நம் மனங்கள்
புல்லி இதழாய்
பிறர் மீதான கருத்துக்கள்
அல்லி இதழாய்
சூரியனின் கோடை வெப்பம்
கார்மேகமாகத் திரண்டது
மெல்லிய உன் இதழ் புன்னகையில்
உறவுகள் வசப்படும்
சூழக அறையில்
தன் மகரந்த சேர்க்கையில்
இடியுடன் கூடிய மழை....
ஈரம் பட்ட பூமியின்
சருகுகளுக்கு மத்தியில்
புதைந்த விதை
வேர் விடத் தொடங்கியது...
நீ தந்த முத்தங்கள்
நான் தந்த முத்தங்கள்
காமமின்றி பகிரப்படுகிறது
மெண்டலின் விதிப்படி
என் முகச் சாயலும்
உன் புன்னகையையும் ....
இப்படித்தான் எல்லாரும்
பிறக்கிறார்கள்...!
காமம் அற்ற இரவுகள்
நட்சத்திரங்கலற்ற வானமாய்
பொர்ணமி நிலவாய்
உறங்குகிறது குழந்தை
நமக்கு நடுவில்..!
மாமாங்கமாய் பிரிந்த உறவுகள்
கூடு நோக்கிய பறவைகளாய்
ஆகாயத்தில் நகரும் மேகங்களாய்
வாழ்க்கை ..!
3 comments:
அருமையான கவிதை.
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள் திரு சரவணன்.
மிக ரசித்தேன் ,,,
சிறப்பான கவி வழங்கிய உங்களுக்கு நன்றிகள்
Post a Comment