வாரங்கள் உருள்கின்றன.. கனவுகள் கரைகின்றன...விடியல் மட்டும் தொடர்கிறது .
நண்பர்கள் சந்திப்பு மட்டும் என்றும் குறைவதில்லை .அதில் குறையுமில்லை . சமீபகாலமாக வாரக் கடைசி நாட்கள் இலக்கிய அமர்வாக அமைந்த காரணத்தால் கட்டுரைகளை மறந்து , கவிதை எழுதும் முயற்ச்சியில் உள்ளேன். கவிதை என்பது நம் அனுபவத்தில் இருந்து வரும் ஒரு வித வெளிப்பாடகவே அமைகிறது. நம் நிலம் தந்த விசயமாகவே படுகிறது. என் நண்பர் ஸ்ரீ யின் தொடர்ந்த கவனிப்பும் , அன்பும் , திருத்தலும் ,கூடிய விரைவில் நீ ஒரு இலக்கிய வாதியாக வருவாய் என்ற உற்சாகப் பேச்சும், பல கவிதை புத்தகங்களை தந்து படிக்க உதவிய விதமும் என் இலக்கை நோக்கி பயணிக்க வைத்தது .
13 -03 -2011 காலை பத்து மணிக்கு தாகம் தயவில் அன்றைய நாள் முழுவதும் இலக்கிய விருந்தாகவே அமைந்தது. தெரிந்த, தெரியாத, பழகிய, பழகாத பல நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பும் , புதிய நண்பர்களின் அறிமுகங்களையும் உருவாக்கி தந்தது தாகம். அதற்காக செந்திலுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அன்று மூட்டா அரங்கம் நிறைந்து விட்டது. செல்மா நல்லதொரு நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகவே தான் அவர் செல்மா பிரியதர்ஷன் -னோ .யவனிகா ஸ்ரீ ராம் தலைமை ஏற்க சமயவேல் அவர்களின் ”மின்னிப் புற்களும் முதுக்கம் பழங்களும்” கவிதை தொகுப்புக்கு தலைவரே விமர்சனம் வைத்தார். யவனிகா கூறும் போது தற்கால கவியர்களுக்கு ஒரு போட்டியாக திகழ்கிறார் . நகரத்தின் மறுபக்கத்தை பிரதிபலிக்கிறது என்றார்.
அடுத்ததாக சக்தி ஜோதி எழுதிய "எனக்கான ஆகாயம்" என்ற கவிதை தொகுப்புக்கு சுகுமாரன் அய்யா அவர்கள் விமர்சனம் வைத்தார்கள். அருமையாகவும் , எதார்த்தமாகவும், நகைச்சுவையாகவும் இருந்தது. சக்தி ஜோதி கவிதைகள் காதலை முன்னிலை படுத்துகின்றன. அவர் ஆண்களுக்கான கவிதைகளை தந்துள்ளார் என்பது போன்ற நிறையும் குறையும் எடுத்துரைக்கப் பட்டன.
லீனா அவர்கள் சக்தி ஜோதியிடம் அவரின் கவிதைகளின் பாதுகாப்பு தன்மையை பற்றிக் கேட்டார். அதற்க்கு லீனா என்பதால் அப்படி ஒரு பதிலை தந்துள்ளார் என்றே தெரிகிறது. உடல் உறுப்புகளை நான் மையாப்படுத்தி எழுதுவதில்லை என்று கேள்வியின் தன்மை புரியாமல் பதிலளித்து ஒரு எதார்த்த கவிஞராக இருந்தார். மேலும் அவர் நான் நேசிக்கும் ஆண் பற்றிய காதலை எழுதுகிறேன் , நான் காமத்தையும் எழுதியிருக்கிறேன் என்றும், பைபிளில் ஒரு கதையும் சொல்லி பதிலளித்தார்.
ஹவியின் "இசைக் குமிழி" க்கு ந.ஐய பாஸ்கரன் விமர்சனம் வைத்தார். அவர் "ஆத்மா நாமின் கச்சிதம், பிரமிளின் தீவிரம் , நகுலனின் விடுபடல் போன்றவையே இனியான ஆட்ட முறைக்கான தற்காலிக விதிகளாக இருக்கக் கூடும் என்றும் , இம் மூவரின் வழியிலேயே நவீன கவிதா உலகம் வழிந்து கொண்டிருக்கிறது என்றும் ஹவி அபிப்பிராயப்படுகிறார். "என்றார்.
மதியம் அருமையான சிற்றுண்டி வந்த அனைவருக்கும் வழங்கப்பட்டது. பின்பு மீண்டும் கவிதை மழை கொட்ட ஆரம்பித்தது.
எஸ் . செந்தில் குமாரின் "முன் சென்ற காலத்தின் சுவை " பற்றி ஸ்கூட்டிக் கவிஞன் ’இசை’ விமர்சனம் வைத்தார்கள்.
தேவேந்திர பூபதியின் "முடிவற்ற நண்பகல் " கரிகாலனால் விமர்சிக்கப்பட்டது. தன் கவிதையில் காதல் கவிதைகள் தான் நிரம்பியுள்ளன என்ற கூற்றை தேவேந்திர பூபதி மறுத்தார் , தன் தந்தை இறப்பில் எழுதிய கவிதைகள் ஏராளமாக உள்ளன என்று கூறினார் .
லிபி ஆரண்யா வின் (அட நம்ம மாகால் வாத்தி சரவணன் ) "தப்புகிறவன் குறித்த பாடல் " என்ற கவிதை தொகுப்புக்கு லீனா மணிமேகலை விமர்சனம் மிகவும் அருமையாக இருந்தது. நகுலனின் கவிதையை லிபி பகடி செய்துள்ள கவிதையை வாசித்து காட்டினார். (ஆதிமுலம் குறித்த கவிதையில் உள் மூலம் , வெளி மூலம் மூலம் அவர் புரிந்த பகடி)லீனா அனைவரும் பாராட்டும் விதமாக விமர்சனம் வைத்தார்.
இவ்வளவுக்கும் மத்தியில் என் நண்பர் நேசனுடன் ஒரு பெரிய கவிதை பாடம் நடந்தது...அதனை பற்றி விரிவாக அடுத்த இடுகையில்..செந்தில் நன்றி கூறும் போது அழைப்பிதழ் அச்சடித்துக் கொடுத்த விநாயகம் இறந்த நிகழ்வை கூற தாகம் சோகமாக முடிந்தது. உண்மையில் தாகம் கவிதை மீது தீரா தாகத்தை தந்தது என்பது தான் உண்மை. மீண்டும் நன்றி செந்தில்...
5 comments:
உங்களுக்கு நல்ல வாய்ப்பு சரவணன்.வாழ்த்துக்கள்
நண்பா ! நான் மதுரையில் இருந்த போது இப்படி ஒரு வாய்ப்பிற்காக ஏங்கிச் சலித்துப் போனது. நீங்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர் தான். மூட்டா அரங்கில் பொதுவாக ‘யதார்த்தா’வின் உலக சினிமாக்கள் திரையிடப் பட்ட காலங்களில் நான் அங்கு வந்தது...
தோழா நானும் கவிதைப் பிரியன் தான். பொழுதிருந்தால் எனது வலைப்பூவிற்கு வாருங்கள். முழுவதும் கவிதைகள் தாம்...
அன்பு சரவணன், கவிதை எழுதுவது பற்றிநான் உங்களுக்கு கூற விரும்புவது இதுதான். உணார்வதை எழுதுங்கள் உண்மையை எழுதுங்கள் வார்த்தை ஜாலங்களுக்காக பொருளை சிதைக்காதீர்கள். எல்லோருக்கும் புரியும்படியாக எளிதாக எழுதுங்கள் ABSTRACT THINKING இருக்கலாம். எழுத்து இருக்கக்கூடாது. நல்ல கவிதைகளை எதிர் நோக்குகிறேன். வாழ்த்துக்கள்.
அண்ணே, நல்லா இருக்கீங்களா ?
வாழ்த்துகள் சரவணன்.....
Post a Comment