாளர் நலவாரிய அதிகாரியாக இருக்குமோ என்று )
சார் சத்தியமாபதினெட்டு சார்.. பார்த்த என்ன ஒரு பத்து வயசு
பையனா தான் நினைப்பீங்க..”

என்னை விட சின்ன பசங்கள் எல்லா என்ன போடா வாடான்னு பேசும் போது எனக்கு….. கோபமா தான் வரும்.. இருந்தாலும் என்ன செய்ய முடியும்.. என் உருவம் அப்படின்னு நானே நொந்துக்குவேன் சார்…”

நீங்களும் அதே போல ஏமாந்திட்டீங்க..….இத விட சார் ஆறாம் வகுப்பு தான் சார் படிப்பான் .. என்ன விட கொஞ்சம் ஹைட்டு ஜாஸ்தி .. என்ன போடா.. அந்த பாலை(பந்தை) எடுத்து போடுடான்னு அடிக்க வர்றான்எல்லாம் என் தலையெழுத்து சார்..”

எத்தனாவது வரை படிச்சு இருக்கா…?”

அத விடு சார்என்ன சார் .. வண்டியை எங்க கோர்த்திருக்கீங்க…?”

“…..”

வண்டியை பார்த்து ஓட்டணும் சார்லேசா இடிச்சா கூட காசு எக்கு தப்பா ஆகும் சார்ஒரு பத்தாயிரம் பிடிங்கிறுவானுகநாம சுதாரிப்பா வந்தாலும்.. போறவன் வந்து இடிச்சுட்டு போயிடுவான் சார்…”

நல்ல பெரிய மனுசனாட்டம் பேசுறடா..”

சார் ..நிசமாலுமேநான் பெரியவன் தான் சார்.. என்ன சின்ன பையன்னு நினைச்சுட்டீங்கல்லா.. சின்ன பையன்னா வேலைக்கு சேர்ப்பாங்கலா சார்…”
சிறுவன் தன் வயதை மறைக்க தன் வேலையை காப்பாற்ற , எப்படி சமாளிக்கிறான் என்பதை ரசித்தான். வாழ்க்கை போராட்டத்தில் இது போல சில பொய்களை சொல்லி தான் காலம் தள்ள முடியும் . இந்த மாதிரி பொய்கள் அவனையும் அடுத்தவரையும் பாதிக்காது என நினைத்த போது அவன் மனைவி மாளவிகா போன் வர ….

சொல்லு.. டயர் பஞ்சர் பார்த்துகிட்டு இருக்கேன்.. இப்ப வந்துடுவேன்.. மோனிகா படிச்சாளாஅப்பா கோபமெல்லாம் ஓடி போச்சுன்னு சொல்லு.. அவளுக்கு பிடிச்ச இடியாப்பம் வாங்கிட்டு வந்திடுறேன்..”


2 comments:

வருண் said...

சிறுவயதிலாவது பொய் சொல்லாமல் இருக்கலாம். டி வி பார்த்து இதுபோல் பொய் சொல்ல கத்துக்கிறாங்களா? :)

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

கதை வடிவமைப்பு மிகவும் அருமை..

Post a Comment