Friday, June 17, 2011

தொலைந்த மூக்கு கண்ணாடியின் தேடல்


தொலைந்த மூக்கு கண்ணாடியின்
தேடுதல்
புதைந்து மறந்திருந்த இறந்தகாலத்தை
நிகழ்காலமாக்கி
கண்முன்னே படரச்செய்தது
அலமாரியில் இருந்து
கிழே விழுந்த அழுக்கு மூட்டை
அவிழ்ந்த போது ….
தூசி பறந்து அறையேங்கும் சூழ்ந்தது
தூசி அவிழ்ந்த மூட்டையில் மட்டுமில்லை
உங்களுக்கு தெரியும்
அவன்
இவன்
என எல்லார் கைகளிலும்
தூசி …
கைகளில் மட்டுமல்ல
உடல் எங்கும்
சுவாசமாகி
மூச்சுக் குழல் வழியாக
காற்றில் விரவி
உலகமெங்கும் நிரம்பியிருக்கும்
இவ்வேளையில்
தூசிகள் நிரம்பிய
காகிதத்தின் கருப்பு எழுத்துக்கள்
பாதளத்துக்கு அப்பால்
ஏழுமலை எழுகடல் தாண்டி
மறைத்து வைக்கப்பட்ட
ரகசியத்தை சொல்வதாக இருந்தது
ரகசியம்
அவனுக்கானதாக
இவனுக்கானதாக
உனக்கானதாக  
எனக்கானதாக இருக்கலாம்   
அது
எவரையும் பற்றி
கவலைப்படாமல்
துரத்தி துரத்தி
ஓடி இளைத்து
முடிவில் …
எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே
புணரும் நாய்க்கு ஒப்பானது
புணர்வுக்கு பின்னான
நாயின் கஷ்டம்
தூசியில் அப்பி
உலகமெங்கும் சுற்றி வருகிறது
தொலைத்து பாருங்கள்
உங்களுக்கும்
எதாவது அழுக்கு மூட்டை அகப்படலாம்…!

9 comments:

ஹேமா said...

அரைவாசி வரைக்கும் சரியான கோணத்தில கவிதை விளங்கிச்சு.பிறகு என்னமோ ஒரு குழப்பம் !

வை.கோபாலகிருஷ்ணன் said...

Voted 4 to 5 in INDLI

எதையும் தொலைக்கக்கூடாது. அப்படியே தொலைத்தாலும் அதைத் தேடக்கூடாது. அப்படியே தேடினாலும் அழுக்கு மூட்டை எதையும் அவிழ்க்கக்கூடாது. ஒருவேளை அவிழ்த்தால்
நாய் படாத பாடு படவேண்டும். ஜாக்கிரதை.





[பேண்ட் ஜட்டி போன்ற எதையும் தயவுசெய்து அவிழ்க்காதீர்கள் என்ற நல்லதொரு போதனை தருவதாக உள்ளது உங்களின் இந்தக்கவிதை.]

Mahan.Thamesh said...

அண்ணே எதையும் தொலைத்து விட்டு தேடும் போது நாய் படா படு படவேணும் .
நன்று

Yaathoramani.blogspot.com said...

அழுக்கு மூட்டை
அனைவரிடமும் இருக்கத்தான் இருக்கிறது
நம்மை அறியாது அவ்வப்போது
அவிழ்ந்தும் நெடி பரப்பியும்
அவதியுறச் செய்துதான் போகிறது
ஆனாலும் நிகழ்காலக் காற்றின் சுகத்தை கூட
சில சமயம்இதனால்தான்
உணர்ந்துகொள்ளவும் முடிகிறது
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

G.M Balasubramaniam said...

திரு. சரவணன், இந்த கவிதையைப் படிக்கும்போது, ஒரு மூன்று ,நான்கு வயது குழந்தையின் எண்ண ஓட்டங்கள் நினைவுக்கு வருகிறது. புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

சிவகுமாரன் said...

அழுக்கு சேர விடக் கூடாது. கட்டி மூலையில் போடவும் கூடாது. இல்லன்னா நாய் படாத பாடு தான்.
சரியா சொன்னீங்க .

K.s.s.Rajh said...

அருமையான வரிகள் அழகான கவிதை நண்பரே.

Unknown said...

அற்புதம் அண்ணா

cheena (சீனா) said...

அன்பின் சரவண , மறந்த பலவற்றை நினைவுறுத்தும் அழுக்கு மூட்டைகள் வீட்டில் நிறைய இருக்கும். அது வேறு யார் கையிலும் கிடைக்காமல் நம் கையிலேயே கிடைப்பது நல்லது. ம்ம்ம்ம்ம் கவிதை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment