Monday, June 6, 2011

பெற்ற மனம்

பள்ளி சேர்த்த நாள்முதலே
கேட்டதை வாங்கி கொடுக்கிறேன்
கிழித்து பாழாக்கினாலும்
புது நோட்டு தந்து மகிழ்ந்தேன்
பாட்டியிடம் கதைக் கேட்டு
பரிசு பெற்றதைப் பலரிடம்
காட்டி மகிழ்ந்தேன்
இசை பள்ளியில் சேர்ந்து
பாடிய முதல் பாட்டு
பதிந்து வைத்து இன்றும்
கேட்டு மிகிழ்கிறேன்
கபடி விளையாட
கால் சட்டை எடுத்து கொடுத்து
கால் கடுக்க பார்த்து மகிழ்ந்தேன்
விளையாட்டாய் நாள் கடக்க
இப்போது
வளர்ந்து விட்டான்
தற்காப்பு கலை பயில
தானாக சென்றான்
இன்று
ஆண்டு விழாவாம்
சென்றேன்....
ஓடு உடைத்தான்
ஒவ்வொரு முறை
ஓடு உடையும் போதும்
என் மனமும் உடைந்தது
கை என்னவாகி விடுமோவென்று.....!


7 comments:

ஹேமா said...

தந்தை தந்த கவிதை.மனம் கனத்தாலும் மகனின் உயர்வு கண்டு பெருமைப்படுகிறது !

வை.கோபாலகிருஷ்ணன் said...

Voted. 2 to 3 in Indli

தந்தையின் பாசத்தையும் தவிப்பையும் உணர்த்தும் அருமையான கவிதை. பாராட்டுக்கள்.

Please visit

"யாதும் ஊரே! யாவரும் கேளிர்!!”

http://gopu1949.blogspot.com/2011/06/1-of-3.html

http://gopu1949.blogspot.com/2011/06/2-of-3.html

http://gopu1949.blogspot.com/2011/06/3-of-3.html

அன்புடன் vgk

வை.கோபாலகிருஷ்ணன் said...

பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு என்பார்கள்.

இங்கு பிள்ளை உடைபபதோ கல்லு (செங்கல்லு). பெற்ற மனம் பதறுகிறது.

வாழ்த்துக்கள்.

முனைவர் இரா.குணசீலன் said...

தலைப்பின் தரத்தைக் கூட்டும் கவிதை.

அ ழ கு ! ! !

arul said...

arumai

Admin said...

தங்களின் இந்த கவிதையினை வலைச்சரத்தில் பரிந்துரை செய்துள்ளேன்.

http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_08.html

aalunga said...

பெற்றோரின் வலியை அழகாக எடுத்து கூறுகிறது கவிதை!

Post a Comment