Wednesday, June 15, 2011

சொல்ல வந்ததும் சொல்லாமல் சென்றதும்


    என் கணினியின் முன்னால் என் வாசகனுக்கான கட்டுரையை எழுதும் இந்த தருணத்தில் , சாருவின் எழுத்துக்களை திருடி ,அவனும் தன் கட்டுரையில் நான் எழுத முயற்சிக்கும் வேலையில் தமிழகத்தில் எதாவது ஒரு மூலையில்  இரவில் ஒருவன் அடுத்தவன் மனைவியை புணரலாம் எனவும், இந்த இரவில் எவனாவது ஒருவன் செல்போனில் ஒருவளுடன் பேசிக் கொண்டும் , அதே நேரத்தில் மறு செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டு இருவரையும் காதல் என்ற பெயரில் ஓட்டிக் கொண்டிருக்கலாம், தாம் தான் சிறந்த இலக்கிய விமர்சகர் என்றும் , உனக்கு இன்னும் இலக்கியம் புலப்பட வில்லை, நீ வாசிப்பை அதிகப்படுத்து என எவனாவது ஒருவன் மற்றவனை மட்டம் தட்டிக் கொண்டிருக்கலாம், எஸ். ராவின் தாகூர் விருதை பெருமையுடன் விவாதித்துக் கொண்டிருக்கலாம், அடுத்த வாரம் வந்து விடுவார் எனவும் தான் பிளாக்கில் படித்ததை சொல்லிக் கொண்டிருக்கலாம், என பட்டியலிட்டுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில்,நானும் அவனைப் போலவே, இன்று மதுரை பதிவர் சந்திப்பில் சீனா அய்யாவின் வீட்டில் டக்ளஸ், நேசமித்திரன் சந்திப்பின் சுவரசியத்தை பட்டியலிட  முயற்சிக்கும் இக்கணப்பொழுதில்  , என் மனைவி என்னை அழைத்து , வாட் இஸ் மேத்த மேடிக்ஸ்? என்று வினவி, என் கணக்கை தப்புக் கணக்காக்கி, என் எழுத்தை பாதியில் நிறுத்தப் பார்க்கும் முயற்சியில் , mathematica என்பது ஆக்ஸ்போர்டு பிரஸ் வெளியீடான ரிச்சர்டு கொரண்டு மற்றும் ஹெர்பர்ட் ராபின் எழுதிய புத்தகம் என்று பதிலளிக்கையில், அப்பா ஒரு மக்கும்மா , அவருட்டு நீ கேட்கிறதுக்கு புக்ஸ்ச ரெபர் பண்ணிடலாம் என்று என்னை முட்டாளாக்கி , உங்களிடமே மீண்டும் என்னை சிக்க வைத்து, தன் அம்மாவை அழைத்துச் செல்லும் என் செல்ல மகள் லீலாவை பார்த்து சிரிக்கும் சிரிப்பில், பதிவுலகில் அதிக வடை விற்பனை செய்யும் தமிழ்வாசியின் நினைவு என்னை மீண்டும் இன்றைய பதிவர் சந்திப்பிற்கு அழைத்து வர, உங்களுக்கு கா. பா வின் நெடும்குருதி பற்றிய கட்டுரை எஸ். ராவின் வலைத்தளத்தில் வந்துள்ளதை , அவரே சுயவிளம்பரம் செய்த செய்தியை சொல்லும் முன்னே, டக்ளஸ் பஸ்ஸில் சிக்ஸர் அடித்துக் கொண்டிருக்கும்  கதையை பற்றி நேசன் ரசித்து கமண்டு அடித்த பதிவர் சந்திப்பின் காமடியை பற்றி எழுத எத்தனிக்க முயற்சி செய்யும் போது  என் சொல் போன் சிணுங்கை மீண்டும் , என் சிந்தனை ஓட்டத்திற்கு ஒரு தடையை ஏற்படுத்த, மொட்டை மாடியில் எடுத்துக் கொண்டு ஓடி ஹாலோ யார் பேசுவது? என்று முடிக்கும் முன்னே , எதிர்முனையில் , சார் , நாளைக்கு பாடப்புத்தகம் கொடுத்து விடுவீங்களா? என்று கேட்க, அதான் கோர்ட்டு …என நான் முடிக்கும் முன்னே, இல்லை,டீச்சர் நோட்டு வாங்கி வர சொல்லியிருக்காங்க அதான் என்று என் வாயை அடைக்க, நான் பேசுவது அறியாமல் முழித்து , நாளைக்கு நேரில வாங்க என முடித்து , என் வாசகர்களுக்கான தரமான கட்டுரையை தயாரிக்கலாம் என நினைத்து , மீண்டும் கணினி முன் அமர  எத்தனிக்கையில் , மொட்டைமாடியின் காற்று பலமாக என் தேகத்தில் பட்டு, என்னை வசீகரிக்க , தேகம் என்றவுடன் சாருவின் ஞாபகம் வந்து , இன்றைய பதிவுலகில் சாருவின் ராசலீலா பற்றி பாலா கா.பாவிடம் ஏதோ சொல்ல, ஸ்ரீதர் மட்டுமே அதை படித்து நல்ல படியாக சொல்லியுள்ளாரென நெகட்டிவ் கமண்டு அடித்து , என்னை உசுப்பேற்ற(சாருவின் தீவிர ரசிகன் என்பதால்) , நான் வாயை திறக்கும் முன்னே கவிஞர் நேசமித்திரன் அவரின் உழைப்பு மிகவும் கடினமானது அதை பற்றி நினைத்து பாருங்கள் எனும் போது அனைவரும் தலையாட்டிய அக்காட்சி என் கண்முன் வந்து போன போது , என் மகள் நினைவு வந்து , குகூள் ஆண்டவரிடம் கணிதம் என்றால் என்ன என தேடி நாம் புத்திசாலி என நிருபிக்க நினைத்து படி இறங்கையில், டாடி ,நாங்க் புத்கத்தை பார்த்து விடையை கண்டு பிடிச்சுட்டோம்மாதலால் , உருப்படியா எதாவது நல்ல விசயமா டைப் செய் என கட்டளையிட்டவளைப் பார்த்து ரசித்துக் கொண்டே,பாலாவின் டிவிட் பற்றி கா.பா அடித்த கமண்டு , அவளின் சிரிபொலியில் என்னை சீண்டிய போது, ஜெர்ரி சமச்சீர் கல்வி பற்றி புல்லட் மணியிடம் விளக்கிய போது அவர்கண்ணில் தெறித்து கிளம்பிய கோபம் இன்றைய அரசியல் வாதிகளின் அவசரகதியால் முந்தைய , பிந்தைய அரசுகளின் அரசியல் லாபத்தினை முன்வைத்து விவாதித்த அந்த நொடி, ஜெர்ரி ஒரு தலைமையாசிரியர் மட்டுமின்றி தலையாய ஆசிரியர் என்பதை நினைவூட்டினாலும், அவரை நினைத்தவுடன் மதுரை புத்தக திருவிழாவிற்கு வந்த சாரு, அகநாழிகை வாசு, மணி ஜீஆகியோருக்கு மதிய உணவு வாங்க சென்ற போது ஹோட்டலில் எழுத்தாளர்களுக்கு சாப்பாடு போகுதுங்க ,  நல்ல காய்கறி வைங்க அதுவும் அதிகமாக வைங்க என்ற சம்பவம் தான் அனைவர் மனதிலும் நினைவில் வரும் என்பதாலும் அதனை நினைவு படுத்தும் போதே, என் வீட்டில் கிடந்த கல்குதிரை கோணங்கி அண்ணனை நினைவு படுத்த , கா. பா பதிவர்களுக்கு கல்குதிரை வாங்கி படிக்க வலியுறுத்தியது நினைவு வர , கல்குதிரையின் முன் அட்டை ஓவியம் என்னை கவர்ந்து இழுக்க, நாகர்கோவிலில் லெட்சுமி மணிவண்ணன் நடத்திய நிகழ்வில் தேவேந்திர பூபதி அவர்கள் , கோணங்கியுடன் காலாய்த்த அரசியல் என் எண்ண அலைகளை வட்டமிட, என்னை என் மனைவி வட்டமிட்டு , அதிக நேரமாயிற்று தூங்க வாருங்கள் என உறும, நானும் இது வரை மதுரை பதிவர் சந்திப்பு குறித்து பேச முயற்சித்து தோல்வியடைந்தாலும், என் வாசகர் வட்டத்தினை ஏமாற்றவில்லை என்ற நம்பிக்கையுடன் முற்றுப்புள்ளியிட்டு , கணினியை தூங்க செய்து , நானும் உறங்க செல்லும் முன் மறக்காம , படித்து கருத்து சொல்ல கேட்டுக்கிறேன்….! 


    

12 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

thalaivare..... samosaa, boli saappittom. vadai illai

தமிழ்வாசி பிரகாஷ் said...

pathivar santhippai imbuttu azhagaa ezhuthiyirukkinga. really super.

cheena (சீனா) said...

அன்பின் சரவணன் - அருமை அருமை - நடநதவற்றை உள்வாங்கி, வீட்டிற்குச் சென்ற பின்னர் - அத்தனையும் கை விரல்களீல் கொண்டு வந்து ( நெருங்கிய உறவுகளின் தொந்தரவுக்கு நடுவிலும் ) - அழகான இடுகையாகப் போட்டது நன்ற். மிக மிக இரசித்தேன் சரவணன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

தருமி said...

ஒற்றை வரியில் அனைத்தும் சொன்னதற்கு ...

நன்றி சொல்லணுமோ..! யோசிச்சிக்கிறேன் ...

சக்தி கல்வி மையம் said...

சீனா ஐய்யா உங்களை இன்று எனக்கு அறிமுகப் படுத்தினார்.. மிக அழகான தளத்தை அறிமுகப்படுத்திய அவருக்கு நன்றிகள். உங்களுக்கு வாழ்த்துக்கள்..
இனி தொடர்ந்து வருவேன்..

Balakumar Vijayaraman said...

ஹ்ம்ம், இலக்கியவாதினா இப்படித்தான் கேப் விடாம பேசனும் போல.

வை.கோபாலகிருஷ்ணன் said...

voted 5 to 6

முற்றுப்புள்ளியிடாத மிகப்பெரிய வாக்கியத்தை, மூச்சுவிடாமல் படித்து முடித்ததும் ஒரேயடியாக மூச்சு வாங்குகிறது.

// அப்பா ஒரு மக்கும்மா , அவருட்டு நீ கேட்கிறதுக்கு புக்ஸ்ச ரெபர் பண்ணிடலாம் என்று என்னை முட்டாளாக்கி ,//

மிகவும் யதார்த்தமான நல்ல நகைச்சுவை. மிகவும் ரசித்தேன்.

ADMIN said...

யதார்த்தமான எண்ண ஓட்டங்களை அப்படியே பதிவாக்கியமைக்கு மிக்க நன்றி, வாழ்த்துக்கள்..!!

தனிமரம் said...

நடப்பு நிகழ்வுகளை நச்சென்று சொல்லிச் செல்லும் உங்கள் நடை பிடித்திருக்கிறது.

G.M Balasubramaniam said...

நான் என்ன சொல்ல சரவணன்....நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். சீனா ஐயாவிடம் என் பதிவை பார்க்கச் சொல்லுங்களேன் .நன்றி.

உலக சினிமா ரசிகன் said...

ஆரண்யகாண்டம்-படமா எடுக்கிறானுங்க.....மயிறானுங்க என்ற தலைப்பில் நானும் எனது கருத்தை சொல்லி உள்ளேன்.
மேலும் விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள் நண்பர்களே!

தூயவனின் அடிமை said...

சரவணன் ஒரு கலக்கு கலக்கி இருகிறிர்கள் வாழ்த்துக்கள்.

Post a Comment