Sunday, June 12, 2011

நழுவிய பூ


தலையிலிருந்து நழுவி
சாலையில் விழுந்திருக்கும் பூ
யாருடையதோ...?
அது
வண்டியின் வேகத்தில்
காற்றின் எதிர்ப்பில்
தலையிலிருந்து நழுவியிருக்கலாம்
சரியாக வைக்கப்படாததால்...
கவனக் குறைவால் ...
தலைமுடி அடர்த்திக் குறைவால்...
காதலின் நிராகரிப்பாக இருக்கலாம்
கணவனிடம் எதிர்ப்பைக் காட்ட
வேண்டுமென்றே நழுவ விட்டிருக்கலாம்
யோசித்துக் கொண்டிருக்கும் போதே
பூவை நசுக்கிச் செல்கிறது வண்டி...
நழுவ விட்ட மனமும் இப்படித் தான்
நசுங்கியிருக்குமோ?

11 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பூவை நசுக்கிச் செல்கிறது வண்டி...
நழுவ விட்ட மனமும் இப்படித் தான்
நசுங்கியிருக்குமோ?//

இருக்கலாம்!

Voted in Indli

தமிழ்வாசி பிரகாஷ் said...

வண்டியின் வேகத்தில்
காற்றின் எதிர்ப்பில்
தலையிலிருந்து நழுவியிருக்கலாம்
சரியாக வைக்கப்படாததால்...
கவனக் குறைவால் ...
தலைமுடி அடர்த்திக் குறைவால்...
காதலின் நிராகரிப்பாக இருக்கலாம்
கணவனிடம் எதிர்ப்பைக் காட்ட
வேண்டுமென்றே நழுவ விட்டிருக்கலாம்>>>>

தலைவரே... முடியல...

ம.தி.சுதா said...

ஃஃஃஃகணவனிடம் எதிர்ப்பைக் காட்ட
வேண்டுமென்றே நழுவ விட்டிருக்கலாம்ஃஃஃஃ

இல்லறத்தாளுக்கே இழைக்கப்பட்ட வ(லி)ரியோ..

அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With video

Anonymous said...

பூவின் மீது என்னொரு பூ என்ற பொறாமையில் வீழ்ந்திருக்கலாம்...) கவிதை அழகு அண்ணா ...

ADMIN said...

எத்தனையோ இப்படி நழுவ விட்ட பூக்களைப் வாகனங்கள் நசுக்கும்போது பார்த்திருக்கிறேன்.

மறுபடியும் இன்னொருமுறை அவ்வாறு நேர்கையில் தங்களின் கவிதைதான் எமக்கு ஞாபகம் வரும்..

வாழ்த்துக்கள் ஐயா..!

ஹேமா said...

அருமையான எண்ணம்.பூக்களின் வலி வண்டிக்குத் தெரியாது !

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.

Mahan.Thamesh said...

நன்றாக உள்ளது கவிதை

cheena (சீனா) said...

அன்பின் சரவணன்

கவிதை நன்று. இப்படித்தான் நழுவ விட்ட மனமும் நசுக்கப்பட்டிருக்கும். உண்மை

நல்வாழ்த்துகள் சரவணன் - நட்புடன் சீனா

ரிஷபன் said...

நழுவ விட்ட பூ அப்படியே குடியேறி விட்டது இதயத்தில் வலிமையாய்

Ashwin-WIN said...

அருமையான கவிதை.. வித்தியாசமான சிந்தனை.. ரசித்தேன் சரவணன்,

Post a Comment