வார்த்தைகள் கொடுத்து கதை எழுத கற்றுத் தந்ததைத் தொடர்ந்து ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பனை திறன் அதிகரிக்க உதவும் வகையில் பயிற்சி வழங்கப்பட்டது. மாணவர்கள் ஆறு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். குழுவில் கலந்து ஆலோசித்து ஒருவர் மட்டுமே பதில் சொல்ல வேண்டும் என்ற நிபந்தனையுடன் , ஒரு கரு கொடுக்கப்பட்டது. பேருந்தில் பயணம் என்று கொடுக்கப்பட்டது. முதல் குழுவில் உள்ள மாணவன் ஒருவன் எழுந்து, “நான் பேருந்தில் சென்று கொண்டிருந்தேன் “ என்றான். அடுத்தக் குழு மாணவன் ஒருவன் எந்தவித ஆலோசனையும் சக மாணவனுடன் செய்யாமல் உடனே எழுந்து ,”திடீரென்று பேருந்தின் டையர் வெடித்தது” என்றான். மீண்டும் மாணவர்களுக்கு குழுவில் கலந்து கொண்டு முடிவெடுக்க கற்றுக் கொடுக்கப்பட்டது. மூன்றாவது குழு ஆலோசித்து முடிவெடுத்து ,”டிரைவர் பத்திரமாக பேருந்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தினார்” என்றனர். நான்காவது குழு மாணவர்கள் ,”வண்டி ஓட்டுனரும் , நடத்துனரும் சேர்ந்து டயரை சரி செய்து வண்டியை எடுத்தனர்” என்றனர். ஐந்தாவது குழுவை சேர்ந்த மாணவர்கள் நீண்ட ஆலோசனைக்கு பின்பு , “ மீண்டும் வண்டி மெதுவாக கிளம்பியது. அனைவரும் ஆனந்தப் பட்டு பயணித்த பொழுது வண்டி மீண்டும் நின்றது” என்றனர். ஆறாவது குழு மாணவர்கள் நிதானமாக ஆலோசித்து கதையை முடித்து வைத்தனர். ஆச்சரியமாக இருக்கிறதா ! அவர்கள் அளித்த பதில் இதோ : பயணிகள் அனைவரும் இறங்கினர். மீண்டும் நடத்துனரும் , ஓட்டுனரும் சேர்ந்து சரிசெய்ய முயன்றனர். நான் ஆட்டோ பிடித்து குறித்த நேரத்தில் வேலைக்கு சென்றேன்.
இதேப் போல பல தலைப்பு மற்றும் கருக்கள் கொடுக்கப்பட்டு கதைகள் சொல்லப்பட்டன. உங்கள் குழந்தைகளுக்கும் இதே போல தலைப்புகள் கொடுத்து கற்பனைத் திறனை வளர்க்கலாம். அடுத்த பதிவில் தனித் தனியாக மாணவர்கள் செயல்பட்டு கற்பனைத் திறனை வளர்ப்பது எப்படி என்பதனைப் பார்க்கலாம்.
10 comments:
தகவலுக்கு நன்றி சகோ..
வித்தியாசமான முயற்சியில் ஈடுபடுகிறீர்கள். இப்படி குழுக்கள் அமைத்து செயலாற்ற வைக்க முயலும்போது, சாதாரணமாக சில குழுக்களில் சைலண்ட் பிரதிநிதிகளை அடையாளம் கண்டு கொண்டு அவர்களையும் பங்கு பெறச் செய்தல் வேண்டும். முயற்சிக்குப் பாராட்டுக்கள்.
நல்ல முயற்சி .வாழ்த்துக்கள்.
வித்தியாசமான முயற்சியாக உள்ளதே ...
Super ... :-)
கவனிக்க வேண்டிய விசயம். நல்ல பதிவு.
தங்களை பதிவுலக நட்புத் தொடர்பதிவு எழுத அழைத்துள்ளேன். நேரமிருக்கும்போது பங்கெடுத்து தங்களின் கருத்துக்களை பதிவு செய்யவும். நன்றி.
http://mahizhampoosaram.blogspot.com/2011/07/blog-post_28.html .
அருமையான முயற்சி வாழ்த்துக்கள்........
நண்பரே!
அருமையான பதிவு ஒவ்வொரு
ஆசிரியரும் அறிய வேண்டிய செய்தி
நீர், நல்லாசிரியர் விருது பெற
வாழ்த்துகிறேன்
இந்த தமிழாசிரியர் பக்கம்
வரக்கூடாதா
புலவர் சா இராமாநுசம்
எல்லா ஆசிரியர்களும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்
இன்றுதான் வலைசரம் மூலம் உங்கள் வலைப்பூ எனக்கு அறிமுகம் . வலைப்பூ பதிவு மிக மிக அருமை..நல்ல விசயங்களைச் சொல்றீங்க.பாராட்டுக்கள்.Followrs -ல்
சேர்ந்து விட்டேன்..
Post a Comment