Saturday, September 3, 2011

பிழியப்பட்ட சக்கைகள்


சாரு பிழியப்பட்ட
கரும்பு சக்கைகள்
பள்ளிக்கூட வாசலில்…
வகுப்பறையில்
பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார்
ஆசிரியர்…

சுதந்திரமாய்
மரத்தடி நிழலில்
காகம் கரைகிறது
வகுப்பறையில் மௌனமாய்
மாணவர்கள்….

பறந்து வந்தமர்ந்த காகம்
யாருக்கும் அஞ்சாமல்
ஆனந்தமாய் எச்சமிட்டது
கால்சட்டையை பிடித்து
ஓடிவந்த மாணவன்
தலைமையாசிரியரை பார்த்ததும்
அடக்கிக் கொண்டு திரும்பினான்…



21 comments:

சம்பத்குமார் said...

//வகுப்பறையில்
பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார்
ஆசிரியர்…

சுதந்திரமாய்
மரத்தடி நிழலில்
காகம் கரைகிறது
வகுப்பறையில் மௌனமாய்
மாணவர்கள்….//

காட்சியை கண்முன்னெ கொண்டுவந்துவிட்டீர்கள்
ஆசிரியரே..

தங்களுக்கும் தங்கள் ஆசிரிய நண்பர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

நட்புடன்
சம்பத்குமார்

Unknown said...

இன்றைய கல்விக் கூடங்களில் இருக்கும் வரம்பிற்கு உட்பட்ட சுதந்திரத்தினை அழகாக படம் பிடித்துக்காட்டுகிறது உங்களின் கவிதை.. வாழ்க கரையும் காகங்கள்..

கடம்பவன குயில் said...

பறந்து வந்தமர்ந்த காகம்
யாருக்கும் அஞ்சாமல்
ஆனந்தமாய் எச்சமிட்டது
கால்சட்டையை பிடித்து
ஓடிவந்த மாணவன்
தலைமையாசிரியரை பார்த்ததும்
அடக்கிக் கொண்டு திரும்பினான்//

மாணவர் நலனில் அக்கறையு்ள்ள புரிதலுள்ள ஆசிரியர் நீங்கள். பாராட்டுக்கள்.

கோகுல் said...

இன்னும் எத்தனை பள்ளிகளில் இந்த நிலை தொடருகிறதோ?
நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்!

தனிமரம் said...

எப்போது தான் பள்ளி ஒரு சுதந்திரமான கோயிலாகும் நல்ல கவிதை!

Philosophy Prabhakaran said...

இதை மட்டும் "சாரு" பார்த்தா ரொம்ப ஃபீல் பண்ணுவார்.... பாவம் அவரைப் போட்டு பிழிஞ்சிட்டீங்க:) சாறுன்னு மாத்துங்க தல...

SURYAJEEVA said...

கரும்பு சக்கைகளாய் மனிதர்கள் மாறி வெகு காலம் ஆகி விட்டது.. என்று மனிதனாய் உணர்வு பெறுவானோ..

அமைதி அப்பா said...

நல்ல கவிதை.

ஆசிரியர் தின வாழ்த்துகள்!

Amudhavan said...

உருவகக் கவிதைகளுக்கான காட்சிகள் அழகாக வந்திருக்கின்றன, வாழ்த்துக்கள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்லாயிருக்கு .

G.M Balasubramaniam said...

சொல்ல நினைத்ததை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

virutcham said...

மரத்தடி வகுப்புகள் இன்னும் நடைபெறுகிறதா? முறையான வகுப்பறைகள் இல்லை என்பதாலா?
எது சமச்சீர் என்ற கேள்வி தாங்கிய கவிதையாக இதைக் காண்கிறேன்.

Anonymous said...

கவிதை ரொம்ப நல்லாயிருக்கு... மௌனமாய் ரசித்தேன்.

-சே.குமார்.
மனசு.

cheena (சீனா) said...

அன்பின் சரவணன் - எதிர் மறையான இரு செயல்களை இணைத்து பத்தி பத்தியாக கவிதை வடித்தமை நன்று. மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

r.v.saravanan said...

கவிதை ரசித்தேன்.


தங்களுக்கு இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் said...

கவிதை ரொம்ப ரொம்ப நல்லாருக்கு..

மாய உலகம் said...

மாணவனின் இக்கட்டான நிலையை கவிதையில் கலக்கலாக கலங்க அடித்து விட்டீர்கள்..நன்றி

மாய உலகம் said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

சத்ரியன் said...

சரவணன் சார்,
சரியாக கவிதையாக்கி விட்டீர்கள்.

ஆசிரியர்கள், அரக்கர்களாய் நடந்துக் கொண்டால் மாணவர்கள் வேறென்ன செய்வார்கள் ...?

ஆசிரியர்கள் மாணவர்களிடம் கற்க வேண்டிய பாடம் நிறைய இருக்கு.

விச்சு said...

சுதந்திரமில்லா வகுப்பறைகள்!!! நச்சுனு சொல்லிட்டீங்க!!

அ. வேல்முருகன் said...

குருகுல கல்வி மாறவில்லை

Post a Comment