Wednesday, September 14, 2011

குட் டச்…பேட் டச் சொல்லி தரும் ஆசிரமம்


”குந்தியின் புதல்வனே, தொடுவதால் ஏற்படும் இன்பங்கள் தான் நம் துன்பத்திற்கு மூலகாரணங்களாக விளங்குகின்றன. அவைகளுக்கு தொடக்கம் இருக்கும்  காரணத்தால் , அதே போன்று முடிவும் உண்டு. எனவே விவேகம் நிறைந்தவன் அவற்றில் எத்தகைய இன்பத்தையும் காண்பது இல்லை”
 நான் என் தோழியின் வீட்டிற்கு சென்றேன். அவர்கள் குடும்பத்துடன் டி.வி பார்த்து கொண்டு இருந்தனர். ஆதித்யா சேனல் என்று நினைக்கிறேன். விளம்பர இடைவேளை யாரும் சேனலை மாற்றாமல் டி.வி.யில் மூழ்கி இருந்தனர்.  அப்போது விளம்பரத்தில் ஒரு பெண் குழந்தை வயதான தாத்தாவின் மடியில் உட்காருவது போன்று காட்சி வந்தது. உடனே , என் தோழி தன் பெண் குழந்தையிடம் , இப்படி யார் மடியிலும் பொசுக்கென்று எந்த சூழலிலும் மடியில் அமரக் கூடாது. எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள் . இது மோசமான டச்சாக கூட இருக்க வாய்ப்பு உண்டு. நாம் எப் போதும் ஒரு அடி விலகியே ஆண்களுடன் பழக வேண்டும். மேலும் அதற்காக எல்லா ஆண்களையும் சந்தேகப் பார்வை பார்க்க கூடாது. அக் குழந்தை அப்பா மடியிலக் கூட உட்காரக் கூடாதா? (எட்டாம் வகுப்பு படிக்கும் மகள்) எந்த ஆண் மடியிலும் என்று தான் சொன்னேன்.. அப்பாவா இருந்தாலும் ஒரு டிஸ்டன்ஸ் மெயிண்டைன் பண்ண வேண்டும். அதற்காக எப்பவும் மடியில உட்கார நினைக்க கூடாது .  என டி.வியின் விளம்பரங்கள் அனைத்துக்கும் ஒரு விளக்கம் தந்து கொண்டு இருந்தார்.
அன்னையின் வளர்ப்பு தான் குழந்தைகளை நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் உருவாகிறார்கள். எனக்கு ஆச்சரியம் அளித்தது. மனநல மருத்துவர்கள் பலரும் இது போன்ற கருத்துக்களையே முன் வைக்கின்றனர்.  
”நீ சரித்திரத்தைப் படித்துப் பார் .ஒவ்வொரு நாட்டின் வீழ்ச்சிக்கும் அடித்தளமாக, நீதிமுறைமையற்ற தன்மை அல்லது புலனுணர்விக்கு ஆட்பட்ட தன்மையே விளங்குகிறது என்பதை நீ உணர்வாய். ஒரு நாட்டிலே அதன் மக்கள் கடவுளையும் , உண்மையையும் வழிபடுவதற்கு பதிலாக, புலன்களை வழிபட்டால் , அந்நாட்டின் வீழ்ச்சி மிக அருகாமையில் உள்ளது என்பதை உணரலாம்.”
சாரதா ஆசிரமத்தில் இருந்த ஒவ்வொரு நிமிடமும் ஒரு வித பாச உணர்வு  எனக்குள் பரவி யிருந்தது. அன்பின் வெளிப்பாடு என்னை அசர வைத்தது. அங்கு பயிலும் குழந்தைகள் தத்துவப்பாடல்களை பாடிக் கொண்டே இருந்தனர். முத்துக்கு முத்தாக.. என்ற பாடலை பாடும் போது தன் அருகில் உள்ள மாணவனின் தோள்களை பற்றிக்  கொண்டு அனைவரும் (அந்த வரிசையில் அமர்ந்துள்ள மாணவர்கள் அல்லது  மாணவிகள்) ஒற்றுமையுடன் உணர்வு பூர்வமாக பாடுவதை காணும் போது என்னை மெய் சிலிர்க்க வைத்தது. இங்குள்ள மாணவர்களுக்கு திட்டமிடல் ,அதனை  நடைமுறைப்படுத்துதல் , பின்பு அச்செயலை சரிபார்த்தல் என்பது போன்ற தலைமை பண்பை வளர்க்கும் விசயங்கள் முறையாக செயல் வடிவில் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

 கடைசி நாள் , அனைவரும் வீட்டு நினைவில் சுழன்று , எப்படா குடும்பத்தினரை பார்ப்போன் என நினைத்து மகிழ்ச்சியாக கிளம்பும் தருணம் , (குறிப்பாக எம்.பிரபு என்பவர் தன் சகோதரியின் திருமணம் என்பதால் காலை பதினோரு மணிக்கே கிளம்ப ஆவலாக இருந்தார் ). ஆனால், எழுபத்து ஐந்து பைசாவில் இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன் ஆரம்பித்த அந்த அன்னையை பார்க்க போகிறேம் என்ற மகிழ்ச்சியில் எல்லாவற்றையும் மறந்து , பணம் பெற்று நடத்தும் அந்த ஆசிரமத்தின் மெட்ரிக் பள்ளியை பார்வையிட அழைத்து சென்றனர்

அப்படி பட்ட பள்ளியில் படிக்க கொடுத்து வைக்க வேண்டும். மூத்த மாணவர்கள் சமூகத்தில் இருந்து தான் பெற்ற அனுபவங்களை அடிக்கடி தற்போது பயிலும் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். சமூகத்தில் தற்போது பயின்று வரும் மாணவர்கள் எதிர் நோக்கவுள்ள நட்பு குறித்த பிரச்சனைகளை , மூத்த மாணவர்கள்  தன் அனுபவத்தின் மூலம் விளக்குகின்றனர்.  தான் இப்போது முதன்மை நிர்வாக அலுவலராக இருக்க நான் மாஜிக்களிடம் இருந்து  கற்று சென்ற பாடங்கள் தான் உதவுகின்றன. ”எப்போதும் நீங்கள் இங்கு பெறும் அனுபவங்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் , இதை விடாப்பிடியாக வாழ்வில் பிடித்து கொள்ளுங்கள் ,அது தனாகவே உங்களை இந்த சமூகத்தில் உயர்ந்த நிலையை அடையச் செய்யும். ” என்பது போன்ற அறிவுரைகள் கொண்ட சி.டிக்கள் பார்க்கும் போது அவை எங்களை வியப்படைய செய்தன.

        இதை என்னுடன் பயிற்சிக்கு வந்த ஸ்ரீதர் சொல்வது போல சொன்னால் இப்படி தான் இருக்கும்.
     “என் வாழ்நாளில் இப்படி பட்ட ஒரு சி.டி யை பார்த்ததே யில்லை. இதெல்லாம்  உங்களாலத் தான் மாஜி முடியுது. உண்மையிலே உங்கள பார்க்கும் போது அதிசயமாக இருக்கிறது. உலக அதிசயங்கள் ஏழு எல்லாம் இல்லை . இது தான் முதல் அதிசியம். ஆச்சரியம் , அந்த பையன் என்னா அழகா பேசுறான். .. என்னால கூட இப்படி பேச முடியுமான்னு தெரியல… சின்ன வயசு .. ஒரு இருபது இருக்குமா..ஒரு லட்சம் மாச சம்பளம் வாங்கிறான்னா பார்த்துக்கங்க.. இந்த பசங்களும் அவர்களிடம் எப்படி யெல்லாம் கேள்விகளை கேட்டு தங்கள் சந்தேகங்களை போக்கி கொள்கிறார்கள்.. உண்மையிலே சூப்பர்”

      அந்நிகழ்வில் நாங்கள் அனைவரும் பேசினோம். மேடையில் நாங்கள் பத்து பேர் மட்டுமே இருந்தோம். மாஜிக்கள் மாணவர்களைப் போல இடப்புறம் உட்கார்ந்து இருந்தனர். மாணவர்கள் அவர்களுக்கு பின்னாலும் , வலப்புறம் பெண்குழந்தைகள் நடுவில் மாணவர்கள் என முந்நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் அமர்ந்து இருந்தனர். (அனைவரும் ஒன்பது பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள்) . நிகழ்ச்சிகளை மாணவர்களே தொகுத்து இருந்தனர். நாங்கள் பேசி முடிந்ததும், மாஜி ஆசிரமத்தில் இருந்து தான் கற்று கொண்ட விசயங்களை சில மாணவர்கள் பேச அனுமதித்தனர். அவர்களில் ஒரு மாணவி பேசும் போது , தான் வேறு பள்ளியில் முப்பதாயிரம் கட்டணம் செலுத்தி விட்டு, இங்கு வந்து சேர்ந்தேன். என் தந்தை விரும்பு சேர்த்து விட்டார். அப்போது முப்பதாயிரம் போகுதே என நினைத்தேன். ஆனால், இங்கு வந்த பின் பணம் எல்லாம் ஒரு விசயமே இல்லை. குணம் தான் முக்கியம் என்பதை உணர்ந்தேன். நான் இதற்கு முன் சினிமா பார்க்கும் போது இரண்டு மணி நேரத்தில் படம் பார்த்து முடித்து விடுவேன். ஆனால், இங்குள்ள மாணவர்களுடன் சேர்ந்து படம் பார்க்கும் போது ஒரு படம் பார்க்க ஏழு மணி நேரம் ஆகிறது , இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவுங்க ஒவ்வொரு சீன்(seen)னா விளக்கி, இது தப்பு , இது சரி , இதுனால என்ன நன்மை, என்ன தீமை , இந்த குணத்தால நீ என்ன பெற முடியும் , இந்த சமூகம் என்ன பெற முடியும் , வீட்டுக்கு என்ன நன்மை ? தீமை? இதன் விளைவு என்ன? என விளக்கி காட்டும் போது , எனக்கு எப்படி படம் பார்க்க வேண்டும் என்பது தெரிந்தது.” என்றாள் .

நீ பார்த்த படத்தில் உனக்கு பிடிச்ச விசயம் என்ன? இல்ல பிடிச்ச சீன் சொல்லு ? என்றார் காவியுடை அணிந்த மா.

      “ கதா நாயகி ஒருத்தனை காதலிப்பாங்க. அவன் வஞ்சனையுடன் பழகுவான். ஆனால், வீட்டில் தீடீரென்று மாப்பிள்ளை பார்த்திருவாங்க… அதுக்கு பின்னால காதலனை சந்திக்க போவாங்க.. அப்ப அவன் எப்பவும் போல அவளை தொட போவான், அப்போது அவள் அவன் கைகளை தட்டி விடுவாள் , இது அடுத்தவனுக்கான உடம்பு இத தொடக்கூடாது என சொல்லுவாள்” என அம்மாணவி வெகுளியாக சொன்னாள்.
  
    என் தோழி தன் வீட்டில் எப்படி விளம்பரங்களை பார்க்கும் போது எது நல்லது? எது கெட்டது? என தாய் உள்ளத்தோடு தன் குழந்தைக்கு குட் டச் பேட் டச் உணர்த்துவது போல , இந்த ஆசிரமத்திலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தேர்ந்தெடுத்த படங்களை திரையிட்டு, அவற்றிலுள்ள நல்லது கெட்டது    எது என்பதை இங்குள்ள மாஜிக்கள் விளக்குகிறார்கள். இவர்கள் தாயாகவே வாழ்கிறார்கள்.
அது சரி… டி.வியில் போடப்படும் படங்களை இவர்களால் தடுக்க முடியுமா? இந்த மாணவர்கள் அந்த படங்களை பார்த்து தானே ஆக வேண்டும்!
என்ற உங்களின் கேள்விகளுக்கு அடுத்த இடுகையில் பதிலளிக்கிறேன்.  
                                                                அதிசயங்கள் செய்து காட்டும் அதிசய பூமியின் அதிசயங்கள் தொடரும்

11 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிக நல்ல விஷயங்கள் பற்றிய மிகச்சிறந்த பதிவு.
எல்லோருக்குமே குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே கட்டாயம், ஒவ்வொரு தாயும் போதிக்க வேண்டிய பாடங்கள். கட்டாயமாக யாராக இருந்தாலும் பெண் குழந்தைகள் Distance Maintain செய்வது தான் பாதுகாப்பான ஒரே வழி. vgk

ராஜ நடராஜன் said...

புதிதாய் வந்து ஒட்டிக்கொண்ட நோய்களே நல்ல தொடல்...கெட்ட தொடல்.மனமும் மனிதனும் வளர்வதைப் பொறுத்தது என்பதை இரு வேறு சூழ்நிலைகளோடு ஒப்பீடு செய்துள்ளீர்கள்.

முன்பே யாருக்கோ ஒரு முறை இந்தப் பின்னூட்டம் இட்ட மாதிரி நினைவு.மறுபடியும் ஒரு முறை சொல்லி விடுகிறேன்.
பம்பாயிலிருந்து நானும் இரண்டு நண்பர்களும் இருந்த பெட்டியில் ஒரு பெண்மணி வந்து எங்களுடன் சகஜமாகப் பேசி பெயர் சொல்லி இன்னொரு இளம் பெண்ணை அறிமுகப்படுத்தி வேலூரில் மருத்துவம் படிக்கப் போவதாக எங்களிடம் அறிமுகப்படுத்தி விட்டு சென்று விட்டார்.நாங்கள் மூவரும் நட்பாகவே அந்தப் பெண்ணிடம் உணவு,பிஸ்கட் என பரிமாற்றம் செய்து பயணம் செய்தோம்.இளமைக்கான எந்த குறுகுறுப்பும் இல்லாமலே சென்னை போர்ட்டர் வரை அனுப்பி வைத்தோம்.இதற்கான காரணம் பம்பாயில் அந்தப் பெண்ணின் உறவினர் எங்களிடம் பேசிய நட்பான உறவே.பழகும் விதங்களைப் பொறுத்தது அனைத்தும்.

ஜெயகாந்தன் இயக்கிய கருப்பு வெள்ளைப்படம் சில நேரங்களில் சில மனிதர்கள் ஒய்.ஜி.பார்த்தசாரதியும்,லட்சுமியும் கூடவே நினைவில் வந்து போகிறார்கள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தொடருங்கள் ...

SURYAJEEVA said...

ok ok

MANO நாஞ்சில் மனோ said...

தொடருங்கள் சரவணன்....

shanmugavel said...

மனம் கவர்ந்த பதிவு,தொடருங்கள்.

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

மிகச்சிறந்த பதிவு

குறையொன்றுமில்லை. said...

மிக நல்ல விஷயங்கள் சொல்லி இருக்கீங்க அதுவும் பெண்குழந்தைகளுக்கு தாயாரின் வழிகாட்டுதல் மிகவும் அவசியமான ஒன்றுதான்.

Anonymous said...

நல்ல விடயங்கள் அடங்கிய பதிவு. பணி தொடரட்டும். வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

ராஜ நடராஜன் said...

இந்த பதிவைப் பற்றி தொடுப்புக்கொடுத்துள்ளேன்.

http://parvaiyil.blogspot.com/2011/09/blog-post_17.html

தனிமரம் said...

Thodarungal nanba

Post a Comment