Friday, June 24, 2011

கற்றுக் கொடுக்கும் சக மனிதன்


உழுது வாழும் நிலத்தை
பிள்டர்சுகளுக்கு
விலைக்கு விற்கும்
விவசாயி….

ஆபிரேசன் என்றால்
தன் பணத்தையே
அடுத்தவன் பணம்
என வட்டிக்கு கொடுக்கும்
சக பணியாளன்…

அலுவலக வேளையில்
சுய தொழில் செய்யும்
அரசு ஊழியன்…


வகுப்பு நேரத்தில்
மாணவன் ஆயுளை மறந்து
ஆயிள் காப்பீட்டுக்கு
ஆள் சேர்க்கும் ஆசிரியன்….

உற்சாகமாய் பேச்சுக் கொடுத்து
ஊளையிடும் இரயிலில்
பிஸ்கட் கொடுத்து
உள்ளதையெல்லாம்
அள்ளிச் செல்லும்
சக பயணி…

எது இருந்தாலும்
இல்லாவிட்டாலும்
எதையாவது சொல்லி
காசு பிடுங்கும்
டிராபிக் காண்ஸ்டபிள்…

கூட்டம் இருந்தாலும்
இல்லாவிட்டாலும்
சில்லரையை சரியாக கொடுக்காத
கவர்மெண்டு பஸ் கண்டெக்டர்….

கோப்பு எப்படி இருந்தாலும்
அதை நகர்த்த
கூச்சப்படாமல் கேட்டு
வாங்கும் அரசு ஊழியன்…

அரசு உத்தரவுகளை
செவி மடிக்காது
கூடுதல் கட்டணம் வசூலிக்கும்
பள்ளி முதலாளி….

கூடுதல் இடங்களுக்கு
விண்ணப்பித்து அனுமதி பெறாமலே
மாணவர்களை சேர்க்கும்
கல்லூரி முதலாளிகள்….

நேரடியாகவோ
செய்திகளிலோ
சந்திக்கும்  
என் தேசத்து
சக மனிதர்கள் இவர்கள்
எனக்குக்
கற்றுக் கொடுப்பது
சம்பாதிக்க மட்டுமே…!
    

9 comments:

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

செருப்பால் அடிச்ச மாதிரி இருக்கு. பின்னிட்டீங்க

வை.கோபாலகிருஷ்ணன் said...

கவிதை நன்றாக உள்ளது.

//ஆயிலை மறந்து ஆயில் காப்பீட்டுக்கு// = தவறு

ஆயுளை மறந்து ஆயுள் காப்பீட்டுக்கு = சரி

தயவுசெய்து திருத்தி விடவும்.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

Voted 1 to 2 in Indli

மோகன்ஜி said...

நாட்டில் நடக்கும் அவலங்களை சீராய் பதிவிட்டிருக்கிறீர்கள்.. என்றிந்த நிலை மாறும் என்று பெருமூச்சு விட்டபடி வாழ பழகிவிட்டோமல்லவா?

நிரூபன் said...

ஏமாற்றியும், குறுக்கு வழியிலும் பிழைப்பு நடாத்துவோரைப் பற்றிச் சம்மட்டியால் அடிப்பது போன்ற உணர்வு எழும் வண்ணம் கவிதையினைப் படைத்திருக்கிறீங்க.

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
நாட்டு நிலைமை இப்படித் தான் இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

shanmugavel said...

அற்புதம்.

A.R.ராஜகோபாலன் said...

///சக மனிதர்கள் இவர்கள்
எனக்குக்
கற்றுக் கொடுப்பது
சம்பாதிக்க மட்டுமே…!
///

நெஞ்சில் அறையும் வார்த்தைகள்
நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை
கண்முன்னே நிறுத்திய கவிதை
அற்புதம் நண்பரே

கோகுல் said...

மனிதநேயம் கிலோ என்ன விலை என்று
கேட்க வைக்கிறது.

cheena (சீனா) said...

அன்பின் சரவண, ஆதங்கம் புரிகிறது - ஒன்றும் செய்ய இயலாது - ஊரோடு ஒத்துப் போக வேண்டிய நிலையில் தான் நாட்டு மக்கள் இருக்கின்றனர். ம்ம்ம்ம் பொறுத்திருப்போம் நல்ல காலம் வரும் வரை. நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

Post a Comment