நீண்டு வளர்ந்து
தொங்கும் காது
அனுபவங்களை
சுருக்கமாக
கொண்ட முகம்
நிற்க மறுக்கும் தலை
நடுங்கிய படி
வெத்திலை
இடிக்கும் கரங்கள்
சிவந்து
தடித்த நாக்கு
பற்களற்ற வாயுடனே
எங்கள் வீட்டுக் கிழவி
இடித்து இடித்து
எங்கள் நகரத்தின்
கதைகளை
வாயில் குதப்பி
துப்புகிறாள்..!
11 comments:
:) nice
நல்ல கவிதை....
எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு!
சிறப்பு சிறப்பு
இப்பல்லாம் கவிதைகள் அழகாக வருகிறது உங்களுக்கு !
எல்லா வீட்டு பாட்டியும்தான்.நன்று.
நல்ல கவிதை...
இருந்த இடத்தில் இருந்தே நகரத்தின் கதைகள் கிழவிக்குத் தெரிகிறதென்றால், பலே கிழவிதான்.
நிற்க மறுக்கும் தலைநடுங்கிய படிவெத்திலை இடிக்கும் கரங்கள்
முதுமையின் கரங்களின் தழுவல். இதை நோக்கித் தானே நாம் போகிறோம்.நடுங்கிய படி...நிலையில்ல வாழ்வு.......நாம் மனதில் கொள்ள வேண்டியது....
அன்பின் சரவணன் - நம் கிராமப்புரங்களில் இன்றும் இருக்கும் நமது பாட்டிகள் ( கிழவிகள் என அன்புடன் அழைக்கப்படும் ) - அனுபவங்களைக் கதையாகச் சொல்லும் விதமே தனி தான். நல்லதொரு கவிதை - நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ரொம்ப நல்லா இருக்குங்க..
நல்ல கவிதைசரவணன்....
Post a Comment