ஆனந்தம் இருக்காதா
பின்னே…?
கூடுதல் விடுமுறை
பள்ளி திறந்த பின்னும்
பாட புத்தகம் இல்லை
வீட்டுக்கும் பள்ளிக்குமாய்
வெறுமனே நகர்ந்த
கார்டூன் சித்திரங்கள்
முதல் வேலையாய்
தங்களின் முதல் புத்தகம் கிடைத்தவுடனே
கிழித்தன
அகர முதல எழுத்து
தந்த முனிவன்
மறைக்கப்பட்ட பச்சை லேபிலை…!
10 comments:
இப்படி ஒவ்வொருத்தரும் புத்தகத்தை மாற்றினால் பாடத்திட்டம் என்னவாகும் என்பதை இயல்பாக கூறும் கவிதை.
தலைவரே... இப்போ என்ன பாடம் நடத்துறிங்க?
வாத்தியாருங்க கிழிக்கிற வேல பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க .. பாவம்,. அவங்க. பசங்க பாடு கொண்டாட்டம்தான்
அவர்கள்தான் என்ன செவார்கள் பாவம் !
முகத்தில் அறையும் யதார்த்தம்.நன்று சரவணன்.
மிக அருமையா சொன்னீங்க சரவணன்.. :)
புத்தகங்களே ஜாக்கிரதை
பிள்ளைகளைக் கிழித்துவிடாதீர்கள்
என எச்சரிக்கலாமே !!....
http://blogintamil.blogspot.com/
தங்களை வலைச்சரத்தில் குறிப்பிடுள்ளேன். கருத்துக்களை தெரிவிக்கவும். நன்றி.
கல்வியிலும் காழ்ப்புணர்ச்சி பெறலாம் ..
தொகுத்தவனை வாழ்த்தலாம் ..மறைத்தவனை ?
அன்பின் சரவண, ஆட்சிகள் மாறும் போது இவை எல்லாம் நடக்கும். பச்சைத் தாள் ஒட்டும் வேலை ஆசிரியர்களுக்கு....... என்ன செய்வது. உண்மை நிலை கவிதையாக வந்திருக்கிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment