Wednesday, October 12, 2011

இனி எங்கும் தப்பிக்க முடியாது..!


நீங்கள் செல் போன் வைத்திருக்கிறீர்களா?
உங்களுக்கான அழைப்பு
சந்தோசத்துக்கானதா..?
துக்கத்துக்கானதா..?
துயரம் தருவதற்கானதா…?
பணம் தருவதற்கானதா…?
பணம் பெறுவதற்கானதா…?
விளம்பரத்திற்கானதா…?
கடன் செலுத்துவதற்கானதா…?
கடன் கேட்பதற்கானதா….?
காதல் மொழிக்கானதா…?
நட்புக்கானதா..?
நீங்கள் செல்லை கையாளும் விதத்திலேயே
பலரால் உணரப்படுகிறது…
கால் வரும் போது
நகர்ந்து
எங்களிடம் இருந்து
தொலைந்து போகும் போது
யாரிடமோ
எங்கோ தொலைந்து விட்டதை
உணர்கிறோம்….
இவனோட பொரும் தொல்லைப்பா
என்று காலை கட் செய்யும் போதும்
இந்தா வந்திடுகிறேம்
நாளைக்கே தந்திடுறேன்
எனும் போதும்
உங்களின் கடன் நெருக்கடியை உணர்கிறோம்..
இந்தா இப்ப வந்திட்டேன்..
இந்தா கிளம்பிட்டேன்
வந்துகிட்டே இருக்கேன்..
இவை மனைவிக்கான
பதில்கள் என்பதை
ரசிக்கிறோம்…
எங்களிடம் செல்லை கொடுத்து
உனக்கு வந்த காலை பகிரும் போது
நட்பை விரிவு செய்வதை
வரவேற்கிறோம்…
இனி எங்கும் தப்பிக்க முடியாது
ஆம்
வாழ்வோடு ஒன்றிவிட்டது
உன் சொல் போல செல்..!

21 comments:

கடம்பவன குயில் said...

மிக மிக அருமையான எளிய நடையில் கவிதை.

//உன் சொல் போல செல்..! // கடைசி வரி பல அர்த்தம் கொடுக்கிறது. நல்ல பகிர்வு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆம் இன்று ’செல்’ இல்லையேல் நாம் ஒரு ’செல்’லாக் காசு தான் என்றல்லவா நிலைமை மாறிவிட்டது!

நல்லதொரு அருமையான செல்/சொல். பாராட்டுக்கள்.

settaikkaran said...

செல் போனா சொல் போச்சு! :-)
செல்பவர்களை நிறுத்தி செல்-power ஐ சொல்லியிருக்கிறீர்கள்!

Advocate P.R.Jayarajan said...

ennudiya sellida pesikku thodarbu kondu paarungal, oru puthiya anupabavan kidaikkum.

Number 9843035132.

(Theriyathavarkalidamiruthu thappikka enathu antharanga sel phonukku naan yerpaduthik konda vali)

Yaathoramani.blogspot.com said...

அருமையான படைப்பு
செல் குறித்து அதனுடன் இரண்டரக் கலந்து போன
நமது வாழ்வு குறித்து மிக அழகான பதிவைக் கொடுத்துள்ளீர்கள்
அருமை தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

த.ம 3

சத்ரியன் said...

//வாழ்வோடு ஒன்றிவிட்டது
உன் சொல் போல செல்..!//

ஆமாங்க சரவணன். அடியாகிக் கொண்டே போகிறோம். மனிதனின் செயல்பாடுகள் முடங்கிக் கொண்டே வருகிறது.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

Avargal Unmaigal said...

"ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன்" என்பது பழைய மொழி ஆனால் "செல் இல்லாத மனிதன் அரை மனிதன்" என்பது இப்போதைய மொழியாக உங்கள் பதிவின் மூலம் அறியப்படுகிறது

SURYAJEEVA said...

நிதர்சனம்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகு...

Anonymous said...

அருமையான கவிதை.

-சே.குமார்
http://vayalaan.blogspot.com

Unknown said...

// ஆம்
வாழ்வோடு ஒன்றிவிட்டது
உன் சொல் போல செல்..!//

சொன்னது முற்றும் உண்மை-நன்கே
செல்லும் பயன்படும் தன்மை
இன்னது இன்னார் பேச-பதிலை
எதிர்முனை எடுத்துமே பேச
கவிதை வடித்தீர் இங்கே-நான்
கண்டுமே பெற்றேன் பங்கே
செவிதனில் வைத்துப் பேசும்-இனி
செல்லே இறைவா வாழ்க!

புலவர் சா இராமாநுசம்

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான பகிர்வு. செல் இல்லாமல் இருக்கமுடியுமா?..

MANO நாஞ்சில் மனோ said...

தில் இல்லாமல் இருக்கலாம் செல் இல்லாமல் இருக்கமுடியாது....

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

உன் சொல் போல செல்..!
அருமையான வரிகள்

ananthu said...

செல் இல்லையேல் செத்து மடி .. இது தான் இன்றைய நிலை என்பதை விளக்கும் கவிதை ..

G.M Balasubramaniam said...

தற்போது வரும் ஒரு விளம்பரத்தை நினைவூட்டியது இந்தப் பதிவு. வாழ்த்துக்கள்.

Anonymous said...

செல் இன்றி வாழ்கிறேன்.ஒன்றல்ல பத்து வாங்கும் வசதி உண்டு. செல் இல்லை. வேலையிடத்தில் வீதியில் எங்குமே பேசும் வசதியுண்டு. என்னிடம் செல் இல்லை நம்புவீர்களா? வாருங்களேன் என் வலைக்கும்! நல்வரவு!. நல்ல கதிவு!.வாழ்த்துகள்!.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

ஸ்ரீராம். said...

பல் இல்லாக் காலத்திலும் செல் தேவை!!! செல்லில் எந்த அழைப்பாய் இருந்தாலும் முக மாறுதல் இன்றி அருகிலிருக்கும் நமக்குக் கூட கேட்காமல் முணுமுணுப்பாய்ப் பேசும் பலரைப் பார்த்து நானும் அப்படிப் பழகியிருக்கிறேன்!

மாலதி said...

அருமையான படைப்பு

Post a Comment