Monday, October 10, 2011

ருசித்து சாப்பிடும் இலவச அரிசி தானப்பா நான்..!


அண்ணா காலத்திலிருந்து
எனக்கும் அரசியலுக்கும்
தொடர்பு உண்டு….
நித்தம் காலையில் அனைத்து
ஓட்டலிலும் வாங்கி உண்பீர்கள்
வீட்டிலே வெறுப்பவர்கள்
வாங்கியவுடன் வந்த விலைக்கு
விற்றுவிட்டு,
கொஞ்சம் பாலீஸ் போட்ட வுடனே
தெரு ஓரக்கடையானாலும்
தட்டு நிறைய சாம்பர் ஊற்றி
பிசைந்து …
ருசித்து ரசித்து சாப்பிடும்
ரோசம் கொட்ட தமிழா…!
இலவசமாய் எதை தந்தாலும்
முதலில் ஓடிச் சென்று பெற்று
அப்படியே விற்க பழகிய நமக்கு…
ஜனநாயக உரிமையும்
என்னை மாதிரி தான்
விற்ற உனக்கு லாபம் கம்மி தான்
வாங்கியவன் போடும் பட்டை நாமத்தை கணக்கிடும் போது..!

12 comments:

கோகுல் said...

விற்க கணக்கு போட்டு தான் வாங்கவே செல்கிறோம்!
நாங்க பாலிஷ் போட்ட தமிழர்கள்!

Unknown said...

இதில் ஒரு சின்ன திருத்தம் மாப்ள...முட்டையிலிருந்து கோழி வந்ததா.....இந்த மேட்டரு போல...ஏன்னா கொடுக்கறதுனால வாங்குறானா....தெரியலீங்க...பகிர்வுக்கு நன்றி!

Unknown said...

ஜனநாயக உரிமையை விற்பவனுக்கு லாபம் கம்மிதான்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

சரியா சொன்னீங்க .

செய்தாலி said...

ரெம்ப சரியா சொன்னீங்க தோழரே

SURYAJEEVA said...

ஜனநாயக உரிமை மட்டுமே இருக்கு அவனிடம் இருக்கு விற்பதற்கு, மற்றதை உருவி எடுத்து விட்டார்கள்... அவனை ஏன் குறை சொல்ல வேண்டும்... தொடர்நிகழ்வு இது... இழப்பதற்கு ஏதும் இல்லை என்னும் பொழுது எரிமலை தான் மிஞ்சும்...

'பரிவை' சே.குமார் said...

சபாஷ்.

Rathnavel Natarajan said...

அருமை
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html

MANO நாஞ்சில் மனோ said...

என்ன சரவணன் ரொம்பநாளா ஆளைக்காணோம்...??

நாவலந்தீவு said...

அருமை. நல்லாருக்குங்க.

r.v.saravanan said...

ஜனநாயக உரிமையும்
என்னை மாதிரி தான்
விற்ற உனக்கு லாபம் கம்மி தான்

அருமை சரவணன்

சித்திரவீதிக்காரன் said...

சித்திரகாலி, வாலான் நெல், சிறைமீட்டான், மணல் வாரி, செஞ்சம்பா, கருஞ்சூரை, சீரகச்சம்பா, முத்துச்சம்பா, விளங்கி நெல், மலைமுண்டன், பொற்பாளை, நெடுமூக்கன், அரிகிராவிக் மூங்கிற்சம்பா, கத்தூரிச்சம்பா, வாணன்நெல், காடைக்கழுத்தன், இரங்கல் மீட்டான், கல்லுண்டை, பூம்பாளை, கடுக்கன் சம்பா, வெள்ளைச்சம்பா, புத்த நெல், கருங்குறுவை, புனுகுச்சம்பா - நெல்ரகங்கள்
மேலே உள்ள நெல் ரகங்கள் எல்லாம் போய் இன்று ஏதேதோ நம்பர் போட்ட ரகம் வருது. அதுவும் விலையில்லாத அரிசின்னும் போது எந்த ரகமா இருந்தா என்ன? பகிர்வுக்கு நன்றி.

Post a Comment