வீட்டில்
தந்தை ஊதி தந்த
பலூனில் காற்று
வெளியேறிய போது
அழுதேன்…
பள்ளியில்
அதே காற்று
வெளியேறிய போது
சிரித்தேன்
இது ஆசிரியரின் மிதிவண்டியிலிருந்து….
சிரிப்பும் அழுகையும்
கலந்து தந்தது
பள்ளியை விட்டு சென்ற
எனக்கு
வெளி காற்று….!
கல்விக்கான சிறப்பு வலை
6 comments:
நல்ல கவிதை...
மாப்ள வாழ்வின் யதார்த்தம் கவிதையாய்....!
அது என்னவோ கல்லூரியில் நுழையும் முதல் நாள் ஏனோ இறகு முளைத்த குஞ்சுகளின் பதற்றம் தொற்றிக் கொள்கிறது..
யதார்த்த வரிகளில் இயல்பான கவிதை ..
உங்களது கவிதை எளிமையாகவும், கருத்து மிக்கதாகவும் உள்ளது திரு. சரவணன் அவர்களே. வாழ்த்துக்கள்.
அட. அருமை.
Post a Comment