Tuesday, July 19, 2011

கற்பனைத் திறன் வளர்ப்பது எப்படி?

சமச்சீர் கல்வி அமல்படுத்தும் வரை புத்தகம் இல்லாமல் மாணவர்கள் கஷ்டப்படுகிறார்கள் அதனால் பெற்றோர் வருத்தப்படுகிறார்கள் என அரசியல் ஆக்கப்படும் கல்வி சாலைகளில் ஆசிரியர்கள் திறம்பட மாணவர்களின் கற்பனைத் திறன் வளர்க்கிறார்கள் என்பதற்கு என் வகுப்பறையில் (ஐந்தாம் வகுப்பு )இன்று நான் மேற்கொண்ட கற்பித்தல் முறையே சான்றாகும்.
மாணவர்கள் எப்போதும் போல என்னிடம் சார் கதை சொல்லுங்கள் என்று ஆரம்பித்தார்கள் . ஒரு மாறுதலுக்கு…. என நிறுத்தினேன் .கதையை நீங்கள் சொல்லுங்கள் என  நான் சொல்லுவேன் என்று எதிர்பார்த்த மாணவர்களுக்கு , கதையை நாம் உருவாக்குவோம் என்றேன். அனைவரும் சார் நான் கதை சொல்லுறேன்  என் மீண்டும் புரியாமல் கையை தூக்கி கதை சொல்ல தயாராக இருந்தனர்.
நான் மெதுவாக அவர்களை  பொறுமையாக இருக்கch செய்து. முதல் வரிசையில் அமர்ந்துள்ள மாணவிகள் வரிசையை நோக்கி , உனக்கு பிடித்த விலங்கு எது ? (கலந்து  ஆலோசனை செய்து சொல்ல சொன்னேன்) முதல் குழுவில் முயல் என்றனர். பின்பு ,எதிர் புறம் அமர்ந்துள்ள இரண்டாவது வரிசை மாணவர்களை நோக்கி, உங்களுக்கு பிடித்த பறவை எது என்று கேட்டேன். அவர்கள் கிளி என்றனர். அதே போல் முறையே மூன்றாவது மாணவர் வரிசை , நான்காவது மாணவியர் வரிசையை உங்களுக்கு பிடித்த காய்கறி? உங்களுக்கு பிடித்த நிறம் ? என்ற கேள்விகளுக்கு முறையே  காரட், சிவப்பு என்றனர். அடுத்ததாக கடைசி வரிசை மாணவியரை பார்த்து உங்களுக்கு பிடித்தவர்களின் பெயர் கேட்டேன். அதற்கு அவர்கள் சினிமா நடிகையை சொல்லலாமா? எனக் கேட்டனர். சரி என்றேன். திரிஷா என்றனர். கடைசி பெஞ்ச் மாணவரை பார்த்து உனக்கு பிடித்த கடல் உயிரி ? என்றேன். அதற்கு அவர்கள் மீன் என்றனர்.  
அவர்கள் சொன்ன பதில்கள்
முயல்
கிளி
காரட்
சிவப்பு
திரிஷா
மீன்

மேலே விடைகளாக சொன்ன வார்த்தைகளை கொண்டு ஒரு கதை சொல்லும் படி சொன்னேன். சிலருக்கு புரிய வில்லை. சரி நாம் அனைவரும் சேர்ந்து கதை சொல்லுவோம் என சொல்லி ஆரம்பித்தேன்.
முயல் ஒன்று காட்டில் வசிக்கிறது. அடுத்து ஒரு குழுவை நோக்கி அடுத்த வரியை கூற சொன்னேன். அதற்கு ஒரு மாணவி முயல் காரட் சாப்பிடும் என்றாள். நான் இது கட்டுரை இல்லை. சம்பவங்கள் அல்லது அதற்கு தகுந்த தொடர்புடைய கதையாக மாற வாய்ப்புள்ள வாக்கியங்களை சொல்லுங்கள் அதற்காக ஒவ்வொரு வாக்கியத்திலும் மேலே சொன்ன வார்த்தைகள் இடம் பெற அவசியமில்லை. கதை முடிவில் அனைத்து வார்த்தைகளும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்றேன். கடைசி பெஞ்ச் மாணவி ..முயல் பசியால் உணவு தேடி சென்றது என்றாள். மிகச் சரி என்றேன்.  இரண்டாவது பெஞ்ச் மாணவிகள் கோரசாக ,காரட் செடியை பார்த்து மகிழ்ச்சி அடைந்து , காரட்டை கடித்து தின்றது என்றனர். குழுவில் ஒருவர் மட்டுமே சொல்ல வேண்டும் என்றேன்.  அடுத்த மூன்றாவது பெஞ்ச் மாணவர்கள் காரில் வந்த நடிகை திரிஷா , முயலை பார்த்து வண்டியை நிறுத்தினார் என்றனர். சபாஷ்  என்றேன். அடுத்த குழு முயலை பிடித்து திரிஷா தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் என்றார்கள் . அடுத்த குழுவில் ஒரு மாணவி எழுந்து , திரிஷா வீட்டில் கிளி சிவப்பு நிற ஆப்பிள் சாப்பிட்டுக் கொண்டிருந்தது என்றாள். சரி அடுத்த குழு என்றேன். அடுத்த குழுவில் உள்ள மாணவர்கள் அனைவரும் திரிஷா மீன் தொட்டியில் மீன் வளர்த்தாள் என்றனர். கதையில் முடிவு இல்லை.. இதே போல தான் எழுத வேண்டும் . இதே போல முயற்சி செய்து கதைக்கு முடிவு தந்து தனி தனியாக குழுவில் எழுத சொன்னேன். அவர்களிடம் இருந்து பெற்ற கதைகளில் சிறந்த இரண்டு கதைகள் இதோ….

அடர்ந்த காட்டில் முயல் ஒன்று வசித்தது. காட்டின் நடுவில் ஒரு பாதை சென்றது. நடிகை திரிஷா அக் காட்டில் சினிமா சூட்டிங்கிற்கு வந்தார். முயல் பசியால் காரட் தேடி சென்றது. படக் குழுவினர் முயலை பிடித்து வந்தனர். நடிகை முயலை அவர்களிடம் இருந்து காப்பாற்றி , தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவர் வீட்டில் மீன், கிளி போன்ற உயிரினங்களை ஆசையுடன் வளர்த்து வந்தார். திரிஷா கத்தியுடன் வந்தார். முயல் பயந்தது. முயலை கையில் பிடித்து மடியில் வைத்தார். மேஜை மேல் இருந்த ஆப்பிளை எடுத்து நறுக்கி , முயலுக்கும் கொடுத்து உண்டார். சிவப்பு வண்ண மீன் தொட்டியில் நீந்துவதை ரசித்த படி புத்தகம் படித்தார். முயல் பயம் நீங்கி மகிழ்ச்சியுடன் வாழ்ந்தது.


இரண்டாவது:

ஒரு காட்டில் முயல் வசித்தது. அதற்கு பசி எடுத்தது. காரட் செடியில் இருந்து காரட் தின்றது.  அக்காட்டில் ஒரு கிளி வசித்தது. கிளியும் , முயலும் நண்பர்கள். ஒரு நாள் காட்டில் வேட்டைக்கு வந்த நடிகை திரிஷா முயலை பிடித்துச் சென்றார். கிளி தன் நண்பனை பிடித்து செல்வதை பார்த்து பதறியது. திரிஷாவை பின் தொடர்ந்து சென்றது. திரிஷா வீட்டில் முயலை அடைத்து வைத்தார். கிளி பறந்து வந்து வீட்டினுள் நுழைந்தது. திரிஷா ஆசை ஆசையாக மீனுக்கு உணவளித்து, தொட்டியில் மீன் நீந்துவதை பார்த்து ரசித்து சிவப்பு நிற சோபாவில் ஆப்பிள் சாப்பிட்டு கொண்டிருந்தார். அதை பார்த்த கிளி ஒரு யோசனை செய்தது. நேராக மீன் தொட்டியில் சென்று திரிஷாவை பார்த்து என் நண்பன் முயலை விடுதலை செய்ய வில்லை எனில் இந்த மீன்களை கொத்தி கொத்தி தின்று விடுவேன் என மிரட்டியது. விலையுயர்ந்த மீன்களுக்காக, முயலை விடுதலை செய்தாள். நண்பர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் காட்டில் வசித்தனர்.

    இதே போல வீட்டில் உங்கள் குழந்தைகளுக்கு சில வார்த்தைகள் கொடுத்து , அவர்களின் கற்பனை திறனை வளர்க்கவும். நீங்கள் அவர்களுக்கு முழுமையான வாக்கியங்கள் அமைக்க உதவலாம். ஆனால் கற்பனை அவர்களின் சொந்தமானதாக இருக்க வேண்டும் . அதற்கான உதவியாக சில முயற்சிகளை செய்ய உதவலாம். தாம் படித்த கதைகள் மூலமாக கொடுக்கப் பட்ட வார்த்தைகளுக்கு உயிரூட்ட செய்யலாம். எலியும் சிங்கமும் கதை தான் இரண்டாவது கதைக்கு உதவியது.  முயற்சி செய்து பாருங்களேன்.  புத்தகம் இல்லாதது பாட சுமைகள் மறந்து உண்மையான திறனை வளர்க்க உவியாக இருக்கிறது என்பது என் கருத்து .         

20 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

முதல் விதை முளைத்ததே.....

தமிழ்வாசி பிரகாஷ் said...

சிறுவர்களுக்கு விளங்குமாறு கதை சொல்லியிருக்கிங்க தலைவரே....

நீச்சல்காரன் said...

ஆஹா ஆஹா குழந்தைகளுக்கு சபாஸ்

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நல்ல முயற்சி. வாழ்த்துகள்.
சமுதாய நண்பன் புத்தகத்திற்கு உங்கள் மாணவ மணிகளிடமிருந்து படைப்புக்கள் வாங்கி எனது முகவரிக்கு அனுப்புங்கள். பிரசுரிக்க முயற்சி செய்கிறேன். தயார் செய்த குழந்தைகளின் புகைப்படங்களையும் சேர்த்து அனுப்புங்கள்.
நன்றி.

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...

மாணவ்ர்களின் சிந்திக்கும் திறனையும், கற்பனைத் திறனையும் தூண்டும் அருமையான உத்திக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

அன்பின் சரவணன் - ந்ல்ல சிந்தனையில் விளைந்த நல்ல செயல் - மாணவர்களின் தொறமை ஊக்குவிக்கப்படும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ஆமினா said...

குழந்தைகளின் கற்பனை திறனுக்கு பாராட்டுக்கள்

Unknown said...

என்னமா பின்றீங்கய்யா.....எனக்கு தேவையான விஷயங்கள்தான் பகிர்வுக்கு நன்றி நண்பா!

Anonymous said...

சிறுவர்களுக்கு விளங்குமாறு கதை சொல்லியிருக்கிங்க

Anonymous said...

சிறுவர்களுக்கு விளங்குமாறு கதை சொல்லியிருக்கிங்க

ராஜ நடராஜன் said...

முதலில் உங்கள் பாடம் நடத்தும் திறனுக்குப் பாராட்டுக்கள்.இந்த பதிவை படிக்காமலே உண்மை தமிழன் சமசீர் கல்வி பதிவில் உங்களது பின்னூட்டம் குறித்து சொல்லியுள்ளேன்.

ஜெயலலிதாவின் அனைத்து நடவடிக்கைகளும் தி.மு.க நிலைக்கு எதிரானதாக இருந்தும் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக செய்யும் மாற்று வழிகள் என்ற கோணத்தில் பார்க்க முடிந்தது.ஆனால் சமச்சீர் கல்வியில் அ.தி.மு.கவின் பிடிவாதத்திற்கு காரணமென்ன?அரசின் சமசீர் கல்வியில் மேல்முறையீட்டுக்கு காரணம் மற்றும் நிலைப்பாடு என்ன என்பதை சொல்ல முடியுமா?

மாணவர்களின் கல்வியென்பதோடு தனது எதிர்கால அரசியலை தீர்மானிக்கும் முக்கியப்பிரச்சினை என்பதை பிடிவாதம என்ற காரணம் கொண்டு மட்டும் ஜெயலலிதா உணராதவராக இருப்பாரா?

அரசின் நிலைப்பாடு என்ன என்பதை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

ராஜ நடராஜன் said...

முந்தைய பின்னூட்டத்துக்கு நீங்க மறுமொழியே சொல்ல வேண்டாம்.ஏனைய தலைப்புக்களை பார்வையிடும்போது சலுன்கடையில் சமச்சீர் கல்வி பதிவு மொத்த பரிமாணங்களையும் நடைமுறை யதார்த்த மனிதர்களின் வாயிலாக அழகாக சொல்கிறது.

shanmugavel said...

ஒரு பாட வேலையே இப்படி வைக்கலாம் என்று தோன்றுகிறது.

Anonymous said...

நல்ல பதிவு...வாழ்த்துகள்...

மாய உலகம் said...

எனக்கே கூட இது நல்ல ஐடியாவாக தோன்றுகிறது....நான் கூட இந்த முறையில் முயற்சி செய்து பார்க்கிறேன்.... நல்ல பதிவு வாழ்த்துக்கள்

Unknown said...

நல்ல பதிவு!
அருமை! நண்பரே! அருமை!! மாணாக்கரின்
கற்பனைத் திறனை வளர்க்க தாங்கள் மேற் கொண்டமுறை தரமிகு ஆசிரியருக்கு நல்ல ஓர் எடுத்துக்காட்டு
வாழ்க! தாங்கள்

Unknown said...

தமிழ் நாடு பாட நூல் குழுவில் தங்களைப்போன்றோர்- தாங்கள் தவறாமல் இடம் பெறவேண்டும்.

Guna said...

ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகி .. இப்போதுதான் இந்த வலைப்பூ வை தொடருப்படி அமைத்து உள்ளேன் . இதுவரை சுமார் ஐம்பது போஸ்ட் களை செய்த பிறகு இப்போதுதான் இதை ஆரமிப்து இருக்கிறேன்..


ஏற்கனவே வருகை தந்தவர்களும் , புதிதாக வருகை தருபவர்களும் இணைத்து கொள்ளவும் ...

வலைபூ நண்பர்கள் இணைந்தால் disccusion forum கலை கட்டும் ..


அதற்க்காகவே ஒரு புதிய பக்கம் தொடங்குவதால் .. நண்பர்கள் இணைத்துக்கொண்டால் ,நண்பர்களை பின் தொடரவும் வசதியாக இருக்கும்


நன்றி
http://vallinamguna.blogspot.com/

Dhiyana said...

மிக‌வும் அருமையான ப‌திவு + யோச‌னை. என ம‌க‌ளுட‌ன் முய‌ற்சித்தப் பார்க்கிறேன்.

Post a Comment