Thursday, July 14, 2011

கல்வி கண் திறந்த காமராசர்

விருதுபட்டியில் பிறந்த விசித்திர மனிதர் காமராசர்…
காமராசர் –இருண்டு கிடந்த இந்திய தேசத்தில் கருப்பு காந்தியாய் வந்து பிறந்தவர்.
அவரது நிறம் தான் கருமை உள்ளமெல்லாம் களங்கமில்லா வெள்ளை மலர்த்தோட்டம். அந்த வெள்ளை மலர்த் தோட்டம் தான் சிவப்பு ரோஜாவை சூடியிருந்த நேரு பெருமகனாரை சிம்மாசனத்தில் அமர வைத்து அழகு பார்த்தது
அவர் கோட்டையிலே அமர்ந்திருந்தாலும் எண்ணமெல்லாம் குடிசையிலே தான் குடியிருந்தது. ஏழைகளை நேசித்த ஏழை பங்காளன் அவர்.
தேசத்தின் மானத்தை காப்பதற்காக , தேசத்தின் மானத்தை காக்கும் ஜவுளிக்கடை வேலையை வெறுத்தார்.
அரண்மனை வாழ்க்கையை விட்டு வெளியேறியதால் சித்தார்த்தன் புத்தன் ஆனார். பதவிச் சுகங்களை உதறித் தள்ளியதால் காமராசர் கர்மயோகி ஆனார்.
இப்படி இந்த பெயரை எழுதுகிற போதும், கேட்கிறபோதும் , ஏதேதோ நினைவுகள் இன்னும் நெஞ்சில் நிழலாடுகின்றன.
இன்று சற்று கூடுதலாக…ஜீலை15 காமராசர் பிறந்த நாள் கவியரசர் கண்ண தாசன் சொன்னதைப் போல “காமராசர் பிறந்த நாள் கவலைகளை மறந்த நாள்” ஆகும்.
இன மொழி எல்லைகளை கடந்த எல்லோர் மனதிலும் இடம் பிடித்த விசித்திரங்களின் விசித்திரம் அவர். விழிகளை வியக்க வைத்த வரின் விழிகள் மூடி விட்டன. அவரின் கடைசி நாட்களை கவியரசர் கண்ணதாசன் ,
தங்கமே, தென்பொதிகை சாரலே
சிங்கமே என்றழைத்து
சீராட்டும் தாய் தவிர
சொந்தமென்று ஏதுமில்லை
துணையிருக்க மங்கையில்லை
துயமணி மண்டபங்கள்
தோட்டங்கள் ஏதுமில்லை
ஆண்டி கையில் ஓடிருக்கும்
அதுவும் உனக்கில்லையே..”
என்று கவிதைகளால் கண் கலங்கினார்.

தூய்மை, வாய்மை, நேர்மை இந்த மூன்று சொற்கள் இருக்கும் வரைக்கும் கர்மவீரர் காமராசர் பெயர் நிலைத்திருக்கும்.     

  


20 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

காலத்தால் அழியாத கருப்பு வைரம்..

தமிழ்வாசி பிரகாஷ் said...

தலைவரே... ஒரு தலைவரை பற்றி சொல்லியிருக்கார். பகிர்வுக்கு நன்றி....

தமிழ்வாசி பிரகாஷ் said...

எப்பவும் நைட் தானே பதிவு போடுவிங்க... இப்ப என்னாச்சு?

G.M Balasubramaniam said...

அந்த வெள்ளை மலர்த் தோட்டம்தான், சிவப்பு ரோஜாவை சூடிய நேரு பெருமகனாரை சிம்மாசனத்தில்
அமரச் செய்து அழகு பார்த்தது. காமராஜரிடம் கொண்டுள்ள அளவற்ற அன்பு உங்களை அவர் செய்யாததை செய்ததாக கூறவைக்கிறது. அகில இந்திய
அளவில் நேருவின் மறைவுக்குப் பிறகுதான் காமராஜருக்குப் புகழ் வந்தது. கிங் மேக்கர் என்றெல்லாம் அழைக்கப்பட்டார்.

வலையுகம் said...

நண்பரே சிறப்பான பதிவு.

காயிதே மில்லத் அவர்களுடன் பெரியவர் காமராஜர் அவர்கள் கொண்டிருந்த நட்பை இங்கு நினைவு கூற வேண்டியிருக்கிறது.
அவர்களின் நட்பு கட்சி,மதம் அனைத்தையும் கடந்த தூய்மையான நட்பு

நன்றி நண்பரே

Anonymous said...

என்றுமே எனக்கு பிடித்த தலைவர் ...

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
மாமனிதரை இன்று நினைப்போம்.
வாழ்த்துக்கள்.

முனைவர் இரா.குணசீலன் said...

கல்வியின் சிறப்பைப் பட்டிதொட்டியெங்கும் பரப்பிய மாமேதை.

MANO நாஞ்சில் மனோ said...

மாமேதை அவர்......!!

MANO நாஞ்சில் மனோ said...

இப்போ இருக்கும் அரசியல் வியாதிகள் அவர் கால் தூசுக்கும் சமம் கிடையாது இல்லையா...???!!!

ஹேமா said...

நல்ல மனிதரை நினைக்க வைத்ததுக்கு நன்றி சரவணன் !

shanmugavel said...

அரசியலில் மீண்டும் அவரைப்போல ஒரு ஆளுமையை பார்க்க முடியும் என்று தோன்றவில்லை.சத்துணவுக்கு முன்னோடியான மதிய உணவுத்திட்டத்தை கொடுத்தவர்.

Anonymous said...

நல்ல பதிவு சரவணன்...எனக்கு பிடித்த ஒரு தலைவர் ... வாழ்த்துக்கள்...

Unknown said...

ரஜினி ஒரு மோதி திரும்பி உள்ளது மற்றும் அவர் சிறந்த என்ன செய்து, மக்களை மகிழ்விக்க மற்றும் இன்னும் ஒரு நல்ல நேரம். மேலும் அறிய இங்கே சொடுக்கவும்
http://bit.ly/n9GwsR

மாய உலகம் said...

நல்ல மனிதரை நினைவு கூர்ந்ததற்கு நன்றி ..... தங்கள் பதிவு மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.. தொடருங்கள்......வந்து கொண்டேயிருக்கிறேன்...

முனைவர் இரா.குணசீலன் said...

அன்பு நண்பா தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்

http://blogintamil.blogspot.com/2011/07/blog-post_18.html

நன்றி.

erodethangadurai said...

பொன்னை விரும்பார் ..
பொருளை விரும்பார்..
புகழை விரும்பார்...!

காமராஜர் மறைந்தவுடன் அவரது வீட்டை அரசு எடுத்துக்கொண்டது.!

அவர் பொருட்களை சொந்தங்கள் எடுத்துக்கொண்டது.!

காமராஜர் என்ற பெயரை மட்டும் இந்த உலகம் எடுத்துக்கொண்டது.!

வாழ்க அவரது புகழ்..

சம்பத்குமார் said...

கிங் மேக்கர் காமராஜர் அவர்களின் வாழ்வு தற்போதை ய அரசியல்வாதிகளுக்கு ஒரு படிப்பினை..

நன்றி நண்பரே...

சம்பத்குமார்.B
http://parentsactivitytamil.blogspot.com

iniyan said...

அருமையான கட்டுரை எமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்
இனியன்
9962268966

Snekha Darshini said...
This comment has been removed by the author.

Post a Comment