இரவு எல்லாருக்கும் ஒன்றாயிருப்பதில்லை
எனக்கு எல்லா இரவுகளும்
ஒரே மாதிரியாக இருந்ததில்லை..
சில இரவுகள் இனிமையானவை
பல இரவுகள் வாழ்வை புரட்டி போடும்
நாடகத்தை நடத்தியவை…
புத்தகதினுள் முகம் புதைத்த இரவுகள்
மாய உலகில் சஞ்சரிக்க செய்பவை….
இருள் அப்பிய அந்த இரவு
என் தந்தையை முழுங்கி
என்னை அனாதையாக்கியது…..
இரவில் பெண்ணின் அரற்றல்
தெளிவாக கேட்டும்
அதற்கு
பகலில் பல கதைகளை உருவாகும்..
பொளர்ணமி இரவின் பாடல்
மனதில் ஒளி பாய்ச்சுபவை…
இரவுகளில் புணர்தல் அதிகம்
வெளிப்படுத்தும் வெப்பம்
பெண்களின் வெறுப்பை உணர்த்துவை…
இரவுகள் இருள் அப்பியே காணப்படுகின்றன…!
13 comments:
அப்ப தான் அது இரவு...
எனக்கு இருட்டுனா பயம் பாஸ்,,,
அனைவருக்குமான இரவு.
கவிதை சூப்பராக இருக்கு.
S.Kumar
பல இரவுகள் வாழ்வை புரட்டி போடும்
நாடகத்தை நடத்தியவை…
அருமையான வரிகள்
நான் ஓர் இரவுப் பறவை, இரவுகள் எனக்கு எத்தனையோ போதித்திருக்கின்றன. பாரதியார்சொல்வார், இருள் என்பது மிகக்குறைந்த ஒளி என்று1
இரவின்ருசி படித்துப்பாருங்கள், குங்குமம் வார இதழில் இரவு நேரச் சென்னை யைப் படம்பிடித்துக் காட்டியிருப்பார்கள்!
வணக்கம், இருளின்பின்னால் உள்ளவற்றை வெளிச்சம்போட்டு காட்டியிருக்கிறீர்கள்.
இரவு என்றுமே நீண்டுச் செல்லக்கூடியதும், துயரம் நிறைந்ததாகவே இருக்கிறது. அதன் கோரப் பார்ப்பார்கள் நம்மை விடியும் வரை குத்திக் கீறிக் கொண்டுதான் இருக்கிறது.
இல்லையென்றால்.... இப்படி கூடச் சொல்லலாம்.
நாம் அப்படிப்பட்ட இரவுகளைதான் நினைவில் வைத்திருக்கிறோம்.
கவிதை அருமை வாழ்த்துக்கள்
இரவுகளின் கனவுகள் முடிவதேயில்லை..!
நல்ல இரவுதான்.
//இரவு எல்லாருக்கும் ஒன்றாயிருப்பதில்லை
எனக்கு எல்லா இரவுகளும்
ஒரே மாதிரியாக இருந்ததில்லை..//
உங்களுக்கு மட்டும் அல்ல அனைவருக்கும்
இரவு ஒரே மாதிரி இருப்பதில்லை
இரவின் இருளை தவிர ..
நல்ல கவிதை ..
வணக்கம் பாஸ் பதிவுலகில் நான் அடையாளம் காணப்படமுதல் நான் எழுதிய சில பதிவுகளுக்கு கமண்ட் போட்டு ஊக்கபடுத்தியவர் நீங்கள்.
உங்களைத்தேடிக்கொண்டு இருந்தேன் இன்று கண்டுபிடித்துவிட்டேன் அன்று உங்களைப்போன்ற ஒரு சில நண்பர்களின் கருத்துரைகள்தான் என்னை நிறைய எழுத ஊக்கம் வழங்கியது இன்று நான் பதிவுலகில் அடையாளம் காணப்பட்ட ஒருவனாக இருக்கின்றேன்.மிக்க நன்றி நண்பரே..
இனி தொடர்ந்து வருவேன் உங்கள் தளத்திற்கு.
இரவைப் பற்றி நல்ல பகிர்வு..:)
Iravin pala mugangalai adaiyalapaduthi irukkeenga sago. Nalla kavithai. Pagirvuku nanri sago.
Post a Comment